நிதியமைச்சிற்கு எதிராக வழக்குத்தாக்கல்-மஹிந்த!

இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சிற்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து சட்டத்தரணிகளின் ஆலோசனைகளைத் பெற்று வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
களுத்துறை – ஹொரன பிரதேசத்திலுள்ள ஸ்ரீ ஜயவர்தனாராமய ரஜமகா விகாரைக்கு நேற்று இரவு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அங்கு இடம்பெற்ற மதவழிபாட்டிலும் கலந்துகொண்டார்.
பிணை முறி தொடர்பான மோசடிகளின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கையெழுத்துடன் வெளியிட ப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவின் கையெ ழுத்து தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாம் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என அரச திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது கருத்துக்களை வெளியிட்டார்.

“இதுமிகப்பெரிய மோசடியாகும். எனவே நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது பற்றி எனது சட்டத்தரணியிடம் சட்ட ஆலோசனைப் பெற்று வருகின்றேன். ஜனவரி 8ஆம் திகதியின் பின்னர் நான் நிதியமைச்சர் அல்ல. நிதிய மைச்சின் பதவியை வகித்தவர்கள் எனது பெயரைப் பயன்படுத்தி பாரிய மோசடியை செய்திருக்கின்றனர். அதற்கெதிராக வழ க்குத் தாக்கல் செய்வதே எனது எதிர்பார்ப்பாகும்” – என்று தெரிவித்தார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen