15 மாசித்திங்கள் 2000 ஆம் வருடம் நினைத்திருக்க முடியாத புலனாய்வின் விழுதொன்று தமிழீழ மண்ணில் விழி மூடிய நாள். தமிழீழமே சோகத்தில் மூழ்க விடுதலை உணர்வு மிக்க போராளி ஒருவன் வீரச்சாவடைந்த நாள்.
லெப் கேணல் பொஸ்கோ / பொற்கோ இந்த பெயரை அறியாதவர்கள் இல்லை எனலாம். அவ்வாறாக மக்களுடன் மக்களாக பணிசெய்யும் பெரும் வீரன். பிறந்தவுடனே பெற்றவர்கள் இறைபணிக்காக அவரை ஈடுபடுத்துவதாக கடவுளிடம் வேண்டியருந்த காரணத்தால் அவர்களது விருப்பத்தின் பெயரில் பாதிரியாராக வேண்டும் என்ற கனவோடு அதற்கான கற்கைநெறியை தொடர்ந்தார் பொற்கோ ஆனால் அதை முன்னெடுத்து சென்று முழுமையானவராக ஒரு பாதிரியாராக அவரால் உருவாக முடியவில்லை. 1983 ஆம் வருடம் சிங்கள வல்லாதிக்கத்தால் திட்டமிட்டு செய்யப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எம்மக்கள் படும் துன்பம் அவர் மனதை இறுக்கமாக்கியது. பாதிரியார் என்ற நிலையை தான் துறக்க வேண்டிய தருணத்தை உணர்ந்து கொண்டார். அதனால் விடுதலைப்புலியாகும் முடிவோடு படகேறினார்.
அடிப்படை பயிற்சிகள், போர்பயிற்சிகளை முடித்து தாயகம் திரும்பியவரை இந்திய இராணுவத்துடனான சண்டை வரவேற்று கொள்கிறது.
பொற்கோ, இந்திய இராணுவத்தின் நெருக்கடி காலத்தில் பொற்கோ, தமிழீழத்தில் தனது கடமையைச் செய்யத் தொடங்கினார். சிறந்த கெரில்லா வீரனாக இந்தியத்துக்கு தொல்லை கொடுக்கும் பல தாக்குதல்களை செய்தார்.
இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு அவசியமான பல கட்டமைப்புக்கள் செழுமைப்படுத்தப்பட்ட போது புலனாய்வுத்துறை கட்டமைக்கப்பட்டு பொட்டம்மான் அவர்களால் பொறுப்புநிலை எடுக்கப்பட்ட போது பொஸ்கோ என்ற பெரு வீரன் புலனாய்வுத்துறைக்குள் உள்வாங்கப்படுகிறார். அவர் புலனாய்வுத்துறையில் தனது பணியை செய்தார்.
மக்களை நேசிக்கின்ற, மக்களுடன் பழகுகின்ற, மக்களை விரும்புகின்ற ஒருவராக அவர் புலனாய்வுப் பணியை செய்ததை இன்றும் யாராலும் மறக்க முடியாது. மக்களிற்கு கஸ்டம் வரும்போது அவர்களுடன் இணைந்து நிற்கின்ற பண்பும், கடமை என்று வருகின்ற போது இறுக்கமாக நிற்கின்றதுமான பல்லாற்றல் கொண்ட போராளியாகவே அவர் இருந்தார்.
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் இராணுவத்துடனான மோதலில் விழுப்புண்ணடைந்த அவர் சாவில் இருந்து தப்பியது பெரும் அதிசயம் என்றே கூற வேண்டும். ஆனாலும் அதை எப்போதும் பெரிது படுத்துவதே இல்லை உடல்வலியை விட உளவலிமை மிக்கவராக தமிழீழத்தின் மீது அதிக நேசம் கொண்டவராக அவர் பணிசெய்தார்.
அவர் செய்த புலனாய்வுப்பிரிவின் முக்கிய பல வேலைகள் பற்றிய தரவுகள் இன்றும் வெளித்தெரியாதனவையாக இருந்தாலும் அதை அவர் முழுமையாக செய்து கொண்டிருந்தார். அப்போது எமது விடுதலை அமைப்பின் ஆளுகைப்பகுதிக்குள் வசிக்கும் மக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்காக அனுமதி நடைமுறை ஒன்றை செய்ய வேண்டிய தேவை வந்தது. அந்த பணியை பொறுப்பெடுக்க புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரால் கொடுக்கப்பட்ட கட்டளையை ஏற்று மக்களுக்கான பணியை தொடர்ந்தார்.
இந்த நிலையில்தான் இவரது உடல்நிலை பயங்கரமான சிக்கல்களை உருவாக்கியது. காப்பாற்றத் துடித்த மருத்துவர்கள் செய்ய வேண்டிய அத்தனையையும் செய்தார்கள். அவர்களால் காப்பாற்றப்படுவார் என்று தேசத்தலைவனும் போராளிகளும் காத்துக் கிடந்தார்கள். ஆனால் மருத்துவர்களையும் எம் மருத்துவ வளங்களையும் மீறி பொஸ்கோ என்ற போராளி விழி மூடிப்போனார். வெளித்தெரியாத பல சாதனைகளை கொண்ட வேங்கை சுகவீனத்தால் விழி மூடிப்போனார். தமிழீழமே சோகத்தில் இருந்தது. விதையாகி விட்ட புலனாய்வின் விழுதொன்றை எண்ணி இன்றும் மனம் அழுகிறது...
இரத்தினம் கவிமகன்

0 Kommentare:
Kommentar veröffentlichen