சுவிற்சர்லாந்து, பேர்ன் நகரில் அமைந்திருக்கும் சைவநெறிக்கூடம்

சுவிற்சர்லாந்து, பேர்ன் நகரில் அமைந்திருக்கும் சைவநெறிக்கூடம் எனும் அமைப்பின் முனைப்பில் தமிழர் களறி என அழைக்கப்படும் தமிழர் ஆவணக்காப்பகமும் வரலாற்று நூலகமும் அமைக்கும் நிகழ்வு இன்று (21) இடம்பெற்றுள்ளது.

அனைவருக்கும் காலை 10.00 மணிமுதல் 11.00 மணிவரை சிற்றுண்டி, பழங்கள், தேனீர், வழங்கப்பட்டுள்ளது.

சைவநெறிக்கூடத்தின் சிவஞானசித்தர்பீட நிறுவனர் நடராசா சிவயோகநாதன், மதியுரைஞர் திருநிறை வினாசித்தம்பி தில்லையம்பலம் ஆகியோர் மங்கலத் திருவிளக்கினை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, தாயகவிடுதலைப்போரில் மரணித்த பொதுமக்களுக்கும் மாவீரர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழினத்தின் தோற்றம் முதல் ஈழத்தமிழர்களின் வரலாறுவரை ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பது தூரநோக்காக இலக்காக எமக்கு இருந்தது என தர்மலிங்கம் சசிக்குமார் வரவேற்புரையின் போது கூறியுள்ளார்.

தொடர்நம் கருத்துவெளியிட்ட அவர், இன்று காலத்தின் சூழல் எங்களை இப்பணியினை முன்னெடுக்க உந்தியுள்ளது.

எங்கள் அழைப்பினை ஏற்று வருகை அளித்திருக்கும் நிறுவனங்களையும், தமிழ் அமைப்புக்களையும், இனமொழிப்பற்றாளர்கள் அனைவரையும் தமிழர் களறி நிகழ்வில் வரவேற்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இம் முன்னெடுப்புக் குறித்தான திட்ட அறிமுகத்தை ராஜ்கண்ணா, கீர்த்தி இருவரும் இணைந்து வெண்திரையில் காட்சிப்படத்துடன் 50 நிமிடங்கள் விளக்கியுள்ளனர்.

சைவநெறிக்கூடம் எனும் அமைப்பு சமயத்தைக் கடந்து உலகெங்கும் வேறுபட்ட பார்வைகள் கருத்துக்களுடன் வாழ்ந்தாலும், இனத்தாலும் மொழியாலும் ஒன்றுபட்டு ஒரு இனமாக எங்கள் வரலாற்றை தமிழர்கள் ஆவணப்படுத்த வேண்டியதன் தேவையினை வலியுறுத்தியது.

இன்று உலகில் எம்மிடையில் வரலாறு தொடர்பாக கூறப்படும் கதைகளுக்கு சான்றுகளை நிறுவுவதில் பெரும் சவால்கள் உள்ளன.

இறைமை இல்லாத இனமாக இருக்கும் எங்களுக்கு எமது வரலாற்றையும், இப்போது நாங்கள் வாழும் காலத்தில் நிகழ்ந்த வரலாற்றையும் உரிய முறையில் ஆவணப்படுத்தாவிடின் எதிர்வரும் இளந்தமிழ்ச்சமூகம் தனித்து நின்று இப்பணிகளை ஆற்வது கடினமாகும்.

இன்று உலக அரங்கில் இறைமை உள்ள தேசங்கள் அனைத்தும் பெரும் நிதிகளை ஒதுக்கி, துறைசார் நிபுணர்களை ஈடுபடுத்தி, தங்கள் பண்பாட் வாழ்வியலையும் வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.

ஆவணக்காப்பக மற்றும் தொல்லாய்வியல் துறைகளை தமது ஆளுகையின்கீழ்வைத்து பெரும் வழங்களை அதற்கு ஒதுக்கி வருகிறார்கள்.

தமிழ்மக்கள் இக் காலகட்டத்தை தவறவிடுவோமானால், மீண்டும் எமக்கென ஒருகாலம் தனியாகக் கனியப்போவதில்லை. தமிழர்களின் ஆற்றல் இன்று தாயகத்திற்கு அப்பால் கல்வியிலும், பொருளாதார பலத்திலும் தங்கியுள்ளது.

உரிய முறையில் நாங்கள் தமிழ்க்கல்விச் சமூகத்திற்கும், நாங்கள் வாழம் நாடுகளில் உள்ள பிற இனத்தவர்களுக்கும் தமிழர்களின் வரலாற்றினை உரியமுறையில் ஆவணப்படுத்தி சான்றுடன் எடுத்து விளக்க வேண்டும்.

இதுவே தமிழர்களறியின் முக்கயமானதோர் நோக்கமாக அமைகின்றது.

சைவநெறிக் கூடத்தின் ஞனாலிங்கேச்சுரர் திருக்கோவில் அமைந்திருக்கும் கட்டடத்தின் ஒருபகுதியில் இவ் ஆணக்காப்பகமும் நூலகமும் அமையவுள்ளது.

சுவிற்சர்லாந்து நாட்டின் பல்சமய இல்லத்தில் நாங்கள் பங்காளராக இருப்பதன் காரணத்தால் தினமும் சுவிஸ் நாட்டவர்களும், பிற இனத்தவர்களும் வந்துசெல்லும் ஒரு நடுவமாக பல் சமய இல்லம் விளங்குகின்றது.

சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்து நாட்டினதும் ஐரோப்பிய நாடுகளினதும் இறையியல், மெய்யியல், உள ஆன்ம ஆற்றுகை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன் இத்துறைகள்சார்ந்த பல்கலைக்கழக ஆய்வு

மையங்களுடனும் பல்வேறு அமைப்புகளுடனும் இணைந்தியங்கி வருகின்றது.

அவுஸ்திரேலியா தெற்காசியவியல் மையத்தின் நிறுவனரும் தலைவருமான பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் 2002ஆம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலும் உலகெங்கும் தேடிச் சேர்த்த முப்பது இலட்சங்களுக்கும் மேற்பட்ட தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை தனது தென்னாசியவியல் மையம் சிட்டினி எனும் அமைப்பு ஊடாக எமக்குப் பயன்பாட்டு உரிமையுடன் வழங்கியுள்ளனர்.

இலத்திரனியல் மற்றும் நுண்படங்களாக பதிவிலிருக்கும் முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட இவ்வாவணங்கள் இலங்கை, இந்தியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளிலுள்ள ஆவணக்காப்பகங்களிலும் நூலகங்களிலும் பல்கலைக்கழக ஆய்வு நடுவங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக இவ்வாவாணங்கள் இரண்டாயிரத்துக்குமதிகமான நூலாவணங்களாக இவ்வாவணக்காப்பகச் செயற்திட்டம் ஊடாக வெளிவரவுள்ளன.

இம் முன்னெடுப்பானது அதன் இரண்டாம், மூன்றாம் கட்டங்களாக பல்கலைக்கழகங்கள், தொல்லாய்வு மையங்கள் ஊடாகப் பெறப்படும் ஈழத்தமிழர்கள் வரலாற்றை எடுத்துவிளக்கும் தொல்லியற் சான்றுகளையும்

மூன்றாம் கட்டமாக தமிழ்த் தேசியத்தின் தோற்றத்தின் தொடர்ச்சியாக ஈழ வரலாற்றையும் பதிவாக்கவுள்ளது.

இறையாண்மையுள்ள அரசு மேற்கொள்ள வேண்டிய இப்பணியினை மக்கள்பணியாகத் தனித்து முன்னெடுப்பது என்பது மிகவும் கடினமானதாகும்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இன்று எமது முழுமையான வரலாற்றினை உள்ளதை உள்ளவாறே உரைத்து நிற்கும் எமது வரலாற்றுச் சான்றுகளை மீள நிலைநிறுத்தி ஆவணப்படுத்தத்

தவறுவோமாயின் வென்றவர்களால் எழுதப்படும் வரலாறாக எமது வரலாறும் மாறிவிடும்.

