தமிழினப் படுகொலையை திரையில் காட்டிய மலேசியப் பெண்ணுக்கு அதிகரிக்கும் ஆதரவுகள்

தமிழினப் படுகொலை குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட மனிதவுரிமை ஆர்வலர் லீனாஹென்றி மீதான வழக்கை கைவிடக்கோரி மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

திரைப்படக் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கையெழுத்திட்ட குறித்த ஆட்சேப மனு சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தில் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, புகழேந்தி தங்கராஜ், பத்திரிகையாளர் பா.ஏகலைவன், குறும்பட இயக்குநர் வீ.மு.தமிழ்வேந்தன், இணை இயக்குநர் ஆனந்த் ஆகியோர் கையளித்துள்ளனர்.

தமிழின அழிப்பு குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதற்காக லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட இருக்கிற நிலையில், குறித்த வழக்கை கைவிடுமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலேசிய அரசே! இனப்படுகொலை செய்த இலங்கைக்குத் துணை போகாதே! நீதியைத் தண்டிக்காதே! லீனாவை விடுதலை செய்! என்ற தலைப்பில் குறித்த மனு காணப்படுகின்றது.

0 Kommentare:

Kommentar veröffentlichen