நாவற்குழியில் பெரும்பிரச்சாரங்களுடன் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்ட நிதி இன்னும் வந்து சேராததால் அங்குள்ள மக்கள் நட்டாற்றில் கை விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமக்கு நீதி கேட்டு யாழ்.மாவட்ட செயலகம் முன்னதாக குவிந்த அவர்களை உள்ளே செல்லவிடாது அதிகாரிகள் திருப்பியனுப்பியுள்ளனர்.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டில் நாவற்குழி அரச காணியில் தமிழ் மக்களிற்கு 200 வீடுகளும் சிங்கள குடியேற்றவாசிகளிற்கு 50 வீடுகளுமாக அண்மையில் பெரும்பிரச்சாரங்களுடன் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக குடியேற்றப்பட்ட சிங்கள மக்களிற்கும் அங்கு வீடமைப்பு வழங்கப்பட்டமை பெரும் சர்ச்சைகளினை தோற்றுவித்திருந்தது. இதற்கு எதிராகப்போராடப்போவதாக வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் அறிவித்துமிருந்தனர்.
இந்நிலையில் வீடமைப்பு திட்டத்தை அமுல்படுத்த ஏதுவாக அங்கிருந்த மக்களது கொட்டில்வீடுகள் பிடுங்கியெறியப்பட்டுமிருந்தன. எனினும் நாட்கள் பல கடந்த போதும் இதுவரை புதிய வீடுகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு வந்து சேரவில்லை.
இந்நிலையில் நேற்றைய அடை மழை காரணமாக மரங்களின் கீழ வாழ்ந்த வீடற்ற மக்கள் பெரிதும் அவல வாழ்வை சந்தித்துள்ளனர்.
இவர்களே இன்று காலை யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக நீதிகேட்டு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
தேசிய வீடமைப்பு அதிகாரசபை அமைச்சர் சஜித் பிரேமதாசா வசமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Kommentare:
Kommentar veröffentlichen