தாயகத்தில் மக்களின் நிலமீட்ப்புபோராட்டதிக்ற்கு ஆதரவாக ஈழத்து சினிமா கலைஞர்கள் அழைப்பு!

எம் இனம் நாடு கேட்டு போராடி களைத்து இன்று நிலத்தையாவது போராடி மீட்கவேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்.இந்த நேரத்தில் ஈழத்து கலைஞர்கள் நாம் எமது பங்களிப்பு என்ன என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியவர்களாக வாழ்கின்றோம். அத்துடன் எமது மக்களுக்கு குரல்கொடுக்கவேண்டிய தார்மீக கடமைப்பாட்டில் வாழ்கின்றோம் என்பதை உணரவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆனால் எம்மில் பலரோ எம் மக்களின் வேதனையை வலியை உணர தவறியவர்களாக அவர்களது நியாயமான கோட்பாட்டை கணக்கில் எடுக்காமல் வாழ்கின்றோம் என்று தான் கூற வேண்டும்.

எமது கலையை நாம் வளர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டும் நாம் அந்த கலையை யாருக்காக வளர்க்கின்றோம்? என்ற கேள்வியை கேட்டால், எமது பதில் எமது மக்களுக்காக என்று வருகின்றது என்று கூறுவோமானால் எமது மக்களின் உணர்வை புரியாத நாம் எமது கலையை வளர்க்க போராடுகின்றோம் என்று கூறுவது கேலிக்குரியதாகவே நோக்கப்பட வேண்டும்.

மதிப்பிற்குரிய எமதருமை ஈழத்து கலைஞர்களே
எமது வேற்றுமைகளை களைந்து எமது மக்களுக்காக ஒன்றாக குரல்கொடுப்போம் வாருங்கள். இனி வரும் நாட்களில் எமது முகவலை பதிவுகள் படங்கள் என்பவை கேப்பாபுலவு மக்களின் உணர்வை தங்கியதாக மட்டும் இருக்கட்டும். ஈழதேசத்தில் வாழும் எமதருமை கலைஞர்கள் நீங்கள் தயவுசெய்து எமது மக்களுடன் நேரடியாக சென்று உங்கள் கரங்களை கொடுத்து அவர்களது போராட்டத்தை வலுப்படுத்துமாறு உரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

நாம் யார் எமது நோக்கம் என்ன? என்ற அடிப்படை திண்ம தேற்றத்தில் இருந்து மாற்றம் பெறாமல் நாம் எமது மக்களுக்காக குரல்கொடுப்போம் வாருங்கள்…
கடந்தகாலங்களில் எமது போராட்டம் எவ்வாறு அரசியல் கட்சிகளால் விலையாகிப் போனது என்ற கசப்பான உண்மை நாம் உணர்ந்து நின்றாலும், எமது மக்களின் உணர்வுகள் எவ்வாறு துரோகமயமாக்கப்பட்டது என்று முற்று முழுதாக அறிந்திருந்தாலும் இந்த போராட்டத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியையும் உள்வாங்காமல் செயற்படவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

அனைத்து_கலைஞர்களின்_தார்மீக_கடமைக்காக_ஒன்றுகூடுவோம்.

0 Kommentare:

Kommentar veröffentlichen