தொழில் முன்னேற்றத்தின்போது சமூக, கலாசார விழுமியங்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

யாழ்ப்பாண அபிவிருத்திக்கான 5 வருடத் திட்டத்திற்கான உலக வங்கியின் நிதியிலான 4 வகையிலான  திட்டங்களும் 65 மில்லியன் அமெரிக்க டொலரில்  உடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண அபிவிருத்திக்கான நிதிகள் உலக வங்கியினால் அனுமதிக்கப்பட்டதனையடுத்து உடனடியாகவே இத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான உத்தியோக பூர்வ கலந்துரையாடல் நேற்றைய மினம் வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் உலக வங்கியின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் சியுஜெரி ஜென் தலமையிலான குழுவினரும் வட மாகாண முதலமைச்சர் தலமையில் வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் , யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சுதர்சன் , மாநகர ஆணையாளர் வாகீசன் உள்ளிட்ட குழுவினரும் பங்கு கொண்டிருந்தனர். இச் சந்திப்பின் நிறைவிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச் சந்திப்புத் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணத்திற்கான உலக வங்கியின் தந்திரோபாய திட்டத்தின் கீழ் 5 ஆண்டுத் திட்டத்ரினை  உலகவங்கியானது 55 மில்லியன் அமெரிக்க டொலரினையும் இலங்கை அரசு இதற்கான வரி விலக்கு மற்றும் அனுமதிகளிற்கான விலக்களிப்பு வகையில் 10 மில்லயன் அமெரிக்க டொலருமாக மொத்தம் 65 மில்லியன் ரூபாவில் திட்டங்கள் யாழ்ப்பாணத்தில்  முன்னெடுக்கப்படவுள்ளன.

இவற்றின் அடிப்படையில் கடந்த இரு ஆண்டுகளாக இதற்கான பூர்வாங்கப்பணிகள் இடம்பெற்றன. தற்போது இதற்கான நிதிகளும் கிடைத்துள்ளதாக உத்தியோக பூர்வமாக உலக வங்கிப் பிரதிநிதி தெரிவித்தார்.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணத்தின் இரு பிரதான வீதிகளான பருத்தித்துறை கொடிகாம்ம் வீதியான ஏபீ.31 வீதியும் , யாழ்ப்பாணம் பொன்னாலை வீதியும் செப்பனிட்டு புனரமைக்கப்படவுள்ளது. அதேபோன்று யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ள அரண்மனையும் தந்திரிமனையும் பழமையும் புதுமையும் கலந்து புனரமைப்பதோடு யாழ்ப்பாணத்தின்வீதிப்போக்குவரத்திற்கான திட்டங்களுடன் நீர்த் தேக்கத்திட்டத்தின் கீழ் குளப்புனரமைப்புக்கள், வடகாலமைப்பு  உள்ளிட்ட பல திட்டங்களிற்கான நிதியே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட வேலைகள் அனைத்தும் விரைவில் ஆரம்பிக்கப்படும் நிதி கைக்கு கிடைத்துள்ளதனால் அதனை முன்னெடுப்பதில் எந்த தடையும் இருக்காது என்பதனையும் உலக வங்கிப் பிரதியுதி சுட்டிக்காட்டியுள்ளார். எனத் தெரிவித்தார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen