கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இவ்வருடம்
ஆகஸ்ட் மாதம் 05, 06 ஆம் திகதிகளில் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ள
சர்வதேச சிறப்பு மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து இலங்கை
தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.
சிறிதரன் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேராசிரியர் ரி. வேல்நம்பி
ஆகியோருடன்; இலங்கை சென்றுள்ள இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும்,
ஜேர்மன் நாட்டுக் கிளையின் தலைவருமான இ. இராஜசூரியர் அவர்கள்
யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (19.02.2017) சந்தித்துரையாடினார்.
இதன்போது மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
0 Kommentare:
Kommentar veröffentlichen