சற்று முன்: அமெரிக்க ஆட்சி கலைக்கப்படலாம்: டொனால் ரம் ரஷ்யாவோடு தொடர்பு FBI அறிக்கை

அமெரிக்காவின் ஜனாதிபதியான டொனால் ரம்பின் ஆட்சிக்கு பெரும் குந்தகம் ஏற்பட்டுள்ளது. சற்று முன் முதல் தடவையாக மக்கள் முன் தோன்றிய அமெரிக்க உளவு நிறுவன தலைவர் , விசாரணைகள் நடைபெற உள்ளதாக கூறி அமெரிக்க மக்களை மட்டும் அல்ல உலக மக்களையும் அதிரவைத்துள்ளார். கடந்த வருடம் தேர்தல் நடைபெற்றவேளை, டொனால் ரம்பின் தேர்தல் முகாமையாளர்களில் 9 பேர் ரஷ்யாவோடு நேரடி தொடர்பில் இருந்துள்ள முக்கிய ஆவணம் ஒன்று வாஷிங்டன் போஸ்டில் கசிந்துள்ளது.

இது பெரும் பிரச்சனையாக அமெரிக்காவில் தற்போது உருவெடுத்துள்ள நிலையில். இது தொடர்பாக உடனடி விசாரணை இடம்பெறும் என்றும். அதன் அறிக்கை உடனடியாக நீதி அமைச்சருக்கும் நீதி அரசருக்கும் அனுப்பப்படும் என்று எப்.பி.ஐ அதலை குறிப்பிட்டுள்ளார். இது உண்மை என்று கண்டு பிடிக்கப்பட்டால், தேர்தல் ஆணையம் நடைபெற்ற தேர்தல் செல்லுபடி அற்றது என்று அறிவிக்க கூடும். இல்லையேல் ரம்பின் ஜனாதிபதி பதவி உடனடியாக பறிக்கப்பட கூடும். மேலும் அமெரிக்காவின் உச்ச பாதுகாப்பு சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டொனால் ரம்பே கைதாகும் நிலை கூட தோன்றலாம்.

ஆனால் விசாரணைகளில் இருந்து தப்பிக்க தற்போது ஆட்சியில் உள்ள டொனால் ரம் மற்றும் அவரது முகவர்கள் உடனடியாக தமது அனைத்து பலத்தையும் பாவிப்பார்கள் என்றும். ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை காலமும் ஆட்சியில் உள்ள ஜனாதிபதி ஒருவரின் தேர்தல் வெற்றி தொடர்பாக அமெரிக்க புலனாய்வு துறை இதுவரை காலமும் விசாரணை நடத்தியது இல்லை எனலாம். பெரும் நெருக்கடியில் டொனால் ரம் தற்போது உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை எப்.பி.ஐ உளவு நிறுவனம் ஜனாதிபதியின் அலுவல சக்திகளுக்கு நிகரான சக்திகளை கொண்ட அமைப்பாக திகழ்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

0 Kommentare:

Kommentar veröffentlichen