பிரமாண்டமாக திறப்பு விழாவிற்கு தயாராகிறது கனடா ஈழமக்கள் ஆதரவில் மாற்றுத்திறனாலிகளிற்கான நிர்வாக தொழிற்பயிற்சி கட்டிடம்

தமிழர் தாயகத்தில் தாயக விடுதலைப் பயணத்திலும் ஏனைய அசம்பாவிதங்களிலும் பாதிப்புற்று மாற்றுத்திறனாலிகளாகி வாழ்க்கையில் பெரும் சவாலைஎதிர்கொள்ளும் எம் உறவுகளின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கபபுற்றோர் அமைப்புதன் பணிகளை விரிவாக்கி செயற்பட அமையவிருக்கும் நிர்வாக தொழிற்பயிற்சி கட்டிட நிர்மாண வேலைகள் வெறும் 2 மாதங்களிலேயே முடிவடைந்து கட்டிடதிறப்புவிழாவிற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
 
கட்டிடத் தொகுதி நிர்மாண்திற்கான முழுப்பொறுப்பை கனடா வாழ் ஈழ உறவுகள் ஏற்றிருந்தனர். கனடா பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தினரும் பிரம்ரன் தமிழ்முதியோர் அமைப்பினரும் இணைந்து இதற்கு தேவையான 50 லட்சத்திற்கு மேற்பட்ட தொகையை திரட்டி வழங்கியுள்ளனர். இதற்காக பங்களிப்பு நல்கியஅனைத்து நல்லுள்ளங்களின் ஆதரவுக்கரங்களையும் அன்புடன் பற்றிக் கொள்வதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கழுத்துக்கு கீழே இடுப்புக்கு கீழே இயக்கம் அற்றவர்கள் இவ்வமைப்பால் பராமரிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லதைதீவுவவுனியா மன்னார் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிர்வாக பொறுப்பாளர்களைக் கொண்டு அவ்வாறு பாதிப்புற்றுள்ளோரைஇவ்வமைப்பு தனது கவனப்பிற்குள் கொண்டுவந்துள்ளது. இச்செயற்பாடுகளை இணைக்கும் தலைமையகமாகவும் பாதிப்புற்றோருக்கான சுயதொழில் பயிற்சிகளைவழங்குதல் முதல் கொண்டு பல்வேறு நலத் திட்டங்கள் இங்கிருந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
 
கட்டிடம் தயாராகியுள்ள நிலையில் தொழில் பயிற்சி உபகரணங்களை பெற்றுக்கொள்ளல் மற்றும் பாடநெறிகளைத் தயாரித்தல் போன்றவைமுன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான மேலதிக நிதியை தமிழ் நலனில் அக்கறையுள்ள தமிழ் உறவுகள் அனைவரும் தந்துதவுவார்கள் என்றும்இப்பணியை விரைந்து முடிக்க அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்பதாக உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கபற்றோர் அமைப்பினர்   தெரிவித்தனர். இதற்கான பணியை பிரம்ரன் தமிழ் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களும் பிரம்ரன் முதியோர் சங்க நிர்வாக உறுப்பினர்களும் விரைந்து முன்னெடுத்துள்ளனர்.
இப்புனிதப்பணியில் தம்மையும் இணைத்து பங்களிப்பு செய்ய விரும்பும் நல் உள்ளம் கொணடவர்கள் அனைவரையும் உடன் தொடர்பு கொள்ளுமாறு அவர்கள்வேண்டியுள்ளனர். தொடர்புக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 647 873 0732 அல்லது மின்அஞ்சல் info@bramptontamil.ca or Uyirilaisci.org@gmail.com  இதுகுறித்த மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் அறியத்தரப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen