இலங்கையின் செல்வந்த அரசியல் கட்சி எது தெரியுமா?

கடந்த 2016 ஆண்டில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணியே செல்வந்த கட்சி என கெபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு அரசியல் கட்சிகள் தேர்தல் திணைக்களத்தில் வழங்கியுள்ள நிதி அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் வருமானம் 8 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 322 ரூபா என கெபே கூறியுள்ளது.

எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணி தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் வாகனங்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானம் என்பவற்றையும் நிதி அறிக்கையில் விபரமாக கூறியுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேர்தல் திணைக்களத்திடம் பெற்று சர்வதேச அமைப்புகள் இதை பகிரங்கப்படுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு கணக்காய்விற்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் வருமானம் 3 கோடியே 63 இலட்சத்து 17 ஆயிரத்து 486 ரூபா.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருமானம் ஒரு கோடியே 97 லட்சத்து 96 ஆயிரத்து 9 ரூபா. 2015 ஆம் ஆண்டில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நிதியுதவியாக 2 கோடியே 42 லட்சத்து 3 ஆயிரத்து 194 ரூபா.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வருமானம் 18 லட்சத்து 45 ஆயிரம் ரூபா. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் வருமானத்தில் சம்பிக்க ரணவக்கவின் 2 லட்சம் ரூபா சம்பளத்துடன் அந்த கட்சியின் வருமானம் ஒரு கோடியே 85 லட்சத்து ஆயிரத்து 133 ரூபா.

எது எப்படி இருந்த போதிலும் இலங்கையின் அரசியல் கட்சிகள் நிதி நடவடிக்கைகளை தெளிவாக கையாள்வதில்லை என சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் கெபே குறிப்பிட்டுள்ளது.

0 Kommentare:

Kommentar veröffentlichen