அர­சாங்கம் பதி­ல­ளிக்­கா­விடின் போராட்ட வடிவம் மாறும்

ஐ.நா.உட­ன­டி­யாக தலை­யி­ட­வேண்டும்; கிளி.யில் போராடும் மக்கள் தெரி­விப்பு

எமது கண் முன்னே இரா­ணுவம் பிடித் துச் சென்ற எமது பிள்­ளை­களை எங்­க­ளிடம் ஒப்­ப­டைக்க நல்­லாட்சி அர­சாங்கம் என்று கூறு­கின்ற இந்த அர­சாங்கம் விரைந்து நட வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று காணா மல் ஆக்­கப்­பட்­டோ­ரது உற­வுகள் மிகுந்த ஏக்­கத்­துடன் தெரி­வித்­துள்­ளனர்
.
தமது உற­வு­களைப் பிடித்துச் சென்­று­ விட்டு தற்­போது காண­வில்லை எனக்கை வி­ரி க்கும் அரச படை­களும் அவற்­றிற்குத் துணை நின்று செயற்­படும் இலங்கை அரசும் எமது உற­வுகள் எங்கே உள்­ளார்கள்?  என்ற விப­ரத்தை வெளி­யிட வேண்டும் என்றும் அம்­மக்கள் கோரி­யுள்­ளனர்.

காண­தமல் போன தமது உற­வி­னர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தனை அறி­விக்­கு­மாறு வலி­யு­றுத்து கிளி­நொச்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ரது உற­வு­களால் தொடர் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை நடாத்தி வரு­கின்­றார்கள். ஆறா­வது தின­மாக நேற்றும் போராட்டம் தொடர்ந்­தது.

எமது கண் முன்னே எமது உற­வு­களைப் பிடித்துச் சென்ற இலங்கை இரா­ணு­வமும் இரா­ணுவத் துணைப் படை­யி­னரும் அவர்­களை எங்கே ஒழித்து வைத்­துள்­ளார்கள் என்ற விப­ரத்தை வெளி­யி­டு­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்து உதவ வேண்டும். எமது உற­வுகள் எங்கே உள்­ளார்கள் என்­ப­தனைக் கண்­ட­றிந்து வெளி­யி­டு­வ­தற்கு ஐ.நா சபை இனியும் காலம் கடத்­தாது உரிய நட­வ­டிக்­கையை விரை­வாக எடுக்க வேண்டும். எமது உற­வுகள் எங்கே அரச படை­களால் அடைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­பதை உட­ன­டி­யாக வெளி­யிட வேண்டும். அதனை விடுத்துக் காலத்தைக் கடத்­து­வார்­க­ளா­க­வி­ருந்தால் எமது போராட்ட வடி­வங்கள் எதிர்­கா­லத்தில் மாறும் அதற்­கான முழுப்­பொ­றுப்­பையும் இந்த அர­சாங்­கமும் ஐ.நா சபை­யு­மேதான் ஏற்க வேண்டும் என்று போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்கள் தெரி­வித்­துள்­ளனர்.
காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ரது போராட்­டத்தில் நேற்­றைய தினம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறீ­தரன் கலந்­து­கொண்டு அந்த மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் நியா­ய­மான போராட்­டத்­திற்குத் தாம் தொடர்ந்தும் ஆத­ர­வாக இருந்து குரல்­கொ­டுத்து வரு­வ­தாக குறிப்­பிட்டார்.

காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ரது விட­யத்தில் அரசு பாரா­மு­க­மாக இருந்து தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவதாகவும் இவ்விடயத்தில் ஐ.நா சபை தகுந்த முறையில் தலையிட்டு இம்மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்

0 Kommentare:

Kommentar veröffentlichen