சர்வசேத்திற்கு அடிபணியப்போவதில்லை : நீதி அமைச்சர் விஜேதாஸ

யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பாக சர்வதேசம் எமக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது. எமது நாட்டு மக்களின் மீது எமக்குள்ள அக்கறையை சர்வதேசத்திற்கு இருக்க முடியாது. சர்வதேசம் சொல்வதற்கு எல்லாம்  நாம் அடிப்பணிய போவதில்லை என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் உறுதிபடத் தெரிவித்தார்.



யுத்தக்குற்ற விசாரணையையும் நல்லிணக்கத்தையும் ஒன்றிணைக்க முடியாது. இது ரயில் தண்டவாளம் போன்றது. அவை இணையும் பட்சத்தில் மீண்டுமொரு யுத்த சூழலே தோற்றம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று கைமீட்க முடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் எனும் ஏதுவின் மீது கைமீட்டல் மற்றும் இலங்கை அரசாங்கம், யுக்ரேன் அரசாங்கத்திற்குமிடையே குற்றவியல் கருமங்களின் பரஸ்பர சட்ட உதவியளித்தல் பற்றி ஏற்படுத்தப்பட்ட கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான சட்டமூலங்களை சமர்ப்பித்து    உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen