போராட்டங்களை நடத்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நாள் தோறும் கொழும்பில் போராட்டங்களை நடத்துவதனால் அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியாது.

சில தரப்பினர் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். அவ்வாறான சதித் திட்டங்கள் வெற்றியளிக்காது.
பாதுகாப்பு தரப்பினரை போராட்டத்தில் களமிறக்கி அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சித் திட்டமொன்றும் முன்னெடுக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சாந்த முகத்தோனே – உன்
செளக்கியம் கரைந்ததாலே
தவிக்கின்றோம் தாங்கமுடியாமலே
ஈழத்தின் போர்களத்திற்கே - உன்
இழக்காத வலிமை சேர்க்கும்
இதயம் தொட்ட கானம்
இதயத்தின் இசை நின்றதாலே
இடிந்து துவழ்கின்றோமே
வீரக்குரலின் வித்தகனே - உன்
மேடைக்குரல் கேட்க
காத்திருப்போர் பலரும் உண்டே
காந்திருந்த கண்களுக்கெலாம்
காட்சி இல்லா கலங்குகின்றோமே
விடை பெறும் காலம் வந்ததேனோ
விதி உனை கூட்டி சென்றதேனோ
விழி மடல் விரிந்து விம்மியே
வழி அனுப்புகின்றோம் அண்ணனே
வீர வணக்கம் ஈழத்தின் குரலே !!!
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் இன்னல்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் அசமந்தப் போக்கே முழுமையான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக குற்றம்சுமத்தியுள்ளார்.
மக்களது பிரச்சனை குறித்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் பல தடவைகள் வலியுறுத்திய போதிலும், இது தொடர்பாக எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அங்கு நேரில் சென்று கருத்து வெளியிட்டபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த தகவல்களை முன்வைத்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, காணமால்போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக தொடர்கின்றது.
யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறும், காணாமல் போகச் செய்யப்பட்டோர் குறித்து தீர்க்கமான முடிவொன்றை வழங்குமாறும், சர்வதேச விசாரணையே வேண்டும் எனவும் வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இடம்பெறும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அங்கு நேரில் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உட்பட தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் மீண்டும் கால அவகாசம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு நிபந்தனையுடன் கூடிய கால நீடிப்பு வழக்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நிலைப்பாடு அல்ல என்று தெரிவிக்கும் சிவசக்தி ஆனந்தன், இது கூட்டமைப்பில் உள்ள அங்கத்தவர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோரது தன்னிச்சையான கருத்து என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பிந்தி அளிக்கப்படும் நீதியானது மறுக்கப்படும் நீதிக்கொப்பானது”
போர் நிறைவடைந்துவிட்டது. பாலாறும் தேனாறும் ஓடப்போவதாகவும் தங்கக்கிண்ணத்தைத் தாங்கி வந்து அள்ளி அள்ளிப் பருகக் கொடுக்கப் போவதாகவும் கூறி, தமிழ் மக்களைப் பிரிதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டிருந்த தரப்பினர்களும் இணைந்து நல்லாட்சித் தேரினை இழுக்க வடக்கயிற்றின் முன்னால் நின்று, ஓதிய ஓதல்கள் தான் எத்தனை எத்தனை? படிப்புப் பட்டங்களை விடுங்கள் பட்டறிவு என ஒன்று உள்ளதல்லவா? அது எங்கு போனதென்றுதான் தெரியவில்லை. அரசியல் தீர்வினை எட்ட முடியவில்லை. பல ஆண்டுக்கணக்கான தொடுவானம் போன்ற பிரச்சினை; அதற்குக் காலங்கள் எடுக்கும், காலக்கெடுக்கள் நீண்ட வண்ணம் போய்க் கொண்டிருக்கின்றன எனக்கூறும் அரசியல் சணக்கியர்களின் நிலைகண்டு, சரி கல்லில் நாருரிக்க முடியாது நீங்கள் அரசியல் நாடகம் போடுகின்றீர்கள் எனத் தெரியும் என விடயம் தெரிந்தவர்கள் கொடுக்குக்குள் சிரித்து விட்டுப் போகலாம். ஆனால் மிக முக்கியமாகப் பேசப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை ஏன் இன்னும் தீர்த்து வைக்கப்பட வில்லை என்பதற்கான எந்த சரியான பதிலும் மென்வலு அரசிடமில்லை. சரி போகட்டும். ஆனால் அதை நம்புவதாகக் கூறிக்காலத்தினை மிக இதமாகக் கடத்தும் தமிழ் மக்களின் காவலர்கள் எனக்கூறிக்கொள்பவர்களிடம் அதற்கான பதில் இல்லாமலே இருப்பது தான் கடைந்தெடுத்த கயமைத்தனம் என எண்ண வேண்டியுள்ளது.
தமிழினத்திற்கெதிராகக் காலாகாலமாக மேற்கொள்ளப்படுகின்ற இலங்கை அரசின் திட்டமிட்ட இனவாத நடவடிக்கைகளில்;  தமிழ் இளைஞர்கள்,யுவதிகள் என்றும் வயோதிபர்கள், குடும்ப பெண்கள் அவர்களுடன் குழந்தைகள் என அனைவருக்கும் பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தப்பட்டு, கைது செய்து தடுத்து வைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களை சித்திரவதைகளுக்கு உட்படுத்துதலும், இலங்கை மற்றும் சர்வதேச சட்ட விதிகள் என  சொல்லிக்கொள்ளும் விதிகளுக்கு அப்பாற்பட்டு, அவற்றிற்கு முரணான வகையில் அவர்களை  நீண்ட காலங்களாக தடுத்து வைத்தலும், திட்டமிட்ட இரீதியாகக் கலவரங்கள் உருவாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட கொடூரங்களும்  கடந்து வந்த காலங்களில் நிகழ்ந்து போயிருக்கின்றன.

வெலிக்கடைச் சிறைப்படுகொலைகள்,பிந்துனவல புனர்வாழ்வுப் படுகொலை போன்ற பாரிய இனப்படுகொலைகளுக்கு அப்பால், அங்கும் இங்கும் என்று பூசா, களுத்துறை, மகசின், மகர மற்றும் அனுராதபுரம் என பல இடங்களில் இலக்கு வைக்கப்பட்ட பலர் கொலை செய்யப்பட்டார்கள். அச்சம்பவங்களுக்கான சாட்சிகளோ தகுந்த விசாரணைகளோ இல்லாது குடும்பங்களிடம் உறவுகளை உடலங்களாகக் கையளிப்பதும், அச்சுறுத்தல், உயிராபத்துக்கள் என்பவற்றிற்குப் பயந்து குடும்ப உறுப்பினர்கள் மௌனமாகி விடுவதும் தொடர்ச்சியாக நடந்து வந்தன. அரசினால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள்; யுத்த காலத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாக  உலகிற்கும் இனங்காட்டப்பட்டதனால் தமிழர்களின் நியாயங்கள் ஓரங்கட்டப்பட்டன. ஏனெனில் உலக வல்லாதிக்க அரசுகளின் பாணிகளின் எச்சங்கள் தான் இவைகள். மனித உரிமைகள் சாசனங்கள் வரைபவர்களும் நாமே! அதை மீறுபவர்களும் யாமே! மீறுபவர்களைக் காப்பற்றுவதும் நாமே! என ஒத்தோடும் ஒரு சூழலில் எமக்கு எப்படி நியாயங்கள் கிடைக்கும்?
ஆனால் திட்டமிட்ட கூட்டிணைவில் நிகழ்த்தப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்னர், யுத்தம் முடிவுற்றதாகவும் ,பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதாகவும், வெற்றி விழாக்களை நடத்தி வந்த மகிந்த அரசும், நல்லாட்சி என்ற பெயரில், உலக வல்லாதிக்கங்களின் விருப்பத்திற்கமைவாக, ஆட்சிக்கட்டில் அமர்ந்துள்ள மைத்திரி-இரணில் தேனிலவு ஆட்சியிலும், தமிழ் அரசியல் கைதிகளை  இன்னும் அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் என்னவெனத்தான் புரியவில்லை.  ஏற்கனவே கைதாகி விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுதலும், கைது செய்து தடுத்து வைக்கப்படுதலும்  சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படும் சம்பவங்களும் தொடரத்தான் செய்கின்றன. அத்தோடு சிறையிலிருக்கும் கைதிகளை அவ்வப்போது, திடீர் திடீரென அழைத்துச் சென்று விசாரிப்பதும், ஏனைய கைதிகளைப் பற்றிய தரவுகளைக் காட்டித்தந்தால் விடுவிப்பதாகவும் அல்லது தண்டணையைக் குறைப்பதாகவும் ஆசை வார்த்தை காட்டுவதும் அதற்கு உடன்படாதவர்களைத் துன்புறுத்துவதும் வெளியில் வராத இரகசியங்கள்.
இதற்கு, 1979ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில், 1982ம் ஆண்டில், கொண்டு வரப்பட்ட திருத்திய 10ம் இலக்கச் சட்டப் பிரிவிலுள்ள 15A (1)ன் கீழான “கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நாட்டின் பாதுகாப்புக் கருதிப் பாதுகாப்புச் செயலாளரின் கட்டளையின் நிமித்தம் மேலதிக விசாரணைக்குக் கொண்டு செல்லலாம்” என்ற விதியினடிப்படையில், .இச்சட்டத்தினைத் தமக்குச் சாதகமாக வைத்துக் கொண்டு தெரிந்தெடுக்கப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவு (TID – 4ம் மாடி) மற்றும் பூசா சிறைச்சாலை ஆகியவற்றிற்குக் கொண்டு செல்லப்பட்டுத் தொடர் மீள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள்  மீது மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் ஏன் எதற்கு நடைபெறுகின்றன என்ற தகவல்கள் சட்டத்தரணிகளுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ தெரிய வருவதில்லை. தொடர்ந்து  தாங்கள்  சித்திரவதைகளுக்கு உட்படுவதாகப் பாதிக்கப்பட்ட கைதிகளால் தெரிவிக்கப்படுகின்றது.


 பௌத்த சிங்கள பேரினவாத அரசின் கொள்கை யாதெனில் இந்த அரசியல் கைதிகள் சிறைக்குள் சாவடைய வேண்டும். அல்லது வயது முதிர்ந்து நோய் வாய்ப்பட்டு நடைப்பிணங்களாய் வெளி வர வேண்டும் என்பதே.அதற்காகப் பல குயுக்திகளை மேற்கொள்ளுகிறார்கள். சமீபத்தில் ,தொடர்ந்து ஏழு ஆண்டுகளாகச் சிறையிருந்த ஒரு கைதியின் வழக்குகள் முடிவிற்கு வரும் தருவாயில், சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஒரு கைதியின் வழக்குடன் இவரைத் தொடர்புபடுத்தி விட்டார்கள். இப்போது ஏனைய வழக்குகளில் விடுதலையான குறிப்பிட்ட நபர், அந்தப் புதுக் குற்றச்சாட்டிற்காக ஒத்திவைக்கப்பட்ட தண்டணையைப் பெற்று விடுதலையாகி உள்ளார். ஆனால் 2012 ம் ஆண்டு வவுனியா சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு மிகவும் பரபரப்பான சம்பவமாகப் பேசப்பட்டுத் தகுந்த ஆதாரங்களும் முன் வைக்கப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டும் அந்தக் கைதியின், கொலைக்கான நியாயம் கிடைக்கவில்லை. ஆனால் அவரின் வழக்கினை முன்னிறுத்தி இன்னொருவர் மீது வழக்குத் தொடரவும் தண்டணை வழங்கும் நீதித் துறையின் நீதி வழங்கலை  என்னவென்றுரைப்பது?  தவிர, கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பெரும்பாலனவர்கள் மீதான வழக்குகளைத் தொடுத்து, வழக்குகளை நகர்த்துமளவிற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்குப் போதிய சான்றுகள் இல்லாமல் இருக்கின்றன. பலர் ஏழு ஆண்டுகள் முதல் பதினைந்து ஆண்டுகள் வரையிலும்  அவர்களின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் இருக்கும் சோகங்களைச் சந்தித்தவர்களாக இருக்கின்றனர்.

விடுதலை செய்து விட்டு மீள் கைது செய்யப்பட்ட ஒரு அரசியல் கைதியின் விடயத்தை இங்கு எடுகோளாகத் தொட்டுக் காட்ட வேண்டியுள்ளது. குறிப்பிட்ட அந்த நபர், முன்னர் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூசாவிலும் ஓராண்டு மகசின் சிறையிலும் வைக்கப்பட்டிருந்தார். வழக்குத் தொடுக்கச் சான்றுகள் இல்லை என்ற அடிப்படையில் ஓராண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையானார். விடுதலையான நான்காம் மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் பூசாவிலும் தற்போது ஓராண்டு மகசினிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது எந்த வகையில் நியாயம்?  முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க மீதான தாக்குதலில் ஈடுபட்டவர் எனச் சந்தேகிக்கப்பட்ட பெண், ஒரு கோயில் மண்டபத்தில் தங்கியிருந்ததாகக் கூறி, அக்கோயிலில் பணிசெய்த குருக்களையும் அவர் மனைவியையும் கைது செய்து, சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள். கேட்பவர்கள் காதுகளைக் கருகச்செய்யும் சித்திரவதைகள். அச்சித்திரவதைகள் சட்ட வைத்திய  நிபுணராலும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்மணி குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரின் கணவருக்கு முப்பது ஆண்டுகால தண்டணை வழங்கப்பட்டுள்ளது. அவரின் வழக்கு தற்போது மேல் முறையீட்டு நீதிமன்றில் இருக்கின்றது.
அந்தப் பெண்மணி அனுபவித்த கொடுமைகளுக்கு யார் பொறுப்பு? அப்படியான வழக்குகளை நோக்கும் போது,  தமிழ் இனத்தின் மீதான வெறியும், வெறுமனே அரசியல் நோக்கங்களும், பழி வாங்கும் எண்ணங்களுமே விஞ்சி விரவி இருக்கின்றன என்பது புலனாகும். எனவே சட்டம் ஒர் இருட்டறை என்பார்கள் ஆனால் சிறி லங்காவின் சட்டம் என்பது, தமிழர்களுக்கு பாழ்பட்ட இருள் மண்டிய குகை என்றே கூறலாம் என்பதை மேற் கூறப்பட்ட சம்பவங்கள் கட்டியங்கூறி நிற்கின்றன.

மிகப் பாதகமான சட்ட இறுக்கங்களைக் கொண்டு, தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாது, அவர்களுக்குக் கொடுக்கும் நெருக்குவாரங்களும் தொல்லைகளும் எல்லைகள் இல்லாதது. பல்வேறு பயங்கரக் குற்றங்களைப் புரிந்து சிறைப்பட்டிருக்கும்  சிங்களக் கைதிகளைத் தூண்டி விட்டுத் தமிழ் கைதிகளைத்  துன்புறுத்துவது கொலை செய்வது, பயமுறுத்துவது போன்ற செயற்பாடுகளையும் சிறை நிருவாகம் தொடர்ந்து செய்து வருகிறது. 1983 இடம் பெற்ற வெலிக்கடை சிறைப்படுகொலைகள், 2012 அனுராதபுரத்தில் இடம்பெற்ற தாக்குதல் போன்ற கொலைகளில் சிங்களக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்து வேறு சிறைகளுக்கு மாற்றப்படும் போதும், வழக்குகளுக்காக நீதி மன்றங்களுக்கு அழைத்துச் சென்று வரும் போதும், ஆடை களைவு செய்து சோதனையிடும் வழக்கத்தினை சிறை நிருவாகம் கொண்டிருப்பதானது, அரசியல் கைதிகளின் சுய கௌரவத்தையும் தன் மானத்தையும் உரசிப்பார்த்து, அவமானப்படுத்தும் செயல்களாகும். இதற்கெதிராக தமிழ் சிறைக்கைதிகள் ஆட்சேபனை தெரிவித்துப் பட்டினிப் போரட்டங்கள் நடத்திக் களைத்துப் போய்விட்டனர்.
இலங்கை அரசானது சர்வதேச பட்டயங்களில் கைச்சாத்திட்டுள்ளவாறு, தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் (ICCPR) ல் கூறப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமை, மருத்துவ சேவைகளை அணுகுவதற்கான உரிமை மற்றும் நீதியான விசாரணை கோருவதற்கான உரிமை முதலானவற்றினை மீறியே வருகின்றது. உரிய நேரத்தில் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படாமையாலும், அலட்சியங்களாலும் உள்ளேயே மாண்டு போனவர்கள் பலர். சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டு, ஆண்டுக்கணக்காகத் தடுத்து வைத்து விசாரணை செய்யத் தம்மிடம் வலுவான சான்றுகள் இல்லாத போதும், அடைத்து வைத்து, சாகடிப்பதானது சிங்களத்தின்  இனவாத கொலை வெறியினையையே பறைசாற்றி நிற்கிறது.
தவிர, அனைத்தும் முடிந்து விட்டன பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. நல்லாட்சி கோலோச்சுகிறது. தமிழர் தரப்பினரும் சேர்ந்து கும்மியடிக்கின்றனர். ஆனால் ஏன் இன்னும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த யாவரும் பயங்கரவாதிகள் என முத்திரையிடப்பட்டுள்ளார்கள் எனில், அரசுடன் சார்ந்து செயற்படுகின்ற சிலர் சுதந்திரமாகச் சுக போகமாக நடமாடுவதற்கும், அரசியலில் ஈடுபடவும் இந்நாட்டின் பொறிமுறை  சாதகமாக இருக்குமாயின்,  அப்பாவிகளான சாதாரணர்களுக்கு ஏன் இந்த மாறுபாடான நீதி? அதுவும் விடுதலைப் புலிகள் என சந்தேகப்பட்டவர்கள் மீதான குற்றங்களை உறுதிபடுத்த முடியாமல்,  குற்றங்களைத் தேடி அலைந்து புதுக்குற்றங்களைக் கண்டு பிடித்து, பொருத்தி வழக்குத் தொடுக்கும் சூழ்ச்சி வேலைகளை ஏன் அரசு செய்ய வேண்டும்?

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் தரப்பினரிடம், திடமான அரசியல் கோரிக்கைகளின்மையும், மக்களின் பிரச்சினைகளில் அழுத்தமான  அக்கறை இன்மைகளுமே காரணங்கள் என இனங்காண முடிகிறது. அப்புக்காத்தர்கள் தான் அரசியல் உரிமைகள் பெற்றுத் தருவார்கள் என்ற மக்களின் மாயை நம்பிக்கையினை, வாக்குப் பிச்சைகளாகப் பெற்று, வாழும் இவர்கள் பேரின அரசுகளையும் விஞ்சி விடுகிறர்கள்.   அதி மேதகு சுமந்திரன் பெருந்தகையின் கூற்றுப் படி, சிறைகளில் இருபது ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்ட கைதிகள் யாருமில்லை என்பதே.  இது முழு  அபத்தமா அறியமையா எனத் தெரியவில்லை. ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டவர் மற்றும் முப்பத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டவர் என மட்டக்களப்பைச்சேர்ந்த இருவர் இருபத்து நான்கு ஆண்டுகளாக சிறையிருக்கின்றனர். மத்திய வங்கி மீதான தாக்குதல் சம்பவத்தில் தண்டணைக்குட்படுத்தப்பட்வர்கள் இருக்கின்றனர். அரசியல் நலன்களுக்காக அப்பாவிகளின் கண்ணீருடன் வம்பு பேசும் அரசியல்வாதிகள் ஒரு புறம், கோயிலில் வழங்கும் இலவசப் பொங்கல், கடலை, அவல் போல் செயற்படும் தொண்டு நிறுவனங்களின் சட்ட உதவிகளின் ஏனோ தானோ என்ற மனப்பாங்கு மறுபுறும், வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை எனச் செயற்படும் பணம் பிடுங்கி அப்புக்காத்தர்கள் வேரொரு பக்கமாகப் போட்டுச், சிப்பிலியாட்டப்படும் தங்களின் எதிர்காலம் என்னவென அறியாத அன்றாடம் அனல் மேல் வாழும் வாழ்வைக் கொண்டிருக்கிருக்கும் கைதிகளின் ஏக்கங்களுக்கு எப்போது தான் முடிவுகள்?
வட-கிழக்கு, கொழும்பு, மலையகத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளில், அறுபது தண்டணைக்கைதிகளும், முப்பத்திரண்டு விசாரணைக்கைதிகளும் என மொத்தம் தொண்ணூற்று இரண்டு கைதிகள், பூசா, கொழும்பு, வெலிக்கடை, மகசின், சிலாபம், வவுனியா மற்றும் போகம்பரை என சிறை வைக்கப்பட்டுள்ளனர். சரியான தரவுகளின் அடிப்படையில் நுணுக்கமான சட்ட ஆலோசனைகளுடன் தனித்தனியான அக்கறையுடன் அணுகினல் இப்பிரச்சினை தீர்க்கப்பட முடியாததொன்றல்ல. பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் போது அரசுக்கு இழுக்கும், தமக்கு அசிங்கமும் வரக்கூடாது என ஓடோடிச்சென்று பொய் வாக்குறுதிகளைக் கொடுத்துப் போராட்டங்களை நிறுத்திவிடும் அரசியல்வாதிகளிடம், அரசியல் கைதிகளைப் பற்றிய எந்த ஒரு அடிப்படைத் தரவுகளும் ஆவணங்களுமில்லை. எழுந்தமனதாக அறிக்கைகளை விட்டுக் கொண்டும் காலங்கடத்திக்கொண்டுமிருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளில் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மாவட்டங்களில் எத்தனை அரசியல் கைதிகள் சிறை இருக்கின்றனர் என்ற விபரங்களைக் கூட அவர்கள் திரட்டி வைத்திருக்கவில்லை. மக்கள் பணியின் உயரிய அக்கறை இவ்வாறு தான் இருக்கிறது என்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
போர் ஓய்வுக்குப் பின்னர், எண்ணூற்று எண்பத்து மூன்றாக இருந்த அரசியல் கைதிகள் எந்த ஒரு அரசியல் பேச்சு வார்த்தைகளினாலும் குறைக்கப்படவில்லை. தனித்தனியான சட்ட நடவடிக்கைகள் மூலமே விடுவிக்கப்பட்டனர். புதிய ஆட்சி வந்த போது, இருநூற்று எழுபத்து மூன்றாக இருந்த கைதிகளின் எண்ணிக்கை தற்போது தொண்ணூற்று இரண்டாகக் குறைந்துள்ளது. ஆனால் முன்பை விடத் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் கிடுக்கிப்பிடிகள் அதிகரித்துள்ளன.  ஒருவருக்கு நாட்டில் பல்வேறு இடங்களில் ஒன்று தெடக்கம் ஜந்து வழக்குகள்  இருப்பதாக எடுத்துக் கொண்டால் ஏதாவது ஓரிடத்தில் வழக்கு முடிவுறுத்தலுக்கு வரும் போது ஏனைய இடங்களில், தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை மீள் வாங்கிக் கொள்ளும் இயல்பு காணப்பட்டது. ஆனால் தற்போது அப்படியல்லாது, அவ்வழக்குகளும் நடத்தப்பட்டேயாக வேண்டும் என்ற கொள்கை கடுமையாக்கப்பட்டுள்ளது எனின், இந்நல்லாட்சியின்,பொல்லாத்தனத்தின் உள்ளார்ந்த திட்டம் என்னவாக இருக்கும் என சந்தேகிக்கத் தோன்றுகிறது. இவற்றையெல்லாம் புரியாமலா தமிழ்த்தரப்பினர் அரசியல் முட்டுக்கொடுக்கின்றனர் என வியப்பாகவும் திகைப்பாகவும் இருக்கின்றது.
வெயிலில் காய்பவனுக்கே நிழலின் அருமை தெரியும். அடுத்தவனின் கட்டுப்பாட்டில் அரைமணி நேரம் இருந்து சகிக்க முடியாது தவிப்பது தான் மனித மனம். ஆனால் ஆண்டுக்கணக்காக  உறவகளைப் பிரிந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருட்டில் வாழும் அரசியல் கைதிகளின் அவல வாழ்வு இனியும் தொடரக்கூடாது. பட்டினிப் போராட்டம், மனு அளிப்பது என எத்தனை ஆண்டுகளாக அவர்கள் போராடிப் போராடி வாழ்வா சாவா என வாழ்வது? இன்னும் எவ்வளவு காலந்தான் அவர்களின் குடும்பங்கள் பசி வயிற்றுக்கு வழியில்லாது தம் வாழ்வுதனைக் கண்ணீரில் மூழ்க வைப்பது?; காலந்தாழ்த்தியளிக்கப்படும் நீதியானது நீதி மறுப்புக்கொப்பானது! இப்படிக் காலம் தாழ்த்தியதன் காரணமாகப்  பல அப்பாவிகள் மாண்டு போன அவலக்கதைகள் ஏராளம்.
எனவே .கேடுகெட்ட இழுவை அரசியல் செய்யாது உரிமை அரசியல் செய்வதற்குத் தமிழர் தரப்பினர் முன் வரவேண்டும்! வட-கிழக்கு அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல தென்னிலங்கை சார்ந்த மலையகத்தைத் தூக்கி நிறுத்துவதாகக் கூறிக்கொள்பவர்களுக்கும்  இது பொருந்தும். இத்தனை துன்பங்களுக்கும் காரணமான பயங்கரவாதத் தடைச்சட்டம் மீளெடுக்கப்பட வேண்டும். என்ற குரல் இப்போதெல்லாம் மங்கத்தொடங்கியுள்ளன. இனியும் காலங்கடத்தாது மக்கள் நலன் சார்ந்த அரசியலைச் செய்து, வாக்குப் பிச்சைக்காக வாயில் சொன்தைச் செயல்களில் காட்டுங்கள். நீங்கள் வாக்குறுதி அளித்தனால் , உங்களை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். இந்த அரசும் வழமை போல் பழைய குட்டையில் ஊறிய மட்டை தான். அவர்கள் வழிக்கு வரமாட்டாhர்கள். அவர்களை எம்மால் நெறிப்படுத்த முடியாது. என இயலாமையை  தயவு செய்து மக்களிடம் சொல்லி விடுங்கள். பாலுக்கும் காவல் என நடித்து, ஏதோ ஒரு காரணத்திற்றகாக பூனையின் நட்பை இழக்க முடியாத இயலாமையை, தயவு செய்து திருவாய் மலர்ந்து உமிழ்ந்து விடுங்கள்.மெல்லவும் முடியாமலும் விழுங்கவும்; முடியாமலும் தவிப்பதை தவிருங்கள். மக்கள் வேறு வழியை தேடிக்கொள்வர்கள். அரசியல் கைதிகள் விடயத்திலும் மட்டுமல்ல, தமிழர்கள் எதிர்க்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும். கடந்து போன வரலாறு தெரியாதவர்களல்ல நீங்கள், தம்புரா தூக்காத நாரதரர்களாக வெகு காலத்திற்கு உங்களால் தாக்கு பிடிக்க முடியாது போகும் என்பதை ஈண்டு நினைவுறுத்த வேண்டியுள்ளது.
போட்டுள்ள நாய் வேடம் எலும்பு பொறுக்க மட்டுமல்ல குரைக்கவும் தான் என்பதை நாம் சொல்லியும் உங்கள் சிற்றறிவிற்கு எட்டா விட்டால் உங்கள் மண்டைகளில் என்ன தான் இருக்கின்றது என நீங்களே சுய பரிசீலனை செய்து கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை!.
-கொற்றவை –
25-02-2017
இந்தியாவின் தமிழகத்திற்கு குடிபெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை ஒன்றை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக முதலமைச்சர் அலுவலகதகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தமிழகத்தின்  23 பிரச்சினைகள் தொடர்பிலும் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், அதுகுறித்த குறிப்புகளையும் வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கையர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் என பழனிச்சாமி கூறியுள்ளார்.
எம்மினத்தின் சிறந்து நிற்கும் கலைஞர்களில் ஒருவரான பரிசில் வாழும்  சிறந்தபாடகர் ஈழத்தமிழ்விழி மயிலையூர்இந்திரன்பெருமை கொள்ளாமனிதன்,

 ஆணுவம் கொள்ளாக்கலைஞர்,  தேசியநேசிப்பு, ஆலயபக்திகொண்டகலைஞர், பிரதி உபகாரம் ராம்பார்காமல் மண்ணுக்காய் தன்கலைசெய்யும் கலைஞர்,யாரும்  தானம் கேட்காது  தாயகநேசிப்புக்காய் தன்குரல் ஒலிக்கவிடும் விடுதலை வீறுகொண்ட கலைஞர்,

 பண்பும், பழகும் நாகரீகமும், பணிவின் சிகரமாகவும் திகழும் இவர், சிவராத்திரி  அன்று சுவிஸ் பேண் ஞானலிங்கேஸ்வரர்  ஆலயத்தில்40 பாடல்களுக்குமேல்பாடி வந்த அடிவர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார் ,

இவர்  இந்தநிகழ்வில் தாயகப்பாடல்களுடன் பக்திப்பாடல்களும்  ஈழத்தமிழ்விழி மயிலையூர்இந்திரன்அவர்கள்  ஆலயத்தில் கௌரவிக்கிக்கட்டார்

,அத்தோடு இவர் அந்தஆலயத்துக்கான பாடல் ஒன்றை
 இயற்றிப்பாடியுள்ளார்  இவ்வளவு சிறப்புக்கும் சிறப்பான ஈழத்தமிழ்விழி மயிலையூர்இந்திரன் அவர்களுக்கு அந்த ஆலய நிர்வாகம் கௌரவம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளது சிறப்பு சிறப்பான கலைஞனுக்கு இதுபோல் இன்னும் சிறப்புக்கள் மதிப்புக்கள் சேர இணைய நிர்வாகம் வாழ்த்தி நிற்கின்றது



கேப்பாப்புலவு போராட்டம் வெற்றி பெறும் நிலையில் உள்ளது நாளை காணிகளை கையகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவலா என்பது ஐயத்தை ஏற்படுத்துகின்றது அதனால் காணி முழுமையாக ஒப்படைக்கப்படும்வரை யாரும் போராட்டத்தைக் கைவிடவோ அல்லது இது சம்மந்தமான தேவையில்லாத பதிவுகளையோ பதிவிடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
வெல்லும் வரை போராட்டம் தொடரும்.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
(28-02-2017)
இந்தமண் எங்களின் சொந்தமண் என்று
எதிரிகளின் பாசறையைத் தேடிப்போய்
ஆதியாய் அனாதியாய் எம்மினம்
கடலதை நாங்கள் வென்று
ஆழக்கடல் எங்கும் சோழமகராசன்
ஆட்ச்சி புரிந்தான் என்று குயிலே பாடு
என்றும் விண்வரும் மேகங்கள் பாடும் என
கல்லறைகள் விடைதிறந்து
கல்லறை மேனியர் கண்திறப்பார்கள்
இனிவரும் இனிவரும் காலங்கள் எமதே
கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு
செல்ல நித்திய வாழ்வினில் நித்திரை
கொள்ளும் நீ செத்திடப்போவதில்லை
ஏன்என்றால் நீ நித்திய புன்னகைஅழகன்
உனது பாடலைக்கேட்டு ஏறுதுபார் கொடி
ஏறுது பார்--- ---

ஆக்கம் :மயிலையூ இந்திரன்

சின்ன அலகால் ஒவ்வொன்றாய்க் கொண்டுவந்து
சேர்த்துக் கட்டிய ..
செந்தமிழரின் குருவிக் கூடு அது..
அண்ணனும் தம்பிகளும் தங்கைகளும் சேர்ந்து
அல்லும் பகலும் அரும்பாடுபட்டு
அமைத்த நம் நாடு அது..

தண்ணீர் விட்டா வளர்த்தோம்..
தமிழ் ஈழம் என்னும்பெரு மரத்தை..
இல்லை ஐயா..எம்முடலில் ஓடும்
செந்நீரை விட்டல்லவா வளர்த்தோம்..?
சிறு நொடியில் பனிநீராய் அது
சிதைந்து கரைந்த மாயமென்ன?

வீணீர் வடிக்கும் வெறிநாய்க் கூட்டமது
வந்தொருநாள்
தாய்வழி வந்த நம்நிலத்தைச் சிதைத்ததே
விடலாமா இனியும்?
காணீர்..நம் கல்லறையில் உறங்கிய
மாவீரத் திலகங்கள் எங்கே?
கண்ணீர் ஆனது
புண் நீராய் வடியுதையா இதை நினைத்தால்!

இயந்திரங்கள் மூலம் எழும்பெலும்பாய்
நொறுக்கினரே பாவியர் ..
எம்மினத்தின் இளந்தளிர்கள் உறங்கிய
மாவீரர் துயிலுமில்லம் எல்லாம்..
மாயமாய் மறைந்ததெங்கே நம் மண்ணைவிட்டு..?
ஓயுமோ இதை நினைத்தால்
ஊழிக் காலம்வரை நம்மழுகை?

பிரபாகரன் என்போன்..
புலி என்றே நீ அறிவாய்
இல்லையடா.. அவனோர் பிரளயம் ..
எப்போது.. எப்படி..
அது வரும் என்று.. உன் அப்பனுக்கும்…
அப்பனின் அப்பனுக்கும்..
அது தெரியாது.. ..
காத்திருந்து பார்..நிச்சயம் அதுவரும்!

கரையோடு மோதும் பேரலைகள் ஓர்நாள்
கரையை உடைத்து
கனலோடு பாய்ந்துவரும்..
காத்திருங்கள் ஓநாய்களே!- மண்
வெறியோடு வாழும் நம்மினத்து
இளைஞர்கள் விடுவரோ?
விதியோடு மோதும் விளையாட்டை
புலிகளன்றி வேறு யாரும்
அறியார் …என்பதை .விளங்கிக் கொள்ளுங்கள்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்ததுவதற்கு சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.


2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, மேலதிக காலஅவகாசம் வழங்குமாறு தற்போது ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்கா அரசாங்கம், கோரிக்கை விடுக்கவுள்ளது.
இந்தநிலையில், சிறிலங்கா அரசுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை மேலதிக காலஅவகாசத்தை வழங்கக் கூடாது என்று கூட்டமைப்பின் ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசத்தை வழங்கக் கூடாது என்று கோரி, கூட்டமைப்பின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

சிறிலங்காவுக்கு ஏற்கனவே காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,  மேலதிக காலஅவகாசம் வழங்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், எஸ்.யோகேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், கே.கோடீஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எஸ்.வியாழேந்திரன், சிவசக்தி அனந்தன் ஆகிய எட்டு உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் இதில் கையெழுத்திடவில்லை.
அதேவேளை, சிறிலங்கா மேலதிக காலஅவகாசம் கோரினால், கடுமையான நிபந்தனைகளுடனேயே அது வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கொழும்பில் நேற்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரியுள்ளமை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படுவதே, இங்கு முக்கியமானது. சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்குவதில், எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
இதைப் புரிந்துகொள்ளாதவர்களே, தேவையற்றுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தற்போதைய  அரசாங்கத்தின் கீழாவது, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவே நாம் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்த உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தமிழர்கள் குறித்து எந்த கருத்தையும் வெளியிடாமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இலங்கை தொடர்பில் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நேற்று (திங்கட்கிழமை) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது.

அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் “பொதுவாக மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது குறித்து சர்வதேச நாடுகள் பின்பற்ற வேண்டும். பூகோள மனித உரிமைகளுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சில அரசியல் தலைவர்கள், மனித உரிமை தொடர்பான அமைப்புக்களிலிருந்து விலகப்போவதாக அச்சுறுத்தி வருகின்றனர். கடந்த ஏழு தசாபதங்களில் உலக நாடுகள் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றத்தை அவர்கள் மீட்டுப் பார்க்க வேண்டும்.
இவ்வாறான அச்சுறுத்தல்களில் அவர்கள் வெற்றி பெற்றால் உலக மனித உரிமையில் எதனை இழக்கப் போகிறோம் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் மனித உரிமைகள் தொடர்பான பல்தரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு திருந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அது மாத்திரம் இன்றி உலகளாவிய காலமுறையில் மீளாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக, பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புக்கள், சகல மட்டத்திலுமான சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றுடன் இணைந்து இணங்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றனவா என்பதை எனது அலுவலகம் கண்காணித்து வருகின்றது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடைபெறுகின்றன. அது ஒரு நபருக்கு எதிராகவோ அல்லது அவருடைய அரசுக்கு எதிராகவோ நடத்தப்படுகின்றது என்றே கருதுகின்றேன்.

