அலரிமாளிகை பேச்சு – 01

இந்த இடத்தில், இதே மேசையில் இருந்து, ஐம்பது தடைவைகளுக்கும் மேல் பேசியிருப்பதாக கூறினீர்களே? அதுதான் என்ன பேசினீர்கள்? என்று தானே நாங்களும் கேட்கின்றோம். உங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டுக்கல்வி புலமைப்பரிசில் திட்டம் வழங்குவது பற்றியா பேசினீர்கள்? அல்லது மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகள் பங்கீடு பற்றியா பேசினீர்கள்? இல்லையேல், குடும்பத்தோடு வெளிநாட்டு சுற்றுலாச்சவாரி பற்றியா பேசினீர்கள்? ஏனெனில் அரசியல் கைதிகள் பற்றி பேசியிருந்தால், நிச்சயம் அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறாதபடியால், இதுக்குள்ள வேறு ஏதோ கள்ளடீல்தான் பேசப்பட்டிருக்க வேண்டும். 50 தடைவைகள் பேசியும் சிறு துரும்பைக்கூட இந்த அரசு தூக்கிப்போடாதநிலையில், எந்த அடிப்படையில் தமிழ் மக்களை நம்பிக்கை வைத்து பயணிக்க கேட்கின்றீர்கள்?’ என்று சுமந்திரன் எம்.பியை கேள்விகளால் துளைத்தெடுத்தோம்.

(தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி…)

-அ.ஈழம் சேகுவேரா

0 Kommentare:

Kommentar veröffentlichen