யூதர்கள் தங்களது அடையாளத்தைப் இரண்டு ஆயிரம் ஆண்டுகளாகப் பேணுவதற்கும், அதன் வரலாற்று அடிப்படையில் தங்கள் நாட்டை அமைத்துக்கொள்வதற்கும் அவர்களது ஆவணக்காப்பங்களின் பங்கு கணிசமானதாகும்.

தமிழர்களாகிய நாங்கள் கடந்த காலத்தைப் பதிவுசெய்து பேணவேண்டியது பெரும் வரலாற்றுக் கடமையாகும்.

தமிழர் களறி குறித்த இவ்விளக்க ஒன்றுகூடலில் ஆவணக்காப்பகம் அமைக்கும் பணியில் அனைத்து தமிழ்மக்களையும் பங்கெடுக்க பொது அழைப்பு விடுக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்ட பெரும்பாலான தமிழ்மக்கள், இப்பணிக்கு தாங்கள் பங்களிப்பினை நல்குவதை உறுதிசெய்தனர். சிலர் உடனடியாக கொடையும் வழங்கி இருந்தனர்.

வருகை அளித்த மக்கள் தங்கள் கேள்விகளை நிறைவில் கேள்வியாக கேட்க, தமிழர்களறி சார்பில் பதில்கள் அளிக்கப்பட்டன. இரு கோவைகளில் மக்கள் தங்கள் கருத்துக்களைப் எழுத்தில் பதிவுசெய்துள்ளனர்.

தமிழர் வரலாறு தொடர்பாக தனிப்பட்டு எவரேனும் ஏதேனும் சேகரித்து வைத்திருந்தால் அதனை அல்லத அதன் நகலை தமிழர் களறிக்கு கொடையாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சைவத் தமிழ்ச் சங்கம் - சூரிச் சிவன் கோவில், பேர்ன் கல்யாண சுப்பிரமணியர் ஆலயம், பேர்ன் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம், புறுக்டோர்வ் இந்து ஆலயம், சுவிஸ் நலவாழ்வு மையம், கண்ணகை கல்வி நிலையம், சைவநெறிக்கூடம் மர்த்தினி, சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவை, வள்ளுவன் பாடசாலை பேர்ன், மேலும் பல அமைப்புக்களையும் நிறுவனங்களையும் சேர்ந்த அன்பர்கள் வாழ்த்துரைகளை ஆற்றியுள்ளனர்.

இதன்போது, தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி மதியுரையும் வழங்கி நிறைந்தார்கள்.

இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாக வருகை தந்திருந்த அனைத்து பொதுமக்களும் நிகழ்வு 10.00 மணிக்கு தொடங்கியது முதல் 14.00 மணிக்கு நிறைவுறும் வரை எழுந்து செல்லாது அமைதிகாத்து ஆவலுடன் செவிமடித்தனர்.

இந்நிகழ்வானது தமிழர் களறி அமைக்கவேண்டும் எனும் தேவையை தமிழ்மக்கள் அனைவரும் ஏற்று ஒன்றுபட்டிருப்பதை காட்டி நின்றது.

ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் நல்கையாக அறுசுவை விருந்து நண்பகல் உணவாக வழங்கப்பட்டது.

உலகில் முதன்முறையாக தமிழர் வரலாற்றுக்கு ஒரு ஆவணக்காப்பகம் அமைத்து, வரலாறு கண்டிருப்பதை இட்டு, நிகழ்வுக்கு வருகை அளித்திருந்த யாவரும் மனம் நிறைந்து காலச் சுவட்டில் தமிழர் வரலாற்றை உரிய சான்றுடன் பதிவுசெய்வோம் எனும் உறுதியுடன் வீடு சென்றுள்ளன

0 Kommentare:

Kommentar veröffentlichen