பெண்களின் உரிமைகளுக்காக இந்தப் பேரணிகள் நடத்தப்பட்டன. இதில் எனது அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டமையை இட்டு பெருமை படுகின்றேன். நாம் சகலருடைய உரிமைகளுக்காவும் ஒன்றிணைய வேண்டும்.

இது போன்ற அரசியல் தலைவர்கள் லீக் ஒஃப் நெஷன்ஸ் காலத்திலும் இருந்ததுடன் அப்போதைய பன்நாட்டு கட்டமைப்பில் இருந்து விலகப் போவதாக எச்சரித்தார்கள்.

அப்போது ஏற்பட்ட விடயங்கள் குறித்த அனுபவங்கள் எமக்கு உள்ளது. எனவே நாம் சிலை போன்று அமர்ந்திருக்க மாட்டோம். நாம் இழப்பதற்கு பல விடயங்கள் இருக்கின்றன. எமது உரிமைகள் ஏனையவர்களின் அரசியல் இலாபத்திற்காக தூக்கி எறியப்பட முடியாது எனவும் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.
விக்ஸகாட்டு பகுதி மக்களின் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த 6நாட்களாக தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது இருப்பிடத்தின் உரிமைக்காக மேற்கொண்டபோராட்டம் இன்று (27) மாலை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின மேற்கொண்ட முயற்சியைடுத்து வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 6நாட்களாக இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டு பகுதியிலுள்ள மக்கள் தாம் கடந்த 6வருடமாக அப்பகுதியில் இருந்து வருவதாக தெரிவித்து 47குடும்பங்கள் தமக்கு அப்பகுதியிலே காணியினை பெற்று வசிப்பதற்கு ஆவணங்களைப் பெற்றுத்தருமாறு மேற்கொண்டு வரும் போராட்டத்தினையடுத்து அங்கு சென்ற ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அப்பகுதி மக்களின் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் வன இலகா திணைக்கள அதிகாரிகளுடன் பிற்பகல் 2மணியலிருந்து 4.30மணிவரையும் மேற்கொண்டு நீண்ட கலந்துரையாடலையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தினால் வன இலகா திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் விக்ஸ்காட்டுப்பகுதியில் 47குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான காணியினை அந்த இடங்களிலே பெற்றுக் கொடுப்பதற்கு சிபாரிசு செய்யுமாறு வழங்கப்பட்ட கடித்தினை பெற்று ஜனாதிபதியியுடன் ஒரு சந்திப்பை மேறகொண்டு குறித்த கடிதத்திற்கு அனுமதி பெற்றுத்தருவதாக தொடர் போராட்டம் மேற்கொண்டவர்களிடம் வாக்குறுதியளித்த ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா அதையடுத்து தொடர் போராட்டம் மேற்கொண்டவர்கள் தமது போராட்டத்தினை இன்று பிற்பகல் 4.30மணியலிருந்து கைவிடுவதாகவும் இவ்விடயத்தில் ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா நல்ல ஒரு முடிவினை தமக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையில் தாம் மேற்கொண்ட போராட்டத்தினை முடித்துக் கொள்வதாகவும் தமக்கான ஆதரவினை வழங்கிய அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், பொது அமைப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

விக்ஸகாட்டு பகுதி மக்களின் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த 6நாட்களாக தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது இருப்பிடத்தின் உரிமைக்காக மேற்கொண்டபோராட்டம் இன்று (27) மாலை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின மேற்கொண்ட முயற்சியைடுத்து வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 6நாட்களாக இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டு பகுதியிலுள்ள மக்கள் தாம் கடந்த 6வருடமாக அப்பகுதியில் இருந்து வருவதாக தெரிவித்து 47குடும்பங்கள் தமக்கு அப்பகுதியிலே காணியினை பெற்று வசிப்பதற்கு ஆவணங்களைப் பெற்றுத்தருமாறு மேற்கொண்டு வரும் போராட்டத்தினையடுத்து அங்கு சென்ற ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அப்பகுதி மக்களின் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் வன இலகா திணைக்கள அதிகாரிகளுடன் பிற்பகல் 2மணியலிருந்து 4.30மணிவரையும் மேற்கொண்டு நீண்ட கலந்துரையாடலையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தினால் வன இலகா திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் விக்ஸ்காட்டுப்பகுதியில் 47குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான காணியினை அந்த இடங்களிலே பெற்றுக் கொடுப்பதற்கு சிபாரிசு செய்யுமாறு வழங்கப்பட்ட கடித்தினை பெற்று ஜனாதிபதியியுடன் ஒரு சந்திப்பை மேறகொண்டு குறித்த கடிதத்திற்கு அனுமதி பெற்றுத்தருவதாக தொடர் போராட்டம் மேற்கொண்டவர்களிடம் வாக்குறுதியளித்த ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா அதையடுத்து தொடர் போராட்டம் மேற்கொண்டவர்கள் தமது போராட்டத்தினை இன்று பிற்பகல் 4.30மணியலிருந்து கைவிடுவதாகவும் இவ்விடயத்தில் ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா நல்ல ஒரு முடிவினை தமக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையில் தாம் மேற்கொண்ட போராட்டத்தினை முடித்துக் கொள்வதாகவும் தமக்கான ஆதரவினை வழங்கிய அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், பொது அமைப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது http://www.tnnlk.com/?p=27493 .
விக்ஸகாட்டு பகுதி மக்களின் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த 6நாட்களாக தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது இருப்பிடத்தின் உரிமைக்காக மேற்கொண்டபோராட்டம் இன்று (27) மாலை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின மேற்கொண்ட முயற்சியைடுத்து வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 6நாட்களாக இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டு பகுதியிலுள்ள மக்கள் தாம் கடந்த 6வருடமாக அப்பகுதியில் இருந்து வருவதாக தெரிவித்து 47குடும்பங்கள் தமக்கு அப்பகுதியிலே காணியினை பெற்று வசிப்பதற்கு ஆவணங்களைப் பெற்றுத்தருமாறு மேற்கொண்டு வரும் போராட்டத்தினையடுத்து அங்கு சென்ற ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அப்பகுதி மக்களின் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் வன இலகா திணைக்கள அதிகாரிகளுடன் பிற்பகல் 2மணியலிருந்து 4.30மணிவரையும் மேற்கொண்டு நீண்ட கலந்துரையாடலையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தினால் வன இலகா திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் விக்ஸ்காட்டுப்பகுதியில் 47குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான காணியினை அந்த இடங்களிலே பெற்றுக் கொடுப்பதற்கு சிபாரிசு செய்யுமாறு வழங்கப்பட்ட கடித்தினை பெற்று ஜனாதிபதியியுடன் ஒரு சந்திப்பை மேறகொண்டு குறித்த கடிதத்திற்கு அனுமதி பெற்றுத்தருவதாக தொடர் போராட்டம் மேற்கொண்டவர்களிடம் வாக்குறுதியளித்த ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா அதையடுத்து தொடர் போராட்டம் மேற்கொண்டவர்கள் தமது போராட்டத்தினை இன்று பிற்பகல் 4.30மணியலிருந்து கைவிடுவதாகவும் இவ்விடயத்தில் ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா நல்ல ஒரு முடிவினை தமக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையில் தாம் மேற்கொண்ட போராட்டத்தினை முடித்துக் கொள்வதாகவும் தமக்கான ஆதரவினை வழங்கிய அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், பொது அமைப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது http://www.tnnlk.com/?p=27493 .
விக்ஸகாட்டு பகுதி மக்களின் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த 6நாட்களாக தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது இருப்பிடத்தின் உரிமைக்காக மேற்கொண்டபோராட்டம் இன்று (27) மாலை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின மேற்கொண்ட முயற்சியைடுத்து வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 6நாட்களாக இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டு பகுதியிலுள்ள மக்கள் தாம் கடந்த 6வருடமாக அப்பகுதியில் இருந்து வருவதாக தெரிவித்து 47குடும்பங்கள் தமக்கு அப்பகுதியிலே காணியினை பெற்று வசிப்பதற்கு ஆவணங்களைப் பெற்றுத்தருமாறு மேற்கொண்டு வரும் போராட்டத்தினையடுத்து அங்கு சென்ற ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அப்பகுதி மக்களின் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் வன இலகா திணைக்கள அதிகாரிகளுடன் பிற்பகல் 2மணியலிருந்து 4.30மணிவரையும் மேற்கொண்டு நீண்ட கலந்துரையாடலையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தினால் வன இலகா திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் விக்ஸ்காட்டுப்பகுதியில் 47குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான காணியினை அந்த இடங்களிலே பெற்றுக் கொடுப்பதற்கு சிபாரிசு செய்யுமாறு வழங்கப்பட்ட கடித்தினை பெற்று ஜனாதிபதியியுடன் ஒரு சந்திப்பை மேறகொண்டு குறித்த கடிதத்திற்கு அனுமதி பெற்றுத்தருவதாக தொடர் போராட்டம் மேற்கொண்டவர்களிடம் வாக்குறுதியளித்த ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா அதையடுத்து தொடர் போராட்டம் மேற்கொண்டவர்கள் தமது போராட்டத்தினை இன்று பிற்பகல் 4.30மணியலிருந்து கைவிடுவதாகவும் இவ்விடயத்தில் ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா நல்ல ஒரு முடிவினை தமக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையில் தாம் மேற்கொண்ட போராட்டத்தினை முடித்துக் கொள்வதாகவும் தமக்கான ஆதரவினை வழங்கிய அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், பொது அமைப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது http://www.tnnlk.com/?p=27493 .
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான பிரேரணை இம்முறை பிரித்தானியா முன்வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பிரேரணையை இம்முறையும் அமெரிக்காவே முன்வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளுடன் இணை அனுசரனையுன் குறித்த பிரேரணையை இம்முறையும் அமெரிக்காவே முன்வைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, டொனால்ட் ட்ரம்ப தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்காவின் முன்னைய அரசாங்கத்தைப் போல தற்போதைய அரசாங்கம் கரிசனை கொள்ளாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா முன்வைக்குமா என்பது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்று முன்வைக்கப்படும் என்று கடந்த வாரம் நடந்த ஒழுங்கமைப்புக் கூட்டத்தில் பிரித்தானியாவினால் அறிவிக்கப்பட்டது.
எனினும், இணை அனுசரணை வழங்கும் பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இம்முறையும் அமெரிக்காவே தீர்மானத்தை முன்வைக்கும் என்று ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு தீர்மான வரைவு இன்னமும் தயாரிக்கப்படாத போதிலும், இது 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை அடியொற்றியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 18 மாத காலப்பகுதியில் இலங்கையினால் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்கும் வகையில் இந்த தீர்மானம் அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கவனத்தில் எடுத்து, நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் நிறைவேற்றப்படாதுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மான வரைவு அமையும் என்று ஜெனிவாவில் உள்ள உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை குறித்த தீர்மான வரைவு பெரும்பாலும், ஒரு பக்கம் அல்லது அதனை விடவும் குறைவான அளவிலேயே இருக்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் வகையில் இம்முறை முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இலங்கை அரசாங்கம் எதிர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், குறித்த பிரேரணையானது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் பிதான அனுசரனையுடன் கடந்த முறை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரைனை வழங்கியிருந்தது.

