ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து இரண்டாவது நாளாகவும் வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தி ற்கு முன்னால் இன்று போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் பிற்பகல் 4 மணியளவில் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி, சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர்கள் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட குழு ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது..
இதன் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் கருத்து தெரிவிக்கையில்
ஆசிரியர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இன்றைய தினம் பிற்பகல் 4 மணி யளவில் யாழ்ப்பாண, சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர்கள் மற்றும் தயாமாஸ்டர் ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட குழு எம்மோடு சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் பணித்தடை விதிக்கப்பட்ட 3ஆசிரியர்களின் பணித்தடையை விலக்குவது தொடர்பாகவும் ஆசிரியர்களின் இட மாற்றம் தொடர்பாகவும் சாதகமான பதிலை செயலாளர் கூறியதாக இந்த தூதுக்குழு குறிப்பிட்டுள்ளது. நாளையதினமே கல்வி அமைச்சின் செயலாளர் கொழும்பில் இருந்து வருகைதந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அக் குழு தெரிவித்துள்ளது.
இக்குழு போராட்டகளத்தில் உள்ள ஆசிரியர்களுடன் அரைமணி நேர பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்தது.. தாம் கல்வி யலாளர்கள் என்ற அடிப்படையில் எங்களை சந்திக்க வந்ததாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர் எனவும் தெரிவித்தார்.
-ஜெ.கிரு-
0 Kommentare:
Kommentar veröffentlichen