தமிழக மக்களின் கோழைத்தனமே இனப்படுகொலைக்கு காரணம்

தமிழக தமிழர்களின் கோழைதனமே ஈழத்தில் இனப்படுகொலை நடப்பதற்கு காரணம் என தமிழக திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜா தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் இடம்பெற்ற போராட்டங்களில் ஈழ விடுதலைப் போராட்டமும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டமும் மிகவும் உன்னதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழ விடுதலை போராட்டத்தையும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தையும் மையப்படுத்தி இயக்குனர் புகழேந்தி தங்கராஜா தயாரித்திருக்கும் ‘கடல் குதிரைகள்’  திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நாளை தெல்லிப்பழையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள இயக்குனர் புகழேந்தி தங்கராஜா இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
உலகத்தில் உன்னதமான போராட்டங்களில் ஈழ விடுதலைப் போராட்டமும், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் நடைபெற்ற போராட்டமும் அமைந்துள்ளது.

இந்த இரு போராட்டங்களும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படும் கருத்துக்கள் தவறானவை. எந்த போராட்டமும் முடிவதில்லை.
என்னுடைய கடல் குதிரைகள் திரைப்படம் ஈழ விடுதலை போராட்டத்தையும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஒரு மையபுள்ளியில் இணைக்கிறது.

ஈழத்தின் புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பி தமிழகம் வந்த கிருஷாந்தி குமாரசாமி என்ற பெண் தமிகத்தில் நீச்சல்போட்டியில் பங்கெடுத்து இந்திய தேசிய மட்டத்தில் சாதிக்கிறார் என்பதை காட்டுவதாகவே இந்த படம் அமைந்துள்ளது.

இந்த படத்தில் கிருஷாந்தியாக நடித்திருக்கும் பெண் ஈழத்தை சேர்ந்தவர், பாடல்கள் புரட்சி கவிஞர் காசி ஆனந்தன் எழுதியுள்ளார், பாடல்களை ஈழத்து சிறுமி ஜெசிக்கா பாடியுள்ளார்.
மேலும் தமிழக தமிழர்களின் கோழைதனமே ஈழத்தில் இனப்படுகொலை நடக்க காரணமானது. கேப்பாபிலவு மக்களை கூனி குறுகியே சென்று பார்வையிட்டேன்.

ஆனால் அநீதிக்கு ஆட்பட்ட ஒரு இனம் அல்லது சமூகம் நீண்டகாலம் மெளனமாக இருக்க முடியாது. இப்போது தமிழ் மக்கள் மெளனத்தை கலைத்துள்ளார்கள். 18 வருடங்களாக பத்திரிகையாளனாக இருந்தே ஈழ விடுதலை தொடர்பாக அறிந்து கொண்டேன்.

இந்நிலையில் உன் சகோதரர்கள் உயிரிழந்தமைக்கு நீ என்ன செய்தாய் என யாரும் கேட்ககூடாது என்பதற்காகவே திரைப்டங்களை தயாரிக்கிறேன் எனத் தெரிவித்தார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen