சிறையிலேயே மரணமா? வாழ்வை முடித்துக் கொள்ள விமல் எழுதிய கடைசிக் கடிதம்?


கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற வாகன முறைக்கேடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் பிணை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் அவர் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றார்.

தற்போது இவரது உண்ணாவிரதம் பெரிதாக பேசப்பட்டு கொண்டு வரும் நிலையில் நேற்றைய தினம் அவர் எழுதிய கடிதம் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றது.

“நிறைவடையாத என் வாழ்வுப் பயணம் சிறைக்குள்ளேயே முடிந்து போகுமா” என்று அவர் எழுதிய வாசங்கள் சமூக வலைத் தளங்களில் பரவலாக விமர்சிக்கப்படுகின்றது.

குறித்த அவருடைய வசனங்கள் காரணமாக “விமல் சிறைக்குள்ளேயே மரணிப்பாரா? அவருடைய வாழ்வு முடியப்போகின்றதா? வாழ்வை முடித்துக் கொள்ள தீர்மானித்து விட்டாரா? எனவும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கூட்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்திலும் விமலின் பிணை தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டு வரும் நிலையில் விமலின் இந்தக் கடிதம் அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் விமல் தொடர்பில் அவருடைய ஆதரவாளர்கள் அரசியல் நண்பர்கள் மூலமாக அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் ஏற்படுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை விமலை கொலை செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தெரிவித்திருந்த நிலையில்.,

வாழ்வு நிறைவு பற்றி விமல் வீரவங்ச எழுதிய கடிதம் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் கூறப்படுகின்றது

0 Kommentare:

Kommentar veröffentlichen