ஜெனிவாவில் இலங்கைப் பிரதிநிதிகளை கடும் தொனியில் எச்சரித்த அருட் தந்தை இமானுவேல்!

இலங்கைப் பிரதிநிதிகளை அருட் தந்தை இமானுவேல் கடும் தொணியில் ஜெனிவாவில் வைத்து எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் நடைபெற்றுவருகின்றது.
இதில் இலங்கை சார்பில் பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டு, நாட்டிற்கு சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்த பல முனைப்புக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் சார்பிலும் புலம்பெயர் தமிழர்கள், இலங்கைப் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் உட்பட, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் இலங்கைப் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டு, வெளிய வந்தவேளை, அருட் தந்தை இமானுவேல் அவர்களை வழிமறித்து,

மனச்சாட்சியோடு நடந்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட மக்களின் நிலையில் இருந்து நீங்கள் யோசிக்க வேண்டும். இதுவரை காலமும் வழங்கப்பட்ட கால அவகாசத்தில் எதையும் செய்யாத நீங்கள் இனிவரும் காலங்கள் என்ன செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை வழங்கப்போகின்றீர்கள் என சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதேவேளை, சற்றும் எதிர்பாராத இலங்கைப் பிரதிநிதிகள் அருட் தந்தையின் கேள்விகளால் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகினர் என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



0 Kommentare:

Kommentar veröffentlichen