நகுலாம்பிகை குணசேகரம்
(லொஞ்ஜின்)
அன்னை மடியில் : 15 செப்ரெம்பர் 1958 — ஆண்டவன் அடியில் : 13 ஏப்ரல் 2017
   

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலாம்பிகை குணசேகரம் அவர்கள் 13-04-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அல்பிரட் மேரிமுத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணசேகரம்(லொஞ்ஜின்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெனிற்றா, சர்மிலி, கிருஷாந்தன், நிஷாந்தன், பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்திரராஜா(ஜெர்மனி), சுபத்திராதேவி(நீர்கொழும்பு), புஸ்பராணி(ஜெர்மனி), ரவிந்திரகுமார்(கனடா), கீதா(லண்டன்), பாரத்குமார்(கனடா), அரவிந்தன்(நீர்கொழும்பு), விஜிதா(கனடா), ஜீவகுமார்(கனடா), சஞ்சீபன்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான சுரேஸ்குமார், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சஜீவன், ஜெகதீஸ்வரன், யுஸ்ரினா பேபி, சொபித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிசோனா, திசானா, தர்மிகா, பிரியங்கா, தர்ஷிகா, அன்றியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 17-04-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறம்பைகுளம் புனித அந்தோனியர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறப்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 793,
சாம்பல் தோட்டம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அரவிந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94777777673
கிருஷாந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94766021680
நிஷான் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94773301242
சுபத்திராதேவி — இலங்கை
செல்லிடப்பேசி:    +94766696427
ஜெகதீஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94775688844
திருமதி சண்முகநாதன் பாக்கியம்

பிறப்பு : 23 சனவரி 1943 — இறப்பு : 8 ஏப்ரல் 2017
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் பாக்கியம் அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி(இலங்கை), செல்வநாகபூரணி(செல்வம்- இலங்கை), சசிகுமார்(சுவிஸ்), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நாகபிள்ளை, ராசையா, சின்னராசு, சிவகுரு, செல்லத்துரை, பூரணம், மார்க்கண்டு, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம்(சந்திரன்), தேவராசா(வவுனியா), சுமிதா(சுவிஸ்), தவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பூரணம், பொன்னையா, லக்சுமி, பக்கியலஷ்சுமி, மனோன்மணி, நாகரெத்தினம், பொன்னம்பலம் பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சயந்தன்(சுவிஸ்), சிந்துஜா, திவ்வியா, டினோசன்(பிரான்ஸ்), ஆதவன், சாருஜன்(சுவிஸ்), சாருஜா(சுவிஸ்), சாரங்கன்(சுவிஸ்), சாரங்கா(சுவிஸ்), அபிநயா(சுவிஸ்), அட்ஷயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 130, மகாறம்பைக்குளம்,
வவுனியா.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சசிகுமார்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:     +41787917873
தவராஜா(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:     +41616818240
செல்லிடப்பேசி:     +41794614263
சயந்தன்(பேரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:     +41793827551
தேவராசா(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:     +94779885845
திருமதி கனகறட்ணம் அன்னலட்சுமி

பிறப்பு : 16 நவம்பர் 1928 — இறப்பு : 7 ஏப்ரல் 2017
யாழ். சாவகச்சேரி டச்சுறோட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகறட்ணம் அன்னலட்சுமி அவர்கள் 07-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகறட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரமலர்(இலங்கை), சறோஜினிதேவி(ஜெர்மனி), தர்மராசா(செல்வம்- கனடா), நாகேஸ்வரி(இலங்கை), இராசேஸ்வரி(இலங்கை), குலராஜ்(வவி- நோர்வே), தபோதினி(டென்மார்க்), காலஞ்சென்ற ஞானசேகர், காலஞ்சென்ற கந்தராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்லையா, நல்லம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

தனபாலசிங்கம்(இலங்கை), கந்தசாமி(ஜெர்மனி), சிவமணி(கனடா), சிவபாலச்சந்திரன்(இலங்கை), யோகமனோகரி(நோர்வே), கணேசலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சன்(லண்டன்), சாயினி, தர்சி, கானமிர்தா, யசோக்குமார், நேசகுமார், உசாநந்தினி, கிருபாகினி, கீர்த்தனா, சிவாகரன், விமல்ராஜ், விமல்தாஸ்(இலங்கை), கெளதம், அபிராமி(நோர்வே), தர்ஸ்மன், தர்சிகா(ஜெர்மனி), தர்சி, துசி, கோபி(கனடா), சோபனா, சோபியா, குளோஸ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

