திரு தனஞ்சயன் தர்மராஜா
மண்ணில் : 11 மார்ச் 1958 — விண்ணில் : 30 மார்ச் 2017
திருகோணமலை உப்புவெளியைப் பிறப்பிடமகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தனஞ்சயன் தர்மராஜா அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி தியாகராயா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
லாவனியா, டிவ்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கொளரிமுகுந்தன், பாலகெங்கதரன், உதயசங்கர், உமையாள், கலாவல்லி, ஞானபூங்கோதை, கார்தியாயினி, திருமாலினி, சிறிதரன், சிவாரிநயனிஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ்வரி, குகனேஸ்வரி, ராதாமனோகரன், மதிவதனி, நவசிவராஜா, சிறிஸ்கந்தராஜா, சண்முகநாதன், காலஞ்சென்ற சிவஞானம், உதயராயன், தயாநிதி, திலகநிதி, கெங்காநிதி, கேசவராயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபர்ணா, திரிவேணி, அபிலா, நிவியா, அத்வைதன், அற்சகி, கீவன், சனகன், நசிகேதன் ஆகியோரின் அன்பு மாமாவும் தர்மவிலாசினி, மோசிகரன், கிருத்திகா, சிவாத்மணி, சர்வாத்மணி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Unit 515 – 567,
Scarborough Golf Club Rd,
Scarborough,
ON M1G 1H5,
Canada.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறி — கனடா
செல்லிடப்பேசி: +14165696109
கோதை — கனடா
செல்லிடப்பேசி: +16479277069
சிவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442036327539
உமையாள் — இலங்கை
தொலைபேசி: +94262221633
பத்மநிதி — கனடா
செல்லிடப்பேசி: +14164383984
சுவிசில் வாழ்ந்துவரும் செல்வா பிறந்தநாளையெட்டி  செல்வா உதயா குடும்பத்தினர் இன்று முல்லைத்தீவில் உள்ள 25க்கு மேல்பட்ட  மளழைகளுக்கு பாடசாலை  உபகரணங்கள் வழங்கி அவர்கள் கல்விக்கான உதவியை செய்துள்ளுது மகச்சிறப்பு ,

இவர் போல் ஒவ்வெருவரும்சிறார்களின் படிப்புக்கு உதவி செய்தால் நிச்சயம் எமது மண்ணில் சிறார்களின் கல்வி சிறக்க ஓர் சிப்புப் பணியாகும்
செல்வா மகிழினியின் பிறந்த நாளுக்கும் இவர்களின் சிறப்பானபணிக்கும் இதுபோன்ற பணிகள் தொடர வாழ்த்துக்கள் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் இணைந்துவாழ்தி நிற்கின்றனர் வாழ்த்துக்களுடன் கலைஞர் எழுத்தாளர் நாடகபயிற்றிவிப்பாளர் பொதுத்தொண்டாளர்  குமாரு. யோகேஸ் ஈழத்தமிழன் இணையம்
































தமிழீழ விடுதலைப் புலிகள் விருந்தோம்பல் பண்பில் மிகவும் சிறந்து காணப்பட்டார்கள் எனவும், அவர்களின் விருந்தோம்பலை கண்டு வியந்திருந்ததாகவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
எவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலும், விடுதலைப் புலிகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து காணப்பட்டனர் என அவர் கூறியுள்ளார்.
அண்மையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இருந்த நல்லிணக்க செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனை சந்திக்க முடிந்தது.
இந்த சந்திப்பின் போது எனக்கு விருந்துபசாரம் வழங்கப்பட்டது. அதை என்னால் மறக்க முடியாது. மேலும் எவ்வாறான நிலையிலும் தமிழ் மக்கள் விருந்தோம்பல் பண்பை கைவிட மாட்டார்கள் என அறிந்துகொண்டேன்.
மேலும், இதன் போது தமிழ்ச் செல்வன் என்னை ஒரு நாள் தங்கியிருந்து விட்டு செல்லுமாறு கூறினார். இதன் போதே அவர்களின் துன்பமான வாழ்க்கையை அறிந்துகொள்ள முடிந்தது.
மின்சார வசிதிகள் கூட இருக்கவில்லை. இதேவேளை, யாழ். மக்கள் புத்திசாலிகள் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இப்போது முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் இன விவகாரம் கையாளப்படுகிறது.
இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவர்களே முக்கூட்டுத் தலைவர்கள்.
மகிந்த ராஜபக்­வை தேர்தலில் வீழ்த்துவது, அவருக்கு நிகராக மைத்திரிபால சிறிசேனவை தேர்தல் களத்தில் இறக்குவது, மைத்திரி – ரணில் இணைந்த கூட்டு அரசை நிறுவுவது, இரா.சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது என்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியாக இருந்து செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க என்பது மறுக்க முடியாத உண்மை.
என்னுடன் போட்டியிடும் அந்த வீரன் யார்? அவரை அறிய விரும்புகிறேன் என்று மகிந்த ராஜபக்ச கர்ச்சித்த போது, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானம் சந்திரிகா குமாரதுங்கவால் எடுக்கப்பட்டிருந்தது.
இதற்குப் பின்னணியாக சில வெளிநாடுகளும் இருந்தன என்பது வேறு கதை.
ஷ மைத்திரிபால – ரணில் – சந்திரிகா என்ற முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் மகிந்த ராஜபக்சவுக்கான அரசியல் தோல்வி நிறைவேற்றப்பட்டது.
இந்த வெற்றியை அடுத்து போர்க்குற்ற விசாரணையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பையும் படைத்தரப்பையும் காப்பாற்றுவது என்ற விடயத்தை முக்கூட்டுத் தலைவர்களும் மிகச்சிறப்பாகக் கையாண்டனர்.
இதற்கு இரா. சம்பந்தருக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவி மிகுந்த உதவி புரிந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வருட கால அவகாசம் எல்லாப் பிரச்சினையில் இருந்தும் தப்புவதற்கான வழியாயிற்று.
இவை நடந்து முடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையர் தனது தாளத்தை மாற்றத் தொடங்கி விட்டார்.
ஆம், போர்க்குற்றம் தொடர்பில் படையினர் மீது விசாரணை நடத்த முடியாது. அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது என்பதாக சந்திரிகாவின் கதை உள்ளது.
வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் அதனை அப்படியே தாட்டுவிடுவதுதான் முக்கூட்டுத் தலைவர்களின் திட்டம். இது சந்திரிகாவூடாக வெளிப்பட்டுள்ளது.
போர்க்குற்றம் தொடர்பில் படையினருக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறும் சந்திரிகா அம்மையார்,அதேநேரம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்துக் கூறுகையில், அவர்கள் குற்றம் செய்ததனாலேயே தண்டனை அனுபவிக்கின்றனர் என்கிறார்.
ஆக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதேயன்றி வேறு எதுவும் நடக்காதென்பது தெட்டத் தெளிவாகிறது.
அதாவது சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணை நடக்கும். அவர்கள் குற்றவாளிகளாக அறிக்கையிடப்படும். இந்த வேலையை இலங்கை அரசு நியமிக்கின்ற விசாரணைக் குழு செய்து முடிக்கும்.
அதேசமயம் படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர்கள் வன்னி யுத்தத்தில் எவரையும் சுட்டுக்கொல்லவில்லை என்பதாக முடிவு இருக்கும்.
இதுவே இரண்டு வருட கால அவகாசத்தில் நடக்கும்.
ஆம், சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக எது செய்தாலும் அது குற்றமில்லை. ஆனால் சிங்களவர்கள் எந்தக் குற்றத்தை தமிழர்கள் மீது சுமத்தினாலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்குத் தண்டனை கிடைக்கும். இதுவே நடக்கப் போகிறது.
அட, பரவாயில்லை. தமிழர்கள் எதை இழந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்காக்கி இருக்கிறார்களே! அது போதாதா என்ன?
திரு சின்னத்தம்பி சண்முகம்

(விஜயன்)

தோற்றம் : 22 சனவரி 1950 — மறைவு : 26 மார்ச் 2017
யாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் பருத்தித்துறை வீதியை  வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சண்முகம் அவர்கள் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, குணமணி(மணி) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கனகு, நல்லம்மா(நல்லூர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,

திலகா, துஸ்யந்தன், பிரசனியா கேதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயரட்ணம்(நோர்வே), மகேஸ்வரன்(கட்டார்), பூபதி, கோமதி(சிலாபம்), ரவீந்திரன்(ரவி- பிரான்ஸ்), கௌரி(பப்பி- சிலாபம்), சறோஜினி(கனடா), சேகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

இலட்சுமி, ராமு, சுந்தரலிங்கம்(விஜயன்), கமலாதேவி, பவானி, பாலா, ஜோசெப், சித்திரா, வேதநாயகம், பெனடிற், கவிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நல்லூர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெகதீபன்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி:     +94771831175
துஸ்யந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:     +94773303397
ரவீந்திரன்(ரவி-சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:     +33751078503
சேகர்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:     +33652285138
ஜெயா — நோர்வே
செல்லிடப்பேசி:     +4751110113
சறோ- — கனடா
செல்லிடப்பேசி:     +14163661262
திரு பிறவுன் கிறிஸ்ரியன் அன்ரன் பரிதிமாறன்

பிறப்பு : 8 டிசெம்பர் 1970 — இறப்பு : 23 மார்ச் 2017
   

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், மூளாய் லேன் குருசோ வீதி, சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட பிறவுன் கிறிஸ்ரியன் அன்ரன் பரிதிமாறன் அவர்கள் 23-03-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிறவுண் கிறிஸ்ரியன், சூரியகுமாரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஞானாம்பிகை(ஒட்டகப்புலம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரீனா மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ராவின் அவர்களின் அன்புத் தந்தையும்,

தனக்குமார்(லாவன்யா ஸ்ரோஸ் உரிமையாளர்), தர்சன்(பெல்ஜியம்), மனோசுதன்(Softlogic Life- பிராந்திய முகாமையாளர்), ஜனகன்(பின்லாந்து), திலகன் (சூரியா ஹோட்டல்), லாவன்யா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயகுமார்(ஜெர்மனி), சந்திரகுமார்(பிரித்தானியா), வசந்தகுமார்(அஞ்சலகம்- வசாவிளான்), சதீஸ்குமார்(கனடா), அனுஷா, மாலினி(பெல்ஜியம்), சுஜிவினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்), சுமதி(யாழ்ப்பாணம்), நிக்சன்(கனடா), புனிதம்(ஜெர்மனி), சுசி(பிரித்தானியா), அனோஜா(கியுடெக்- யாழ்ப்பாணம்), சியாமிளா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஞ்சலோ, வெரோனா, ஏய்மி, ஏய்ரன், றொஷேல், றொஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிசா, அகிரா, எனுசா, எனுஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

இம்மானுவேல் பிள்ளை, சோதிமலர்(All Ceylon Distributors) ஆகியோரின் நேசமிகு பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-03-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு யாழ். மரியன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 03,
மூளாய் வேன்,
குருசோ வீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மரீனா மாலினி(மனைவி) — இலங்கை
தொலைபேசி:    +94212220225
சூரியகுமாரி — இலங்கை
தொலைபேசி:    +94212222841
மனோ(சகோதரன்) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94773396441
வசந்தன்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94779905347
ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தாலும் இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்’ என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை தொடர்பிலான அறிக்கை தொடர்பிலும், கலப்பு அரசாங்கம் தற்போது நாட்டில் முன்னெடுக்கவுள்ள நகர்வுகள் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேச கட்டளைகளுக்கு அடிபணிய நாடும் ஒருபோதும் தயார் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள டிலான் பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியின் நகர்வுகள் மிகவும் மோசமான வகையில் அமைந்துள்ளதென குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறு சென்றால் வெகு விரைவில் தேசிய அரசாங்கத்தை கலைக்க வேண்டிய தேவை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு  பிரதேச மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்கிறது.



காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர்.



இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் அவ்வாறே வாழ முடியாது. தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் என வலியுறுத்தி போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.



அத்துடன்  தமக்கான  காணி உரிமம்  கிடைக்கும் வரை  போராட்டம் தொடரம் என  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மக்கள் தெரிவித்துள்ளனர்
யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் Baroness Joyce Anelay தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் தொிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்த சில முக்கிய விடயங்களை ஐ.நா  மனித உரிமைப் சபையின் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியத் தலைவரின் மீது கொண்டுள்ள தீராத பற்றை பலர் வெவ்வேறு வழிகளில் வெளிக்காட்டுகின்றனர்.

அவ்வகையில் தமிழின தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தோற்றம் செதுக்கப்பட்ட தலைவாயில் அமைத்து பெருமை கொள்கின்றார்.
நண்பர் வழக்கறிஞர் சதீஷ்குமார் இல்ல புதுமனை புகு விழாவில்.
இவரின் சாமியறையிலும் மாவீரர்களின் படங்களும் இருக்கின்றன.
மானத் தமிழனுக்கு வாழ்த்துக்கள்..!
யாழ் திருநெல்வேலியைபிறப்பிடமாக கொண்ட  ராசமணி  அவர்கள்  ஞாயிறுக்கிழமை26.03.2017இறைவணடி சேர்ந்தார்,

 அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் மனைவியும் , (காலஞ்சென்றவர்களான தர்மராஐா, மோகனதாஸ்,)   மன்மதராஐா, விஐயகுமாரி, ஐெயக்குமாரி,சூரியகுமாரி ,ராஐகுமாரி ,ஆகியோரின் தாயாரும்

 ஐெயக்குமாரன் ,அன்னலிங்கம்,   பத்மாவதி, குஞ்சு,  காலமான ரவீந்திரன்  ஆகியோரின்மாமியாரும்

சுதர்சினி, சுதர்சன், சுமிதா,  சந்தியா, றம்மியா, மது, தீபன், மதி, பிரதீஸ்  ,வாகீஸ்,  சதீஸ், தீலிபன், சோபிக, கஐி  ஆகியோரின் பாசமிகு  பேத்தியாரும் ஆவார்´

கிரியை 
வியாழக்கிழமை  திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் வீதியில்  உள்ள இல்லத்தில்  இடம்பெற்று

தகனம்

10.மணிக்கு பால்பண்ணை மயாணத்தில் இடம்பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அடக்கம்பற்றிய விபரம் பின் அறிவிக்கப்படும் தகவல் குடும்பத்தின்சார்பில் ‌ஐெயக்குமாரன்

யாழ் ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனி  ஸ்சலோன் நகரை வதிவிடமாகவும் கொண்ட பல்துறைக்கலைஞர் என். வி சிவநேசன் அவர்கள் 25.03.2017. பிறந்த நாளை தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகளுடன் உடன் பிறந்தோர் உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்

  இவரை அன்பு மனைவி,   அன்புப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் , மசன் மார் மற்றும்  ,ஊர் உறவினர்களும் நண்பர்களும்   இணைய நண்பர்களும் இணைந்து வாழ்திநிற்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில்  இவரை . இறை அருள் பெற்று என்றும் இன்பமாய் அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வெனவாழ்த்துகின்றனர்



 இன்று இவர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நிர்வாகத்தில் நடை பெறும் ஸ்சலோன் நகர் தமிழாய மாணவர்கள் ஆசிரியர்குளுடன்  சிற்றுண்டி இணைந்து உண்டு இவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்

