முனைப்பு பாடசாலையின் தலைமயாசிரியராக ம திருவாளர். பொறுப்பேற்கிறார்

முனைப்பு
பாடசாலையின் முதல் தலைமயாசிரியராக மூதூரைச் சேர்ந்த திருவாளர்.
க ஞானமுத்து அவர்கள் பொறுப்பேற்கிறார் ஆரம்ப முயற்சிகளில் அவரது நிறைவான ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் பாடசாலையயை நிர்வாக ரீதியாக இயங்குவதற்கனா அடித்தளமாக அமைந்தது .ஒரு சாதனை மிகு பாடசாலயின் முதல் அதிபர் என்ற பெருமை அவருக்குரியது.தமிழ் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்ட அவர் மூதூர் பிரதேச கல்வி வரலாற்றில் முக்கியமான பங்களிப்பு செய்தவர்களில் போற்றுதற்குரிய ஒருவர்.தியாக மனப் பான்மையும் சேவை நோக்கும் கொண்ட கல்வியாளன் அவர்.சில மாதங்கள் கடமையாற்றிய நிலையில் அன்னார் வேறு பாடசாலைக்கு மாற்றலாகிய சூழல் ஏற்பட்டது.1989ம் ஆண்டில் ஞானமுத்து அய்யா இன வெறியர்களால் மூதூரில் வைத்து படுகொலை செய்யப் பட்டமை மூதூர் தமிழ் கல்வியுலகுக்கு பேரிழப்பு.
சேனையூர் மத்திய கல்லூரியின் முதல் மாணவன் செம்பன் பத்தக் குட்டி இலங்கையின் ஆதிக் குடி வந்த பூர்வ குடி மகன் ஒருவனே பாடசாலையின் முதல் மாணவனாக கொண்டமை இப் பாடசாலைக்கு பெருமை சேர்ப்பதாகும்

0 Kommentare:

Kommentar veröffentlichen