தாயகம் எங்கும் போராட்டம் புதுக்குடியிருப்பு மக்கள் இரண்டாவது நாளாக
உண்ணாவிரதப் போராட்டம், கேப்பாப்புலவு மக்கள் 16 வது நாளாக தொடரும்
போராட்டம்..
உரிமை மீட்க்க போராடும் மக்களுக்கு காய் கொடுப்போம் இவர்கள் போராடத்துக்கு..
காணிகளை விடுவிக்கக்கோரி புதுக்குடியிருப்பில் இரண்டாவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புதுக்குடியிருப்பு இராணுவ முகாமினை அகற்றி தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 12 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இவர்கள் அறிவித்திருந்தனர்.
புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு, பிலவுக் குடியிருப்புக் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் இராணுவத் தளபதி உறுதியளித்துள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிலவுக் குடியிருப்பு மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இவ்வாறு பலரின் உறுதிமொழிகளைக் கேட்டு தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக அம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், தமது காணிகளுக்குள் கால் பதிக்கும்வரை தாம் தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லையெனவும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.

0 Kommentare:
Kommentar veröffentlichen