எனினும், இம்முறை முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கும் இலங்கை அரசாங்கம் இணை அணுசரனை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
27 வருடங்கள் பிரித்தானியாவில் வாழ்ந்த பெண் ஒருவர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
பிரித்தானிய நாட்டவரை திருமணம் செய்து அவருடன் 27 வருடங்கள் அங்கு வாழ்ந்த நிலையில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரிலில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்ற ஐரின் க்லேனல் என்ற பெண் இரண்டு மகன்கள் மற்றும் மருமகளுடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வட கிழக்கு பிரித்தானியாவிலுள்ள தனது வீட்டில் வைத்து அவரை, அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து, முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.
பிரித்தானிய நாட்டவருடன் திருமணமாகியதன் பின்னர் ஐரின் க்லேனலுக்கு பிரித்தானியாவில் நிரந்தரமாக வாழ அனுமதி கிடைத்துள்ளது. எனினும் அவர் தனது வயோதிப பெற்றோரை பார்ப்பதற்காக அடிக்கடி சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீண்ட காலம் தங்கியிருந்ததன் காரணமாக அவரது குடியிருப்பு விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவினுள் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கு பல முறை முயற்சித்ததாக ஐரின் க்லேனல் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் குடியுரிமை கோரும் ஒவ்வொருவரினதும் விண்ணப்பமும் தற்போது தனித்தனியாக ஆராய்வதாக பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
யாருக்கும் சட்டரீதியாக நாட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதியில்லை என்றால் அவர்களை வெளியேற வேண்டும் என்பது தங்கள் எதிர்ப்பார்பென அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் பெருமளவு இலங்கையர்கள் வாழ்ந்து வரும் நிலையில், தங்கள் உறவுகளை பார்ப்பதற்காக நாட்டுக்கு சென்று வருகின்றனர். இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட த.கந்தசாமி (28.02.17) தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,

இவரை மனைவி இராசேஸ்வரி, மகள் நித்யா , மருமகன் நெசான், மகன்அரவிந்,மருமகள் யோகிதா, மகன் மயூரன், மருமகள்  ,அக்கா மனோன்மணி பரிசில் ,அண்ணன் குணரத்தினம்ஈழம், மைத்துனர்மார், மைத்துனிமார்,மருமகன்மார், மருமக்கள்மார் ,பெறாமக்கள்,
பேரப்பிள்ளைகள் அனைவரும் இணைந்து சிறப்பற வாழும் நீங்கள் வைரவர் ஆசிகொண்டு இன்னும் சிறப்புற்றுவாழ்க
இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்


டென்மார்க் நாட்டில்வாழ்ந்து வரும் செல்வன்Prashanth இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில்
தனது குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்  இணைந்து கொண்டாடுகின்றார் இவர்

 அன்பென்ற உறவோடு
அண்ணனாய்  பிறப்புற்றார்
அன்பாலே எல்லோரின்
நெஞ்சத்தில் நிறைதிட்டாய்

இன்புற்று உறவுடனே இனிதே நீர்வாழ்கவென
சிறுப்பிட்டி இலுப்பைஅடி முத்துமாரிஅம்மன் ஆசிகொண்டுவாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்

அவுஸ்திரேலியாவின் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருப்பதாகவும், அகதிகளுக்கு இனி இடமில்லை என்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒபாமா ஆட்சியில் அவுஸ்திரேலியா - அமெரிக்கா இடையே அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி ஒருமுறை மட்டும் அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அவுஸ்திரேலியா - அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகளை மீள்குடியமர்த்தும் ஒப்பந்தம் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், அகதிகள் தொடர்பான கொள்கையை மீண்டும் அவுஸ்திரேலியா வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் தங்களது எல்லைகள் மூடப்பட்டே உள்ளன என்ற அறிவிப்பை மீண்டும் விடுத்துள்ளார்.

மேலும், கடந்த வாரம் சட்டவிரோதமாக கடல் வழியாக நியூசிலாந்து செல்ல முயற்சித்த எட்டு பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்வதாலேயே இவ்வாறான அகதிகள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று  எட்டாவது நாளாக தொடர்கிறது.

இன்று திங்கள்  காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு எட்டாவது நாளாக தொடர்கிறது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  விடயத்தில்  இனியும் காலம் தாமதிக்க  வேண்டாம் எனவும்  இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜ.நா. கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும்  காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
இன்று மாலை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர்  போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்கள். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சம்மந்தன்  அவர்கள் விடுத்த அறிக்கைக்கு தங்களது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.

தங்களின் உணர்வுகளுக்கு  மாறாக குறித்த அறிக்கை  சமகாலத்தில் வெளியிடப்பட்டமை வருத்தமளிக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்கள்.
ஊவா கல்வி அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்து 'பவர் ஒப் யூத்' அமைப்பின் அனுசரணையில் பெருமையடன் வழங்கிய ' மகுட விழா 2017 ' நிகழ்வில் இலங்கை கல்விக் களத்தில் மிகுந்த அர்ப்பபணிப்புடன் சேவையாற்றும் எமது இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்திற்கு 'சமூக மாற்றத்தில் கல்விசார் பங்காற்றல்' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பெருமைமிகு சந்தரப்பம்...
எமது சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் மற்றும் செயலாளர் திரு. சங்கரமணிவண்ணன் ஆகியோரின் தெளிவான வழிகாட்டலும் தூய்மையான சிந்தனைகளும் இல்லாவிடில்.... இத்தகைய வெற்றிகள் நமக்கில்லை...
இனியும்...
நம்பிக்கை சிறகு கொண்டு இணைந்து பறப்போம்...
' முகடு தட்டிப் போனதோர் எல்லைப் பரப்பில் புதியொரு விடியலைக் காண...
கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைகளுக்கு இரண்டொரு தினங்களுக்குள் தீர்வு கணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இருப்பினும் மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளில் கால் பதிக்கும்வரை அவர்களுடைய போராட்டம் தொடரும் எனத் தான் ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு விவகாரம் தொடர்பில் ஐனாதிபதியுடன் இன்று(திங்கட் கிழமை) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை எதிர்க் கட்சித் தலைலர் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,

