அமரர் தனபாலசிங்கம் தியாகராஜா 3ம் ஆண்டு நினைவஞ்சலி



3ம் ஆண்டு நினைவஞ்சலி   

  அமரர் தனபாலசிங்கம் தியாகராஜா
(முருகவேல் மகாவித்தியாலயம்- எழுவைதீவு)
மலர்வு : 24 ஏப்ரல் 1961 — உதிர்வு : 1 மார்ச் 2014

திதி : 27 பெப்ரவரி 2017


யாழ். எழுவைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் தியாகராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடன் இல்வாழ்வில் அகவை பத்தொன்பது இன்புற வாழ்ந்து
செய்வன எல்லாம் திருந்தச் செய்து,
சேயவர் சிரிக்கச் செய்து
நாட்கள், வாரங்கள், மாதங்களாகி
ஆண்டு மூன்று உருண்டோடி விட்டத்தப்பா!

ஆயிரம் பேர் ஆறுதலில் ஆறினாலும்
உங்கள் பிரிவை நெஞ்சம் மறுக்குதப்பா!
நேற்றுப் போல் இருக்கின்றது
நாங்கள் வாழ்ந்த இன்ப வாழ்க்கை நினைவுகள்
யார் கண் பட்டதோ
எங்கள் குருவிக்கூடு கலைந்தது!

அன்பிற்கே சாவு என்றால் அகிலமே தாங்காதப்பா!
என்னுயிர் அப்பா வந்து விடுங்கோ!
ஏங்கி நாம் தவிக்கின்றோம்.
காலத்தின் கட்டளையா? நோயின் காவுதலா?
கண்விழித்து மூடமுன்
காலன் உங்களை கவர்ந்தானோ அப்பா!!

சிப்பிக்குள் ஒரு முத்தென
அன்பு அமுதூட்டிக் கண்ணின்
இமை போலக் காத்து
வளர்த்த என் செல்ல அப்பா
ஓடி வாருங்கள்!!
உங்கள் அன்பிற்க்காய் என் அம்மாவுடன்
திக்கிக் தவித்துச் சிந்தை கலங்கி நிற்கின்றேன்!

கருவறையில் சுமந்தவள் கதறி நிற்க
தோளில்ச் சுமந்தவர் சோர்ந்து நிற்க
மருமகளே!  மாலதியே!
மாமாவுடன் வந்திடம்மா என
மலர்ந்து மணம் வீசி நின்ற மாலதியை
மனமுவந்து பற்றிக்கொண்ட மாயம் என்னப்பா
பக்குவமாய் பெற்று வளர்த்த உங்கள்  அம்மா
பாதியினில் பறிகொடுத்துப் பரிதலித்து நிற்கின்றாளே!

உடன் பிறந்தோரை மச்சான், மச்சாள்மார்
தம்பி, தங்கைமார், உற்றார் உறவினர் யாவரையும்
கண் நிறைந்த நீரோடு விட்டுக்
கானல் வழி போனதேனோ?

மாமா, மாமி என்று அன்பு மழை பொழிந்தும்
இல்லாது நீங்கள் போன பாதையைக் கூட
ரகசியமாகக் கூறி ஒரு மாதத்தில்
அழைத்துச் சென்றீர்களா?
அப்பா ஏன் எங்களுக்குச்
சொல்ல மறந்து சென்றீர்கள்!

உங்கள் அன்பான சிரிப்பையும் பண்பான வார்த்தையும்
எந்த ஜென்மத்தில் நாங்கள் கேட்பதப்பா?
என் ஆருயிர் அப்பா நீங்கள் வரமாட்டீர் என்று
தெரிந்தும் என் இதயம் நொந்து இமைகள் நனைகின்றது.

அப்பா என்று கூப்பிட்டு மூன்று ஆண்டு ஆனதப்பா!
சோறூட்டிய கைகளையும், தூக்கிய தோளையும்
நினைத்து! நினைத்து! வெம்புவது தெரிகிறதாப்பா?
உங்கள் பொன்னான வாயால்
எவ்வளவு கதைகளைத்தான் கூறுவீர்கள்?
சோதனைகள் வரும் வேளை எல்லாம்
சோர்ந்துவிடாதே என்று கூறிய
உங்கள் வார்த்தை என் காதில்
ஒலித்துக் கொண்டே இருக்கின்றது அப்பா!

அன்புத் தெய்வம் என் அப்பா
நீங்கள் கனவில் வரும் ஒவ்வொரு வேளையும்
அளவு மீறிய ஆனந்தத்தில் தூங்குவேன்
விடிந்தும் விடியாதது போல் ஆகி
என் மனம் தவிக்குதப்பா!

நீங்களும் எங்களை வெறுக்கவில்லை
நாங்களும் உங்களை மறக்கவில்லை
அனுதினமும் நினைத்து நினைத்து
எண்ணித் தவிக்கின்றோம்
நோயின் கொடுமை எதிர்த நோன்பாம உங்கள் விடாமுயற்சி
நீண்டு வாழ வைத்த எங்கள் மனதில்
அழியாச் சித்திரம் அன்பான எங்கள் செல்ல அப்பா
அமைதி அடையுங்கள் ஆண்டவனருகில் இருந்து!

என் அம்மாவையும், என்னையும்
தனியே விட்டு சென்றாலும் என் அப்பா
உங்கள் அன்பாலும் ஆசீர்வாதத்தாலும்
எங்களை வழி நடத்துங்கள் என் அப்பா!!

என்றும் உங்கள் காலடியில்
என் அம்மாவுடன் றோஜாப் பூவாகச் சொரிந்து நிற்கின்றேன்!!
அன்பு மனைவி பரதா, மகள் கார்த்தனா(ஜெர்மனி)

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

அன்னாரின் இல்லத்தில் 27-02-2017 திங்கட்கிழமை அன்று பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும் என்பதனை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

 
   

0 Kommentare:

Kommentar veröffentlichen