அண்ணையோடு இருக்கையில் நாங்கள் காயப்பட்டு இருந்தாலும் எங்கள் காயப்பட்ட வலிகளை உடைத்து ஒரு மாற்று வலிகளோடு நிமிர்வோடு வெளி வர எமக்கு வழிகள் இருந்தன

எங்கள் தலைவரோடு இருக்கையில் நாங்கள் எவ்வளவோ மகிழ்ச்சியாக இருந்தோம். எங்கள் அண்ணையோடு இருக்கையில் நாங்கள் காயப்பட்டு இருந்தாலும் எங்கள் காயப்பட்ட வலிகளை உடைத்து ஒரு மாற்று வலிகளோடு நிமிர்வோடு வெளி வர எமக்கு வழிகள் இருந்தன. ஆனால் இப்பொழுது காயப்பட்ட போராளிகள் நாங்கள் எங்கு போவது என்ன செய்வது என தெரியவில்லை.” காயப்பட்ட பெண் போராளி ஒருவரின் வலிகளை வார்க்கும் கூற்று.

அநாதைகள் என எவரும் இருந்ததில்லை தேசியத் தலைவரின் காலத்தில். இன்று அநாதரவான முன்னாள் காயப்பட்ட போராளிகளை, போராட்டத்தை எதிர் கொண்ட மக்களை காக்க அரசும் வழி செய்யவில்லை. தாயகத்தில் உள்ள உறவுகளும் முன் வர முடியாதவாறு அச்சுறுத்தப்படுகிறார்கள். புலத்தில் வாழும் மக்களும் ஒட்டுமொத்தமாக அவர்கள் துயர் போக்கும் பணியில் ஈடுபடவில்லை. “அநாதைகளாணோம்” என்ற கவலையை விட “புறக்கணிக்கப்படுகின்றோம்” என்ற வலிகளே எங்கள் மண்ணில்  முன்னாள் போராளிகளை அணு அணுவாக கொல்கின்றனர்.
போராளியின் மனக்குமுறல்.

0 Kommentare:

Kommentar veröffentlichen