“கேப்பாபிலவு, புதுக்குடியிருப்பு மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி சுமார் ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேப்பாபிலவில் 54 காணிகளுக்கு அரசாங்கத்தினால் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் 42 காணிகளுக்கான பத்திரங்கள் முல்லைத்தீவு அரசாங்க அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டுமுள்ளது.
அதேவேளை, யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட போது சம்மந்தப்பட்டவர்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கப்பட்டு வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்ல விரும்பினால் தற்போது வழங்கப்பட்டுள்ள இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்படாக இருக்கின்றது.
எனவே, மக்களின் விருப்பத்தை அறிந்து, அவர்கள் விரும்புகின்ற காணிகளில் அவர்கள் குடியமர்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று, புதுக்குடியிருப்பை பொறுத்தவரையில் 19 பேருக்கு சொந்தமான 16 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருக்கின்றது. அவற்றை மக்களிடம் ஒப்படைப்பதற்கு இராணுவம் தயாராகவே இருக்கின்றது.
ஆனால், அவர்களுக்கு மாற்றிடம் ஒன்று தேவை என்ற ரீதியில் வன இலாகாவிற்கு சொந்தமான காணி இனங்காணப்பட்டுள்ளது. அதனை முறைப்படி இராணுவத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி சம்மந்தப்பட்டவர்களுக்கு உத்;தரவிட்டுள்ளார். எனவே அந்த காணிகளும் விரைவில் விடுவிக்பபடும்” என எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் முன்னிலையிலேயே சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி தேவையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதுடன், எதிர்வரும் 4 ஆம் திகதி தான் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதால் அதற்கு முன்னர் இந்த பிரச்சினைகள் நிறைவடைய வேண்டும் என உத்தரவிட்டதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி, இரவு பகலாக கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று இருபத்தேழாவது நாளாக தொடர்ந்தது. இந்த நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள், மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் புளியங்குள இளைஞர்கள் என பலர் நேற்றைய தினமும் பிலவுக்குடியிருப்பிற்கு சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
பிலவுக்குடியிருப்பிற்கு விஜயம் செய்த மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மண் எங்களின் சொந்த மண், எம் காணி எம் உரிமை, எமது பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டும், எங்களை எங்கள் காணிகளில் சுதந்திரமாக வாழவிடுங்கள், எமது கோரிக்கைக்கு செவிசாய்க்குமா நல்லாட்சி அரசு, போன்ற பல்வேறு வாசகங்களை எழுதிய பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கவேண்டும் என மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதேவேளை இலங்கை ஆசிரிய சங்கத்தினரும் நேற்றைய தினம் கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பிற்கு விஜயம் மேற்கொண்டதுடன், நல்லாட்சி அரசே நடிக்காதே, இராணுவமே வெளியேறு, விமானப்படையே வெளியேறு, கேட்பாரின்றி நினைத்தாயா? கேப்பாபுலவு மக்களை, இராணுவமே வெளியேறு, வீதியில் மக்கள் காணியில் இராணுவம் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியதுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை யும் முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத் தியர்கள் நாளாந்தம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

28வது நாளாக நமது உரிமை வேண்டி தாய் நிலத்தை மீட்க போராடும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள்.

இவர்களின் உறுதிக்கு முன்னால் சிங்களப் பயங்கரவாத சக்தியெல்லாம் தவுடுப்பொடிதான்.

குழந்தைகள் முதல் முதியவர்வரை நாங்கள் சலைத்தவர்கள் அல்ல எமக்கும் வீரம் உண்டு என்று சிங்கள துவக்குகளுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி போராடிவருகின்றனர்.

இந்தச் சிறுவர்களின் சிறுநீரை வாங்கிக் குடித்தாலாவது தமிழ் அரசியல் தலைமைகளுக்கு வீரம் வருகின்றதா என்று பார்ப்போம்.
குழந்தைகள்கூட உறுதியோடு தமிழ் இன உணர்வோடு போராடி ஆனால் அரசியல்வாதகளோ சிங்களவனின் கால்களை நக்கிக்கொண்டு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.

இவர்கள் எப்போது திருந்துவார்களோ..??
இவர்களைப்போன்றவர்கள் எம் இனத்தின் சாபங்களே.
மற்றவர்களை நம்பாமல் எமக்கான வெற்றியை நாம் தான் போராடிப்பெறவேண்டும்.

தமிழா இனியும் கடந்து செல்லாதே
எமது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுகொடு.
இது அவர்களுக்கான போராட்டம் அல்ல எமது இனத்திற்கான போராட்டம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடும் நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் செனட் பிரதிநிதிகள் குழுவை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோது இவ்விடயத்தைத் தெரிவித்த சம்பந்தன், கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளில் சிலவற்றை மாத்திரமே இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளதெனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஐ.நா. தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இதுவரை நடைபெற்ற விடயங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருப்பதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டுமெனவும் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நிலைநாட்ட வேண்டுமெனவும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலும் இதன்போது கவனஞ்செலுத்தப்பட்டதோடு, குறிப்பாக சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
முனைப்பு
பாடசாலையின் முதல் தலைமயாசிரியராக மூதூரைச் சேர்ந்த திருவாளர்.
க ஞானமுத்து அவர்கள் பொறுப்பேற்கிறார் ஆரம்ப முயற்சிகளில் அவரது நிறைவான ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் பாடசாலையயை நிர்வாக ரீதியாக இயங்குவதற்கனா அடித்தளமாக அமைந்தது .ஒரு சாதனை மிகு பாடசாலயின் முதல் அதிபர் என்ற பெருமை அவருக்குரியது.தமிழ் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்ட அவர் மூதூர் பிரதேச கல்வி வரலாற்றில் முக்கியமான பங்களிப்பு செய்தவர்களில் போற்றுதற்குரிய ஒருவர்.தியாக மனப் பான்மையும் சேவை நோக்கும் கொண்ட கல்வியாளன் அவர்.சில மாதங்கள் கடமையாற்றிய நிலையில் அன்னார் வேறு பாடசாலைக்கு மாற்றலாகிய சூழல் ஏற்பட்டது.1989ம் ஆண்டில் ஞானமுத்து அய்யா இன வெறியர்களால் மூதூரில் வைத்து படுகொலை செய்யப் பட்டமை மூதூர் தமிழ் கல்வியுலகுக்கு பேரிழப்பு.
சேனையூர் மத்திய கல்லூரியின் முதல் மாணவன் செம்பன் பத்தக் குட்டி இலங்கையின் ஆதிக் குடி வந்த பூர்வ குடி மகன் ஒருவனே பாடசாலையின் முதல் மாணவனாக கொண்டமை இப் பாடசாலைக்கு பெருமை சேர்ப்பதாகும்

தலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் “மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது”

முள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போய்விட்டதாக பலர் நினைத்து வந்தாலும் அங்கு நிகழ்ந்தேறியவை இன்றும் விடைகாணமுடியா மர்மங்களாகவே நீடித்துவருகின்றது. அந்த மர்மங்களிற்கு ஓரளவு விடையளிப்பதாகவே இந்த தகவல் அமைந்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் சண்டை மிகப்பெரும் வரலாற்றுச் சோகத்துடன்
நிறைவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னர் களமுனைக்கு விசேட
படைப்பிரிவு ஒன்று வந்திருந்ததாகவும் அவரகள் அதிநவீன ஆயுதங்களுடன் காணப்பட்டதாகவும் அவர்களை நேரிடையாக களத்தில் கண்ட முக்கய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விசேட படைப்பிரிவில் வந்திருந்தவர்களது கையில் அதிநவீன ஆயுதங்கள் இருந்ததாகவும் அவர்கள் திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்டிருந்ததாகவும் தமிழில் பேசிவந்ததாகவும் தான் சந்தித்த ஆச்சரியம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இவர்களது வருகை பற்றியோ அல்லது அவர்கள் பற்றியோ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளிற்கே தெரியாமல் இருந்ததாக கூறும் அவர் தலைவரின் நேரடித் தொடர்பில் இருந்தவர்களாக இருக்கலாம் எனவும் கூறினார்.
சுமார் இருநூறிற்கும் அதிகமானவர்களை கொண்டிருந்த இந்த விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில்தான் தலைவரது பாதுகாப்பு ஏற்பாடுகள்
இருந்துள்ளது. இவர்கள் எதிர்கொண்ட களத்தில் சிங்களப்படை பெரும் இழப்புகளைச் சந்தித்ததை நேரடியாக பார்த்ததாக அவர் கூறினார்.
தலைவரது நேரடித் தொடர்பில் வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகளே இறுதிக்கட்டத்தில் தலைவரது பாதுகாப்பிற்கு வரவழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரகளது ஏற்பாட்டில் தலைவர் பாதுகாப்பாக வெளியேறி இருக்கலாம் எனவும் தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

இருநூறிற்கும் அதிகமான விசேட படையணிப் போராளிகள் வெளியில்
இருந்து இறுக்கமான களச்சூழல்களை ஊடறுத்து களத்திற்கு செல்ல
முடிந்துள்ளதென்றால் அந்த வழியில் தலைவர் உள்ளிட்டவர்கள் வெளியேறிச் சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

சண்டைக்களம் மிக மோசமான இழப்புகளுடன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நகர்ந்து கொண்டிருக்கையில் அந்த இக்கட்டான வேளையில் கூட களமுனை தலைவரது கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளது என்பதை இந்த விசேட படையணியின் உள்நுழைவும் வெளியேற்றமும் சுட்டிக்காட்டுகின்றது.
விரைவில் மர்மங்கள் விடுபட்டு விடுதலை ஒளி பிரகாசிக்கும் சாத்தியங்கள் தென்படுகின்றது. நம்பிக்கையுடன் களமாடுங்கள் தமிழர்களே வெற்றி நிச்சயம்.
உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்கள் உங்கள் உங்கள் தளங்களில் முழுமூச்சுடன் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். நாமெல்லாம் எதிர்பார்க்கும் அதிசயம் இந்த உலகில் நிகழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் இந்நேரத்தில் உறுதிபடத் தெரிவிக்க முடியும்
ஐ.நா.உட­ன­டி­யாக தலை­யி­ட­வேண்டும்; கிளி.யில் போராடும் மக்கள் தெரி­விப்பு

எமது கண் முன்னே இரா­ணுவம் பிடித் துச் சென்ற எமது பிள்­ளை­களை எங்­க­ளிடம் ஒப்­ப­டைக்க நல்­லாட்சி அர­சாங்கம் என்று கூறு­கின்ற இந்த அர­சாங்கம் விரைந்து நட வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று காணா மல் ஆக்­கப்­பட்­டோ­ரது உற­வுகள் மிகுந்த ஏக்­கத்­துடன் தெரி­வித்­துள்­ளனர்
.
தமது உற­வு­களைப் பிடித்துச் சென்­று­ விட்டு தற்­போது காண­வில்லை எனக்கை வி­ரி க்கும் அரச படை­களும் அவற்­றிற்குத் துணை நின்று செயற்­படும் இலங்கை அரசும் எமது உற­வுகள் எங்கே உள்­ளார்கள்?  என்ற விப­ரத்தை வெளி­யிட வேண்டும் என்றும் அம்­மக்கள் கோரி­யுள்­ளனர்.

