விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் வீதிகளில் அலைய வேண்டி இருந்திருக்காது

விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் மக்கள் வீதிகளில் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி – சரஸ்வதிகுடியிரப்பு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நிரந்தரக் காணியின்றி தவிக்கும் சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் குறித்தும் உரிய அதிகாரிகள் அக்கறை செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் குறித்த பகுதியில் குடியேறினர்.

தங்குவதற்கு காணிகளற்ற நிலையில் காணப்பட்ட குறித்த மக்களுக்கு, புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களது காணிகளில் ஒரு தொகுதி காணி தமிழீழ விடுதலைப் புலிகளால் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்தக் காணிகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.

குறித்த காணிகளில் வசித்து வந்த மக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் குடியேறி 7 வருடங்கள் கடந்துள்ள போதிலும்,

190 குடும்பங்களுக்கு மேல் வசித்துவரும் சரஸ்வதி குடியிருப்பு மற்றும் ஜொனிக்குடியிருப்பில் 20 வருடங்களுக்கும் மேலாக வசிக்கும் மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரம் இதுவரை வழங்கப்படவில்லை என்று ஆதங்கம் வெளியிட்டுள்ள மக்கள், தமக்கான வீட்டுத்திட்ட வசதியைப் பெற்றுத் தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் நிம்மதியாக வாழ்ந்த தாங்கள் தற்போது நிரந்தர காணி அற்ற காரணத்தால் சகல விதத்திலும் புறக்கணிக்கப்பட்டுவருவதாக ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen