கேப்பாப்பிலவின் மர்மம்


கேப்பாப்பிலவு மக்களின் ரோட்டம் ஒரு வாரத்தை எட்டப்போகின்றது.
காணிகளை விடுவிப்பதில் பிரச்சினை இல்லை என்று விமானப்படை அதிகாரிகள் சொல்லியிருக்கின்றார்கள். விமானப்படையின் ஓடு பாதைக்குள் மக்களின் காணிகள் வரவில்லை என்பதையும் விமானப்படை அதிகாரி ஒருவர் சிவசக்தி ஆனந்தனுக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

பொதுமக்கள் கேட்கும் காணிகள் தமக்குத் தேவையானவையல்ல என்பது குறிப்பிட்ட அதிகாரியின் கருத்து. ஆனால், "மேலிடத்து" உத்தரவு கிடைத்தால் மட்டும்தான் காணிகளை விடுவிக்கலாம் என்றும் அவர் சொல்லியிருக்கின்றார். மேலிடத்துடன் கூட்டமைப்பின் தலைவர்கள் பேசியதாகத் தெரியவில்லை.

இது தொடர்பில் விபரமறிந்த நண்பர் ஒருவரிடம் பேசியபோது இரண்டு கேள்விகளை அவர் எழுப்பினார்.

1. கேப்பாப்பிலவில் விமானப்படைத் தளத்தை வைத்திருக்க வேண்டிய தேவை என்ன? விமானப்படைத் தளத்தையோ ஓடுபாதையையோ வைத்திருக்க வேண்டியளவுக்கு கேந்திர முக்கியத்துவம் எதுவும் அந்தப் பகுதிக்கு இல்லை என்பது அவரது வாதம்!

2. விமானப்படைக்கோ வனவளத்துறைக்கோ தேவையில்லாத பகுதிதான் கேப்பாப்பிலவு என்றால் அதனைத் தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக விமானப் படையினர் ஏன் இந்தளவுக்கு முரண்டுபிடிக்க வேண்டும்? அதுவும் 'ஜெனீவா' ஆரம்பமாகவுள்ள நிலையில்!
இந்த இரண்டு கேள்விகளையும் ஆராய்ந்தால் பதில் கிடைக்கலாம் என்கின்றார் அவர்!

0 Kommentare:

Kommentar veröffentlichen