காண­தமல் போன தமது உற­வி­னர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தனை அறி­விக்­கு­மாறு வலி­யு­றுத்து கிளி­நொச்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ரது உற­வு­களால் தொடர் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை நடாத்தி வரு­கின்­றார்கள். ஆறா­வது தின­மாக நேற்றும் போராட்டம் தொடர்ந்­தது.

எமது கண் முன்னே எமது உற­வு­களைப் பிடித்துச் சென்ற இலங்கை இரா­ணு­வமும் இரா­ணுவத் துணைப் படை­யி­னரும் அவர்­களை எங்கே ஒழித்து வைத்­துள்­ளார்கள் என்ற விப­ரத்தை வெளி­யி­டு­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்து உதவ வேண்டும். எமது உற­வுகள் எங்கே உள்­ளார்கள் என்­ப­தனைக் கண்­ட­றிந்து வெளி­யி­டு­வ­தற்கு ஐ.நா சபை இனியும் காலம் கடத்­தாது உரிய நட­வ­டிக்­கையை விரை­வாக எடுக்க வேண்டும். எமது உற­வுகள் எங்கே அரச படை­களால் அடைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­பதை உட­ன­டி­யாக வெளி­யிட வேண்டும். அதனை விடுத்துக் காலத்தைக் கடத்­து­வார்­க­ளா­க­வி­ருந்தால் எமது போராட்ட வடி­வங்கள் எதிர்­கா­லத்தில் மாறும் அதற்­கான முழுப்­பொ­றுப்­பையும் இந்த அர­சாங்­கமும் ஐ.நா சபை­யு­மேதான் ஏற்க வேண்டும் என்று போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்கள் தெரி­வித்­துள்­ளனர்.
காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ரது போராட்­டத்தில் நேற்­றைய தினம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறீ­தரன் கலந்­து­கொண்டு அந்த மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் நியா­ய­மான போராட்­டத்­திற்குத் தாம் தொடர்ந்தும் ஆத­ர­வாக இருந்து குரல்­கொ­டுத்து வரு­வ­தாக குறிப்­பிட்டார்.

காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ரது விட­யத்தில் அரசு பாரா­மு­க­மாக இருந்து தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவதாகவும் இவ்விடயத்தில் ஐ.நா சபை தகுந்த முறையில் தலையிட்டு இம்மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்
இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புலம் பெயர் தமிழ் மக்களினால் லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் 10 Downing Street , Westminster , London SW14 2AA எனும் இடத்தில் நேற்று மாலை 4 மணி முதல் இடம்பெற்றுள்ளது. மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாக இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிரித்தானிய ஆதரவு வழங்கக்கூடாது எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை படைகளால் அபகரிக்கப்பட்ட கோப்பாபுலவு மக்களினது நிலங்களை மீள கையளிக்குமாறும், அதே போன்று வடக்கு கிழக்கு தாயகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகளை பெற்றுத்தருமாறும் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை நேற்று

முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-ஈழம் ரஞ்சன்-

மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல், இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர்.

இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார். 

இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த, போற்றுதற்குரிய மாமனிதர்.

1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் பணியினை, மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு விடுதலை ஊக்கியாக அவர் எல்லோர் மனங்களிலும் நிறைந்திருப்பார் என்பதே காலம் சொல்லும் உண்மையாகும்.
-ஈழம் ரஞ்சன்-
திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.17 இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார்.
இவரை இவரது கணவன்ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார் தருமரட்ணம் குடும்பத்தினர் , ,மோகனதாஸ் குடும்பத்தினர் , மன்மதராஐா குடும்பத்தினர் ,கணேசலிங்கம். குடும்பத்தினர் சகோதரிமார் சூரியா ஐெயா ,ராஐினி சின்னமாமி பரமேஸ்வரி, மச்சாள்மார் இராஜேஸ்வரி தவேஸ்வரி அண்ணர் கந்தசாமி,மத்துனர்மார் அன்னலிங்கம் குமாரசாமி,,தேவராசா,,தவராசா, சகலிமார் சுதந்தினி, பவானி,
மகேந்திரன் குடும்பத்தினர்,சாந்தி குடும்பத்தினர்,கண்ணன்குடும்பத்தினர் லண்டன்,
மருமக்கள் நித்யா, அரவிந்,மயூரன் , பிரதீஸ், வாகீஸ்; சதீஸ்,
ஹிசான் ,டிலக்ஷன். பெறாமக்கள் பிறேம் மாலா குடும்பத்தினர் சுசி குடும்பத்தினர் நோசான் சந்திரா,யானா,சன்,சாமி,சுதேதிகா, தேவிதா,தேனுகா,தேவதி,சந்தியா ,றம்மியா,மதுரிகா,மசேல்,றொபின்,ஜுலியான்,
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடுவாழ்த்துகிறது


பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வலியுறுத்திக் கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தை இரவு பகலாக முன்னெடுத்து வரும் நிலையில் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய அரசாங்கம் குறித்த மக்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்வது முறையல்ல.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க இலங்கை அராசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்தத் தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வலி. வடக்கு மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். காங்கேசன்துறை வீதியில் மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின் பிரத்தியேகமாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது நாளே நான் அங்கு சென்று பார்வையிட்டு அந்த மக்களுக்கு எனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தேன்.
போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்களுக்கு லண்டனைச் சேர்ந்த நிறுவனமொன்றின் ஊடாக இரண்டு தடவைகள் சமைத்த உணவுகளை வழங்கியிருந்தோம்.
கடந்த மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கடுமையான அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் நாங்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டோம்.
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருட காலம் வரை நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டங்களையும் எமது மக்கள் முன்னெடுக்கவில்லை.
ஆனால், அரசாங்கத்தின் ஏமாற்றுச் செயற்பாடுகளில் எமது மக்கள் கொண்ட அதிருப்தி காரணமாக நில விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களுக்கான நீதி என்பன கோரித் தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எமது மக்கள் அடுத்தடுத்துப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பல விடயங்களைக் கூட இன்னும் நிறைவேற்றாத சூழலில் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி கூடும் ஐக்கியநாடுகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன் என்றார்.
சண்டிலிப்பாய் பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் இரண்டாம் இடத்தை  (Manipay Oxford Kings s.c) கழகம்பெற்றுகொண்டதுடன் அனைத்து ஆண்கள் மெய்வல்லுனர் போட்டிகளில் 61 புள்ளிகளுடன் முதலிடத்தினை பெற்று கொண்டது......
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரின் வேண்டுகோள்
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வாழ் தமிழ் இளையோர்களை கலந்துகொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் தமது வேண்டுகோளை விடுத்துள்ளனர். நடைபெற்ற இனவழிப்புக்கும் , இன்றும் பல்வேறு வடிவங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டமைப்புசார் இனவழிப்புக்கும் பரிகார நீதியை வேண்டி எதிர்வரும் 6 .03 .2017 அன்று ஜெனிவா மாநகரில் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறும் மாபெரும் பேரணியில் அனைத்து ஐரோப்பா வாழ் தமிழ் மக்களும் கலந்துகொண்டு தமது தேசியக் கடமையை செய்யவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .

தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்திரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்

தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன். 
 
இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர். பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.

அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது. சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.
“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை .

தமிழர்களை ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின் நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக் கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.

இரத்த வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான் உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல் மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து சேர்ந்தனர். புத்த மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள் மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம் கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில் சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள பௌத்தம் என்ற புதிய மதத்தைச் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர் திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .

சிறிலங்கா தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம் இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது
தமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர் செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.

ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின் எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ் கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற வாதம் நிறுவப்படுகிறது.
கந்தரோடை இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.

பழைய ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை கோருவது இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடைவிடாது நடக்கின்றன.

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப் படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும் குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழர் நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற்பாடு இன்னுமோர் பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல் மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொலையின் அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும் வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன. ஓரு தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.

குடியேற்றத்தின் மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல் ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம் சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். தாம் குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும் வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ் டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில் தோன்றியது உலகத் தமிழர் என்றால் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்
தமிழர் தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள் கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள் தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது முள்ளிவாய்க்காலில் மீண்டும் புதைகுழி.

வரலாறு எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “ சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப் போவதில்லை ‘என்று அடித்தக் கூறியுள்ளார் .

பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம் காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.
சாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.
தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “ மகளீர் படையணினின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று “ என்று சொன்னார்.

தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்;ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பி;டப் படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம்.
தமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்