விஞ்ஞானிகள்;கவிதை கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி

மழை
எப்படி
பெய்கின்றது
என்பதனை
ஔவைப் பாட்டி
தன் பாடலில்
செப்பியதை
அறிந்தவர் நாம்;!

மூத்த
மொழி
தமிழ் என்பதை
சத்தங்களோடு
ஒன்றித்து
நாமம்
சூட்டியவர்
எம் மூதாதையர்;!

அருவியின்
ஓசை கேட்டு
ஜலம் என்றனர்
காகத்தின்
கரைதல் கேட்டு
காகம் என்றனர்;
முன்னுதாரணங்கள்
முடக்கப் பட்ட
விந்தை அறியிலோம்;!

கால் நடைகளை
நம்பி பயிர்
செய்த நம்மவர்
மின்சாரம்
தோன்றிட முன்
சூத்திரக் கிணறுகளை
உருவாக்கியவர்கள்;
எமது மொழி போல்
தேடல்களும்
கண்டு பிடிப்புக்களும்
காணாமல்
போனதும் போவதும்
வேதனையே;;!
 
ஆக்கம்   கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி

0 Kommentare:

Kommentar veröffentlichen