இவரைஈழத்தமிழன்  இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
னார் முள்ளிக்குளம் கிராம மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய இரண்டு பிரதான தொழில்களும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் உடனடியாக குறித்த மக்களின் நிலங்களை விடுவிக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால்  அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமை காலை ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று சனிக்கிழமை மூன் றாவது நாளாகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியோர் நேற்று சனிக்கிழமை காலை முள்ளிக் குளம் கிராம மக்கள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பல வருட காலமாக முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் தமது பூர்வீக கிராமத்தை இழந்து மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நூற்றுற்கும் மேற்பட்ட குடும்பங்கள்  நிர்க்கதி அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றன.
எனவே  அரசாங்கம் 2015 ஆம் ஆண்டும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கி மக்களின் காணி விடுவிப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் தற் போது இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது மீண்டும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது.
எனினும் அரசாங்கம் இதற்காக இரண்டு வருட காலத்தை இழுத்தடித்து ஏமாற்றாமல் உடனடியாக மக்களினுடைய காணி, அதாவது முள்ளிக்குளம் மக்களாக இருக்கலாம், கேப்பாப்பிலவு மக்களாக இருக்கலாம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு-கிழக்கு மக்களாக இருக்கலாம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பொது மக்களின் சொந்தமான காணிகளை அரசாங்கம் எவ்வளவு விரைவாக மக்களின் காணிகளை கையளிக்க முடியுமோ அதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.



யாழில் வளர்ந்து வரும் ஊடகக் கலையின் இன்னொரு பரிமாணம்..
யாழ்ப்பாணம் சென்ற உயிர்வரை இனித்தாய் திரைப்படக் குழுவினர் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு புலம் பெயர் தமிழ் திரைப்பட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டியதாகும்.

யாழில் உள்ள இளம் ஊடகவியலாளர்கள் நாம் என்றுமே எதிர்பார்த்திராத வகையில் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளார்கள்.
கரை புரண்டு ஓடுகிறது இளம் ஊடகவியலாளர் எழுச்சி இது புலம் பெயர் நாடுகள் அறியாத பக்கமாக இருக்கிறது.

மரபு மிக்க பத்திரிகைகள் தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்புக்களை கடந்த புதியதோர் தலைமுறை உருவாகி வருவதன் அடையாளமாக இந்த எழுச்சி காணப்படுகிறது.

யார் தருவார் இந்த அரியாசனம் புவி அரசோடு நமக்கும் ஒரு சரியாசனம்..
போராட்டமும் இவர் கவியும்
புதுமைகள் பல கண்டு
புரட்சிகள் பல புரிந்து
பாக்கள் பல எழுதி
புரட்சிக் கவிகளோடு
புவியெல்லாம் வலம் வந்த
ஈழத்துக் கவிஞர் என
மார்தட்டி பெருமிதம் கொள்ளும்
கவிஞர் புதுவை பற்றி சொல்ல
போதவில்லை எனக்கு வயது
காணவில்லை சொற்கள் புதிது
ஆக்கம் ஜெசுதா யோ
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.!!!

1.ஆதவன்
2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
3.அம்பி ( செயற்பாடு தெரியாது)
4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),
5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),
7.பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),
8.V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
9.Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)
10.பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
11.பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )
12.பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
13.பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
14.பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
15.பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்கள
ை பராமரித்தவர்)
16.பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
17.பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )
18.Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)
19.எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
20.எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
21.வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
22.கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
23.கரிகரன் ( செயற்பாடு தெரியாது)
24.இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
25.இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
26.இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)
27.இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
28.இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
29.இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
30.இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
31.இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
32.இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
33.இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
34.இசைபிரியா ( ஊடக பிரிவு)
35.ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
36.ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
37.காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
38.கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
39.கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
40.கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)
41கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
42.கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
43.கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
44.குயிலன் ( இராணுவ புலனாய்வு)
45.குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
46.குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
47.குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
48.லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
49.மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
50.மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )
சசிகலா லோகநாதனின்  அவர்கன் இன்று யேர்மனில் உள்ள  லுனன் நகரில் தனது பிறந்தநாளை  கணவன் பிள்ளைகளுடனும்  உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,

 இவர் வாழ்வில் சிறந்து நலனுடன் வாழ அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர்
  ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

சுவிசில் வாழ்ந்துவரும் ‌கெங்காதரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிராமி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பெற்றார் , உற்றார் உடன்பிறந்தோர், உறவுகள், நண்பர்களுடன் கூடிக் கொண்டாடுகின்றார்,


 இவர்வாழ்வில்
சிறந்தோங்கி
கல்வியிலும்
கலைகளிலும் சிறந்து
நல்வாழ்வு வாழ வாழ்த்தும் இவ்வேளை இவரை குமாரு. யோகேஸ் குடும்பமும்வாழ்தி நிற்க
ஈழத்தமிழன்  இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இவரின் பிறந்தநாளையோட்டிய  தகவலுடன்   நடிகர் ,கவிஞர் , நாடகபயிற்றுவிப்பாளார், பெதுத்தெண்டாளர்  குமாரு. யோகேஸ் அவர்கள் எழுதி இணைப்பு கீழ்பார்க்கலாம்


26/3/2017.இன்று பிறந்தநாளை கொண்டாடும் சுவிஸ் சூரிச் வானம்பாடி
இசைக்குழுவின் இயக்குனர் மற்றும் சிறந்த
சவுண்ட் அமைப்பாளருமான எனது அன்புக்குரிய அண்ணன் கெங்காதரன்
அவர்களின் செல்வப் புதல்வி அபிராமி அவர்களின் பிறந்தநாள் நிகழ்வை இன்று
எமது தாயகத்தில் மிகவும் வறுமை கோட்டின்
கீழ் படிக்கும்.23. மாணவர்களுக்கு பாடசாலை
உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார் இன்று
இலங்கை நேரம் 4: மணிக்கு இந்த நிகழ்வு
புகழருவி முன்பள்ளியில் இந்த நிகழ்வு  இடம்பெற்றுள்ளது எனவே இந்த நற்பணியாற்றும்
இவர்களுக்கு எமது நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம் அன்பு உறவுகளே..

கவி வரிகள்.
........................
கைககளாலே அரவைணத்து
கால்களாலே உலகம் சுற்றி,
இசையினிலே மெய்மறந்து,
அடக்கத்திலே சிறந்து விளங்கி,
கடமையிலே மிகச் சிறந்து,
அன்பினாலே சுடர் ஏற்றி,
கவிதையாக வாழ்ந்து காட்டி,
பிறருக்கும் பகிர்ந்தளித்து
பல்லாண்டு காலம் நீ வாழ்க!
இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் கொழும்பு டவுன்ஹோலில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகில் பயன்படுத்தப்படும் இணைய தொடர்புகளுடனான "ஸ்மார்ட் நகரம்" என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேசிய தொலைப்பேசி வலையமைப்பான மொபிடெல் கண்டுபிடிப்பு பிரிவினால் இந்த பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு இடத்தில் இருந்தும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு உபகரணத்தையும் பயன்படுத்தி இணையத்துடன் இணைய கூடிய Internet of Things என்ற தொழில்நுட்பத்தின் கீழ் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரத்தை ஸ்மார்ட் நகரமாக்கும் நோக்கில் மொபிடெல் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது நடவடிக்கை இதுவாகும்.
இந்த ஸ்மார்ட் பேருந்து நிலையத்தில் அதிவேக இணையத்தள வசதிகள் வழங்கப்படுகின்றது. நிலையத்திலுள்ள பொருள் வழங்கும் இயந்திரத்தின் ஊடாக பண பயன்பாடின்றி குளிர் பானங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
அதன் முதற்கட்ட நடவடிக்கையாக நீர் தேவைப்பட்டால், பேருந்து நிலையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத்திற்கு ‘water’என குறுந்தகவல் ஒன்றை அனுப்பி வைத்து, அதற்கு பதிலாக கிடைக்கும் இலக்கத்தை இயந்திரத்தில் உள்ளடக்கினால் அந்த இயந்திரம் தனது சேவையை வழங்கும்.
இதற்கு மேலதிகமாக அருகில் உள்ள ஏ.டி.ம் இயந்திரங்கள், பேருந்துகள், ரயில் நிலையங்கள் தொடர்பான தகவல்களையும் இங்கு பெற்றக் கொள்ள முடியும்.
இதேபோன்று பல ஸ்மார்ட் பேருந்து நிலையங்களை இலங்கை முழுவதும் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.