செந்தணலின் 19வது படைப்பு “செருக்கிய புலவான்”

ஒட்டுசுட்டான் செந்தணல் வெளியீட்டகத்தின் 19வது படைப்பாகிய “செருக்கிய புலவான் ”எனும் இறுவெட்டு 24.02.2017அன்று அதாவது சிவராத்திரி தினத்தன்று முல்லை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான பெரியகுளம் கிராமத்தின் பிள்ளையார் ஆலயத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

–கிராமத்தலைவரும் ஆலய பரிபாலனசபைத்தலைவருமாகிய சத்தியநாதன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.
–நிகழ்ச்சிகளை செந்தணல் வெளியீட்டக இயக்குனர் வன்னியூர் செந்தூரன் தொகுத்து வழங்கினார்.

–பிரதம விருந்தினராக மூத்த கல்விமானும்,ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளருமான ச.தில்லையம்பலம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
–கௌரவ விருந்தினராக ஓய்வுபெற்ற கிராம அலுவலரும் ,முல்லைமண்ணின் மூத்த கலைஞர்களிலொருவருமான குமுழமருதன்(தெய்வேந்திரம்பிள்ளை) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
–வரவேற்புரையை மாணவி ஜதுசிகா வழங்கினார்.
–முதல் பிரதியை பிரதம விருந்தினரும்,ஆலயப்பூசகரும் இணைந்து வெளியிட்டு வைக்க ஆலய பரிபாலனசபைத்தலைவர் பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து சிறப்புப்பிரதிகள் வழங்கப்பட்டது.
–அத்துடன் செந்தணல் வெளியீட்டகத்தினரால் மூத்த கலைஞர்கள் இருவருக்கும், கிராம சேவகர்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டது.

–விருந்தினர் உரையைத் தொடர்ந்து ஏற்புரையுடன் நன்றியுரையினை பெரியகுளம் கிராம அலுவலரும் ,இறுவெட்டின் பாடலாசிரியருமான கண்ணகி மைந்தன் ரஞ்சித் அவர்கள் வழங்கி நிகழ்வை நிறைவு செய்தார்.
கிராமமக்களுடன் எளிமையாக நடந்துமுடிந்த ஒரு மகிழ்வான நிறைவான வெளியீடாக அமைந்தது.
–வன்னியூர் செந்தூரன்–
செந்தணல் வெளியீட்டகம்

0 Kommentare:

Kommentar veröffentlichen