குவேனிகா, கிறித்திகா, டிறித்திகா, சயித்திக்கா, றிஸ்சானா, அய்ஷானி, ஆதிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:     +94779265199
சறோஜினிதேவி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:     +492019460673
தர்மராசா(மகன்) — கனடா
தொலைபேசி:     +14169085895
திரு சரவணமுத்து தாமோதரம்
(சரா மாஸ்டர், இளைப்பாறிய ஆசிரியர்- யாழ். பரியோவான் கல்லூரி)
மலர்வு : 13 சனவரி 1927 — உதிர்வு : 8 ஏப்ரல் 2017
  

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து தாமோதரம் அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. தாமோதரம் நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அபிராமசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுரேசினி, விஸ்வன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கமலா, பத்மா, மற்றும் Dr. மீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீகுமார் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மண்டலேஸ்வரன், Dr. அமரசிங்கம், திருச்செல்வம், மற்றும் Dr. மகேந்திரா, சோமா நாஸ், திலகவதி ஸ்ரீகாந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யதீசா, சந்தியா, சாயி சுப்பிரியா, அகிலேஸ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தாமோதரம்பிள்ளை வீதி,
சங்கத்தானை,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி:    +94213006649
செல்வி நித்திலா ஜெகதீசன்

இறப்பு : 5 ஏப்ரல் 2017
கொழும்பைப் பிறப்பிடமாகவும், அன்ரசன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட நித்திலா ஜெகதீசன் அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ரெட்ணராஜா ஜெகதீசன் குலமாது தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

சிற்பரன்(கனடா) அவர்களின் ஆருயிர் தங்கையும்,

லக்மணிசிற்பரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

தரணியா, தியானா அவர்களின் அன்பு அத்தையும்,

காலஞ்சென்ற தம்பையா ரெட்ணராஜா, ராசமணி ரெட்ணராஜா, காலஞ்சென்ற வேலயுதர் சதாசிவம், பாலமணி சதாசிவம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை பொரளை ஜெயரெட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பெற்றோர் — இலங்கை
தொலைபேசி:     +94112591179
சகோதரன் — கனடா
தொலைபேசி:     +14168443581
திருமதி நாகம்மா இராசய்யா
பிறப்பு : 16 யூலை 1931 — இறப்பு : 1 ஏப்ரல் 2017
யாழ். மட்டுவில் கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசாவிளானை வசிப்பிடமாகவும், கல்வயலை தற்போதைய வதிவிடமாகவும்  கொண்ட நாகம்மா இராசய்யா அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், வள்ளிப்பிள்ளை ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மகளும், மரியாம்பிள்ளை சவியேற்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசைய்யா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மலிங்கம்(யாழ். மல்லாகம்), கோபாலசிங்கம்(ஜெர்மனி), கணேசலிங்கம்(ஜெர்மனி), கமலாவதி(யாழ். கல்வயல்), கமலாம்பாள்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சின்னப்பு அவர்களின் அன்புச் சகோதரியும்,
செல்வரத்தினம்(யாழ். கல்வயல்), இரவிச்சந்திரன்(ஜெர்மனி), வரலட்சுமி(ஜெர்மனி), ஜமுனாதேவி(யாழ். மல்லாகம்), சுகந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாஸினி, சுஜேந்திரன், தர்சினி, விஜிதா, கவிதா, தாரணி, பிரபாகரன், பிரசாத், சோபிகா, துஸ்யா, தினேஸ், கிரிசாந், சுஜிதா, அனிதா, சுனித்திரா, நிஸாந், சுஜீந், சசிகாந், தனுகா, விதுசன்  ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரிசாந், கஸ்தூரி, கஜீபன், இந்துயன், யசிந்திரன், சயன், யனோதினி, கிருத்திகா, பிரிதா, கயன், பினிசியா, கார்த்திகா, தீசன், காயத்திரி, கயனிகா, சந்தோஷ், நிஸானா, இலக்கியா, சுவாதி, அஸ்வினி, அக்ஸயன், யுஜீபன், ஹரினி, லெயோன், ஜனிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணி தொடக்கம் பி.ப 04:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
1st மைல் போஸ்ட்
கல்வயல்(ஐயனார் கோயிலடி),
சாவகச்சேரி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாவதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775794531
தர்மலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94768081959
கோபாலசிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4920882855679
கடந்த 2016 ஆண்டில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணியே செல்வந்த கட்சி என கெபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு அரசியல் கட்சிகள் தேர்தல் திணைக்களத்தில் வழங்கியுள்ள நிதி அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் வருமானம் 8 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 322 ரூபா என கெபே கூறியுள்ளது.

எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணி தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் வாகனங்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானம் என்பவற்றையும் நிதி அறிக்கையில் விபரமாக கூறியுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேர்தல் திணைக்களத்திடம் பெற்று சர்வதேச அமைப்புகள் இதை பகிரங்கப்படுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு கணக்காய்விற்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் வருமானம் 3 கோடியே 63 இலட்சத்து 17 ஆயிரத்து 486 ரூபா.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருமானம் ஒரு கோடியே 97 லட்சத்து 96 ஆயிரத்து 9 ரூபா. 2015 ஆம் ஆண்டில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நிதியுதவியாக 2 கோடியே 42 லட்சத்து 3 ஆயிரத்து 194 ரூபா.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வருமானம் 18 லட்சத்து 45 ஆயிரம் ரூபா. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் வருமானத்தில் சம்பிக்க ரணவக்கவின் 2 லட்சம் ரூபா சம்பளத்துடன் அந்த கட்சியின் வருமானம் ஒரு கோடியே 85 லட்சத்து ஆயிரத்து 133 ரூபா.

எது எப்படி இருந்த போதிலும் இலங்கையின் அரசியல் கட்சிகள் நிதி நடவடிக்கைகளை தெளிவாக கையாள்வதில்லை என சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் கெபே குறிப்பிட்டுள்ளது.
திருமதி மோகனாங்கி சந்திரகுமார்

(டிலாணி)

தோற்றம் : 18 செப்ரெம்பர் 1990 — மறைவு : 31 மார்ச் 2017
மட்டக்களப்பு நொச்சுமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மோகனாங்கி சந்திரகுமார் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று மட்டக்களப்பில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கனகசுந்தரம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பாக்கியராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரகுமார்(லண்டன்- கொலன்றியா) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவராஜ்(பிரான்ஸ்), ஜீவரேக்கா(லண்டன்), லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சகாஜினி, பிருந்தாவன், சுபாஜினி, ரோஜினி, ஜெயாமதி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திரு. திருமதி நாகம்மா காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அமரசிங்கம் லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-04-2017 வியாழக்கிழமை அன்று கல்லடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜீவா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:     +33628412593
பிருந்தாவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:     +447446105969
லக்‌ஷன் — இலங்கை
செல்லிடப்பேசி:     +94756791076
பத்மராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:     +94779682099
திரு லிறூஷன் மரியராசா அன்னை மடியில் : 11 ஏப்ரல் 1986 — ஆண்டவன் அடியில் : 1 ஏப்ரல் 2017

யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட லிறூஷன் மரியராசா அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மரியராசா மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பிறூகா, டிஷான் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிந்துஜன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
திருச்செல்வம், காலஞ்சென்ற ராசநாயகம், சுவாம்பிள்ளை, மகேந்திரன், மனோகரன், அன்ரன், ருக்மணி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
சிவம், ஞானம்(கணேஸ் ரெக்ஸ்ரைல்- கனடா), கணேஸ், இன்பம், அப்பன், தயா, ராணி, ரஞ்ஜினி, ராஜினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 05/04/2017, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி:AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada 
தகனம்
திகதி:புதன்கிழமை 05/04/2017, 08:00 பி.ப
முகவரி:AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada 
தொடர்புகளுக்கு
ராசா — கனடா
தொலைபேசி:+15144265176
ஞானம் — கனடா
தொலைபேசி:+15146294645
டிஷான் — கனடா
தொலைபேசி:+15149447467
துவிலா — கனடா
தொலைபேசி:+14388814645
பிறூகா — கனடா
தொலைபேசி:+16476381109
திரு தனஞ்சயன் தர்மராஜா
மண்ணில் : 11 மார்ச் 1958 — விண்ணில் : 30 மார்ச் 2017
திருகோணமலை உப்புவெளியைப் பிறப்பிடமகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தனஞ்சயன் தர்மராஜா அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி தியாகராயா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
லாவனியா, டிவ்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கொளரிமுகுந்தன், பாலகெங்கதரன், உதயசங்கர், உமையாள், கலாவல்லி, ஞானபூங்கோதை, கார்தியாயினி, திருமாலினி, சிறிதரன், சிவாரிநயனிஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ்வரி, குகனேஸ்வரி, ராதாமனோகரன், மதிவதனி, நவசிவராஜா, சிறிஸ்கந்தராஜா, சண்முகநாதன், காலஞ்சென்ற சிவஞானம், உதயராயன், தயாநிதி, திலகநிதி, கெங்காநிதி, கேசவராயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபர்ணா, திரிவேணி, அபிலா, நிவியா, அத்வைதன், அற்சகி, கீவன், சனகன், நசிகேதன் ஆகியோரின் அன்பு மாமாவும் தர்மவிலாசினி, மோசிகரன், கிருத்திகா, சிவாத்மணி, சர்வாத்மணி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Unit 515 – 567,
Scarborough Golf Club Rd,
Scarborough,
ON M1G 1H5,
Canada.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறி — கனடா
செல்லிடப்பேசி: +14165696109
கோதை — கனடா
செல்லிடப்பேசி: +16479277069
சிவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442036327539
உமையாள் — இலங்கை
தொலைபேசி: +94262221633
பத்மநிதி — கனடா
செல்லிடப்பேசி: +14164383984
சுவிசில் வாழ்ந்துவரும் செல்வா பிறந்தநாளையெட்டி  செல்வா உதயா குடும்பத்தினர் இன்று முல்லைத்தீவில் உள்ள 25க்கு மேல்பட்ட  மளழைகளுக்கு பாடசாலை  உபகரணங்கள் வழங்கி அவர்கள் கல்விக்கான உதவியை செய்துள்ளுது மகச்சிறப்பு ,

இவர் போல் ஒவ்வெருவரும்சிறார்களின் படிப்புக்கு உதவி செய்தால் நிச்சயம் எமது மண்ணில் சிறார்களின் கல்வி சிறக்க ஓர் சிப்புப் பணியாகும்
செல்வா மகிழினியின் பிறந்த நாளுக்கும் இவர்களின் சிறப்பானபணிக்கும் இதுபோன்ற பணிகள் தொடர வாழ்த்துக்கள் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் இணைந்துவாழ்தி நிற்கின்றனர் வாழ்த்துக்களுடன் கலைஞர் எழுத்தாளர் நாடகபயிற்றிவிப்பாளர் பொதுத்தொண்டாளர்  குமாரு. யோகேஸ் ஈழத்தமிழன் இணையம்
தமிழீழ விடுதலைப் புலிகள் விருந்தோம்பல் பண்பில் மிகவும் சிறந்து காணப்பட்டார்கள் எனவும், அவர்களின் விருந்தோம்பலை கண்டு வியந்திருந்ததாகவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
எவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலும், விடுதலைப் புலிகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து காணப்பட்டனர் என அவர் கூறியுள்ளார்.
அண்மையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இருந்த நல்லிணக்க செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனை சந்திக்க முடிந்தது.
இந்த சந்திப்பின் போது எனக்கு விருந்துபசாரம் வழங்கப்பட்டது. அதை என்னால் மறக்க முடியாது. மேலும் எவ்வாறான நிலையிலும் தமிழ் மக்கள் விருந்தோம்பல் பண்பை கைவிட மாட்டார்கள் என அறிந்துகொண்டேன்.
மேலும், இதன் போது தமிழ்ச் செல்வன் என்னை ஒரு நாள் தங்கியிருந்து விட்டு செல்லுமாறு கூறினார். இதன் போதே அவர்களின் துன்பமான வாழ்க்கையை அறிந்துகொள்ள முடிந்தது.
மின்சார வசிதிகள் கூட இருக்கவில்லை. இதேவேளை, யாழ். மக்கள் புத்திசாலிகள் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இப்போது முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் இன விவகாரம் கையாளப்படுகிறது.
இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவர்களே முக்கூட்டுத் தலைவர்கள்.
மகிந்த ராஜபக்­வை தேர்தலில் வீழ்த்துவது, அவருக்கு நிகராக மைத்திரிபால சிறிசேனவை தேர்தல் களத்தில் இறக்குவது, மைத்திரி – ரணில் இணைந்த கூட்டு அரசை நிறுவுவது, இரா.சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது என்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியாக இருந்து செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க என்பது மறுக்க முடியாத உண்மை.
என்னுடன் போட்டியிடும் அந்த வீரன் யார்? அவரை அறிய விரும்புகிறேன் என்று மகிந்த ராஜபக்ச கர்ச்சித்த போது, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானம் சந்திரிகா குமாரதுங்கவால் எடுக்கப்பட்டிருந்தது.
இதற்குப் பின்னணியாக சில வெளிநாடுகளும் இருந்தன என்பது வேறு கதை.
ஷ மைத்திரிபால – ரணில் – சந்திரிகா என்ற முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் மகிந்த ராஜபக்சவுக்கான அரசியல் தோல்வி நிறைவேற்றப்பட்டது.
இந்த வெற்றியை அடுத்து போர்க்குற்ற விசாரணையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பையும் படைத்தரப்பையும் காப்பாற்றுவது என்ற விடயத்தை முக்கூட்டுத் தலைவர்களும் மிகச்சிறப்பாகக் கையாண்டனர்.
இதற்கு இரா. சம்பந்தருக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவி மிகுந்த உதவி புரிந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வருட கால அவகாசம் எல்லாப் பிரச்சினையில் இருந்தும் தப்புவதற்கான வழியாயிற்று.
இவை நடந்து முடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையர் தனது தாளத்தை மாற்றத் தொடங்கி விட்டார்.
ஆம், போர்க்குற்றம் தொடர்பில் படையினர் மீது விசாரணை நடத்த முடியாது. அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது என்பதாக சந்திரிகாவின் கதை உள்ளது.
வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் அதனை அப்படியே தாட்டுவிடுவதுதான் முக்கூட்டுத் தலைவர்களின் திட்டம். இது சந்திரிகாவூடாக வெளிப்பட்டுள்ளது.
போர்க்குற்றம் தொடர்பில் படையினருக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறும் சந்திரிகா அம்மையார்,அதேநேரம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்துக் கூறுகையில், அவர்கள் குற்றம் செய்ததனாலேயே தண்டனை அனுபவிக்கின்றனர் என்கிறார்.
ஆக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதேயன்றி வேறு எதுவும் நடக்காதென்பது தெட்டத் தெளிவாகிறது.
அதாவது சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணை நடக்கும். அவர்கள் குற்றவாளிகளாக அறிக்கையிடப்படும். இந்த வேலையை இலங்கை அரசு நியமிக்கின்ற விசாரணைக் குழு செய்து முடிக்கும்.
அதேசமயம் படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர்கள் வன்னி யுத்தத்தில் எவரையும் சுட்டுக்கொல்லவில்லை என்பதாக முடிவு இருக்கும்.
இதுவே இரண்டு வருட கால அவகாசத்தில் நடக்கும்.
ஆம், சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக எது செய்தாலும் அது குற்றமில்லை. ஆனால் சிங்களவர்கள் எந்தக் குற்றத்தை தமிழர்கள் மீது சுமத்தினாலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்குத் தண்டனை கிடைக்கும். இதுவே நடக்கப் போகிறது.
அட, பரவாயில்லை. தமிழர்கள் எதை இழந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்காக்கி இருக்கிறார்களே! அது போதாதா என்ன?
திரு சின்னத்தம்பி சண்முகம்

(விஜயன்)

தோற்றம் : 22 சனவரி 1950 — மறைவு : 26 மார்ச் 2017
யாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் பருத்தித்துறை வீதியை  வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சண்முகம் அவர்கள் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, குணமணி(மணி) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கனகு, நல்லம்மா(நல்லூர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,

