தமிழ்ச் செல்வனையும் சந்தித்தேன்! இலங்கை அமைச்சரை வியப்பில் ஆழ்த்திய விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் விருந்தோம்பல் பண்பில் மிகவும் சிறந்து காணப்பட்டார்கள் எனவும், அவர்களின் விருந்தோம்பலை கண்டு வியந்திருந்ததாகவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
எவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலும், விடுதலைப் புலிகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து காணப்பட்டனர் என அவர் கூறியுள்ளார்.
அண்மையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இருந்த நல்லிணக்க செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனை சந்திக்க முடிந்தது.
இந்த சந்திப்பின் போது எனக்கு விருந்துபசாரம் வழங்கப்பட்டது. அதை என்னால் மறக்க முடியாது. மேலும் எவ்வாறான நிலையிலும் தமிழ் மக்கள் விருந்தோம்பல் பண்பை கைவிட மாட்டார்கள் என அறிந்துகொண்டேன்.
மேலும், இதன் போது தமிழ்ச் செல்வன் என்னை ஒரு நாள் தங்கியிருந்து விட்டு செல்லுமாறு கூறினார். இதன் போதே அவர்களின் துன்பமான வாழ்க்கையை அறிந்துகொள்ள முடிந்தது.
மின்சார வசிதிகள் கூட இருக்கவில்லை. இதேவேளை, யாழ். மக்கள் புத்திசாலிகள் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen