மறக்குமா மனதில் பங்குனி 24 ..? விதை பாமினி

தமிழ் வானம்
சிரித்த பங்குனி .
தலைகள் நிமிர்ந்த
பிரகாச மிதப்பு
கிலிகள் அடக்கிய
கிளிகளின் ஊர்வலம்
கிறங்க வைத்த
புதுமைப் பெருவரம்

சங்கரனே போன்றி என்று
சங்கீதம் பாடிய எமக்கு
சரித்திரம் காட்டினான் ஈசன்
வல்லூறு வாழ்வையும்
வானிலே கண்டோமே
தொண்ணூறு சகாப்தமானாலும்
தொலையாத நாள் அது தான்
துணிவான செயலதுவே

கருடர்களும் கண்வியந்தார்
வெறியர்களும் மிரண்டு
வாய் பிளந்தார்
தறிகெட்ட தனவான்களும்
தலை தெறித்து வீழ்ந்தார்
தாய்நிலத்து பூக்களோ
தலை நிமிர்த்தி சிரித்தது

தத்தி நடந்த பறவையின்
கன்னிப் பறப்பு ஒத்திகை
காவலான பறவைகளின்
தங்குமிடக் கூட்டின் மேல்
கடைசிப் பறப்பு
றப்பர் தேசச் சுவரின் மேல்
மின்னல் வந்ததாக
விடியவிடிய பேச்சாம்
விழியில் நீர் வீச்சாம்

திறமை கொண்ட பறவை
திக்கற்றுப் போவதில்லை
வலிமை கொண்ட கூடும்
வரவேற்க மறுப்பதில்லை
பாரில் புதுமை செய்யும்
பண்டைத் தமிழும் வாழும்
நாளும் எம் நெஞ்சில்
உரமாய் ஏறும் பலம் கூடும்


ஆக்கம் ..பாமினி..

0 Kommentare:

Kommentar veröffentlichen