வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம்; ஐ.நா தலைவர்களுக்கு மைத்திரி அறிவிப்பு

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று, ஐக்கிய நாடுகள் சபைக்கும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவ பகுதியில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றிய போதே ஸ்ரீலங்கா ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

‘வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது என்ற தகவலை, ஐ.நா பொதுச்செயலர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன்.

நாட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு வரையறைகளின்படி எந்தவொரு வழக்கிலும் வெளிநாட்டு நீதிபதிகளை எமது நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது.

0 Kommentare:

Kommentar veröffentlichen