பிக்குவின் காலில் விழும் கனடா தமிழர்கள்-ராஜதந்திரத்தின் உச்சம்(காணொளி)

கடந்த ஆண்டுகளைவிட ஜெனீவாவில் தமிழர்களுக்கான
நீதிதேடலை வலியுறுத்தி தமிழர்கள் தாயகத்திலும் புலத்திலும் போராட்டங்களை முன்னெடுத்துவரும் வேளையில் அதற்கு மாறாக இலங்கையில் அமைதி நிலவுகின்றது நாங்கள் முதலீடு செய்யப்போகின்றோம் என ஒரு தமிழர் குழு சிறிலங்கா விரைந்துள்ளது.

இங்கு வந்த குழுவினர் கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் பௌத்த தேரரிடம் வீழ்ந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று பின்னர் வடக்கிற்கு விரைந்து அங்கே ஆளுனரை சந்தித்து தமது விஜயத்தின் நோக்கத்தை அரசு விரும்பியதைப்போலவே கச்சிதமாக செய்து முடித்துள்ளனர்.

இவர்களின் இந்த இரட்டை முக நகர்வை முதலிலேயே கண்டுகொண்ட சில புலம்பெயர் தமிழர்கள் கொடுத்த அழுத்தத்தின் பயனாக அங்கு பயணம் மேற்கொள்ளவிருந்த பாராளுமன்ற குழுவிலிருந்து இருவர் விலகியிருந்தனர். இருந்தும் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக்கட்சி கொடுத்த நிகழ்ச்சிநிரலை செம்மையாக நடைமுறைப்படுத்திவருவதாக கொழும்பிலுள்ள தமிழ்க்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


அண்மையில் வடமாகாண முதலமைச்சர் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டபோது அந்த பயணத்தை குழப்பும் நோக்கில் கனடா தமிழரசு கட்சி கிளையால் அதே வாரத்தில் அவசர அவசரமாக கனடாவிற்கு வரவழைக்கப்பட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற,மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கலாக 36பேர் அங்கு சென்று முதலமைச்சர் ஓரிடத்தில் சந்திப்புக்களை மேற்கொள்ள வேறு இடங்களில் வட கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான சந்திப்புக்கள் என்ற போர்வையில் பல சந்திப்புக்கள் நடைபெற்றிருந்தன.

இங்கு வருகைதந்த குழுவினர் முதலாவதாக இலங்கை அரச தலைவர்களை சந்தித்து பின்னர் கண்டியிலுள்ள மல்வத்த பீடாதிபதியை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி பின்னர் வடக்கிற்கும் சென்று முதலமைச்சரை சந்திக்காது ஆளுனரை சந்தித்தோடு நிற்காமல் ஊடகங்களிலும் ஆளுனர் ஒரு நல்லெண்ணம் கொண்ட சிறந்த மனிதர் என்ற நற்சான்றிதழையும் வழங்கியிருக்கின்றனர்.

ஐனிவா சூடுபிடிக்கும் நிலையில் தன்னை தற்காத்துக் கொள்ள முயலும் சிறீலங்கா அரசின் முயற்சிகளுக்கு பலியாகி உங்கள் மக்களை தொடர்ந்தும் நிர்க்கதிக்கு தள்ளப்போகின்றீர்களா? மக்கள் நலனா? சுயநல வர்த்தக நலனா? நல்லாட்சி அரசின் நரித்தந்திரத்திற்குள் பாலியாகிப்போய்விடாதீர்கள் என்பதே அத்னைது தமிழ் உறவுகளின் நிலைப்பாடாகும்.

0 Kommentare:

Kommentar veröffentlichen