தமிழருரை யார் பாதுகாப்பது,,,???? அ,,தாஸ்

சிங்கள மொழி கற்பது நல்ல விடயம்தான் இன்றைய சூழ்நிலையில் சிங்கள மொழி கற்பது முக்கியமானதொன்று சிங்கள மொழி கற்கும் போது அது சிங்கள கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இல்லை அண்மையில் நடந்த சிங்கள மொழி கற்கும் வகுப்பில் எமது பட்டிப்பளை பிரதேசத்தில் சிங்கள கலாச்சாரத்தை பரப்பும் ஒரு உத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது மாணவர்களை சிங்கள கலாச்சாரப்படி உடை அணிந்து வரும்படி சிங்களம் கற்பிக்கும் ஆசிரியையினால் சொல்லப்பட்டது அவ்வாறு வராதஙர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டது

இவ்வாறு திட்டமிட்டு சிங்கள கலாச்சாரத்தை பரப்பும் உத்தியாகவே பார்க்கப்பட வேண்டும் தமிழர்களின் இன உணர்வை மழுங்கடித்து தனது கலாச்சாரத்தை தினிப்பதன் மூலம் மற்றும் ஒரு நிழல் யுத்தமாகவே இது பார்க்கப்பட வேண்டும் தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மாணவர்களிடம் இதனை தினிப்பதன் மூலமே இதை மிகவும் இலகுபடுத்தி கொள்ளலாம் என்பது அவர்களின் நோக்கம் யுத்தத்தின் மூலம் தமிழர்களை அழித்த அரசு தற்போது கலாச்சாரத்தையும் திணித்து தமிழர்களை ஒரு கலப்பினமாக காட்டுவதற்கே அரசு முற்படுகின்றது இதனை தமிழ் அரசியல் வாதிகளும் கண்டு கொள்வதில்லை இவ்வாறு தொடர்ந்து கொண்டு இருக்குமானால் கலாச்சாரம் , தனித்துவம் , தேசியம் என்று பேசுவதில் அர்த்தமில்லை எமது கலாச்சாரம் , மொழி , பண்பாடு , தனித்துவம் இவைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை முக்கியமானதொன்றாகும்.

0 Kommentare:

Kommentar veröffentlichen