எல்லைக் கதவுகள் மூடப்பட்டன : சட்டவிரோதமாக நுழைவோருக்கு இனி இடமில்லை

அவுஸ்திரேலியாவின் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருப்பதாகவும், அகதிகளுக்கு இனி இடமில்லை என்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒபாமா ஆட்சியில் அவுஸ்திரேலியா - அமெரிக்கா இடையே அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி ஒருமுறை மட்டும் அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அவுஸ்திரேலியா - அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகளை மீள்குடியமர்த்தும் ஒப்பந்தம் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், அகதிகள் தொடர்பான கொள்கையை மீண்டும் அவுஸ்திரேலியா வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் தங்களது எல்லைகள் மூடப்பட்டே உள்ளன என்ற அறிவிப்பை மீண்டும் விடுத்துள்ளார்.

மேலும், கடந்த வாரம் சட்டவிரோதமாக கடல் வழியாக நியூசிலாந்து செல்ல முயற்சித்த எட்டு பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்வதாலேயே இவ்வாறான அகதிகள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Kommentare:

Kommentar veröffentlichen