திலகா, துஸ்யந்தன், பிரசனியா கேதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயரட்ணம்(நோர்வே), மகேஸ்வரன்(கட்டார்), பூபதி, கோமதி(சிலாபம்), ரவீந்திரன்(ரவி- பிரான்ஸ்), கௌரி(பப்பி- சிலாபம்), சறோஜினி(கனடா), சேகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

இலட்சுமி, ராமு, சுந்தரலிங்கம்(விஜயன்), கமலாதேவி, பவானி, பாலா, ஜோசெப், சித்திரா, வேதநாயகம், பெனடிற், கவிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நல்லூர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெகதீபன்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி:     +94771831175
துஸ்யந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:     +94773303397
ரவீந்திரன்(ரவி-சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:     +33751078503
சேகர்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:     +33652285138
ஜெயா — நோர்வே
செல்லிடப்பேசி:     +4751110113
சறோ- — கனடா
செல்லிடப்பேசி:     +14163661262
திரு பிறவுன் கிறிஸ்ரியன் அன்ரன் பரிதிமாறன்

பிறப்பு : 8 டிசெம்பர் 1970 — இறப்பு : 23 மார்ச் 2017
   

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், மூளாய் லேன் குருசோ வீதி, சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட பிறவுன் கிறிஸ்ரியன் அன்ரன் பரிதிமாறன் அவர்கள் 23-03-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிறவுண் கிறிஸ்ரியன், சூரியகுமாரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஞானாம்பிகை(ஒட்டகப்புலம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரீனா மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ராவின் அவர்களின் அன்புத் தந்தையும்,

தனக்குமார்(லாவன்யா ஸ்ரோஸ் உரிமையாளர்), தர்சன்(பெல்ஜியம்), மனோசுதன்(Softlogic Life- பிராந்திய முகாமையாளர்), ஜனகன்(பின்லாந்து), திலகன் (சூரியா ஹோட்டல்), லாவன்யா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயகுமார்(ஜெர்மனி), சந்திரகுமார்(பிரித்தானியா), வசந்தகுமார்(அஞ்சலகம்- வசாவிளான்), சதீஸ்குமார்(கனடா), அனுஷா, மாலினி(பெல்ஜியம்), சுஜிவினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்), சுமதி(யாழ்ப்பாணம்), நிக்சன்(கனடா), புனிதம்(ஜெர்மனி), சுசி(பிரித்தானியா), அனோஜா(கியுடெக்- யாழ்ப்பாணம்), சியாமிளா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஞ்சலோ, வெரோனா, ஏய்மி, ஏய்ரன், றொஷேல், றொஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிசா, அகிரா, எனுசா, எனுஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

இம்மானுவேல் பிள்ளை, சோதிமலர்(All Ceylon Distributors) ஆகியோரின் நேசமிகு பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-03-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு யாழ். மரியன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 03,
மூளாய் வேன்,
குருசோ வீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மரீனா மாலினி(மனைவி) — இலங்கை
தொலைபேசி:    +94212220225
சூரியகுமாரி — இலங்கை
தொலைபேசி:    +94212222841
மனோ(சகோதரன்) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94773396441
வசந்தன்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94779905347
ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தாலும் இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்’ என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை தொடர்பிலான அறிக்கை தொடர்பிலும், கலப்பு அரசாங்கம் தற்போது நாட்டில் முன்னெடுக்கவுள்ள நகர்வுகள் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேச கட்டளைகளுக்கு அடிபணிய நாடும் ஒருபோதும் தயார் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள டிலான் பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியின் நகர்வுகள் மிகவும் மோசமான வகையில் அமைந்துள்ளதென குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறு சென்றால் வெகு விரைவில் தேசிய அரசாங்கத்தை கலைக்க வேண்டிய தேவை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு  பிரதேச மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்கிறது.காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர்.இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் அவ்வாறே வாழ முடியாது. தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் என வலியுறுத்தி போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.அத்துடன்  தமக்கான  காணி உரிமம்  கிடைக்கும் வரை  போராட்டம் தொடரம் என  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மக்கள் தெரிவித்துள்ளனர்
யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் Baroness Joyce Anelay தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் தொிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்த சில முக்கிய விடயங்களை ஐ.நா  மனித உரிமைப் சபையின் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.