நல்லிணக்கம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்டவை தொடர்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காகவே இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
குறித்த நிதியை இலங்கையர்களுக்கு நிதி உதவி திட்டமாக வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த தொகையினை நிதி உதவி திட்டத்தின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு முதலில் வழங்கவுள்ளது.
மேலும் குறித்த உதவி தொகையினை பெற்றுக்கொள்வதற்காக பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், கலாச்சார நிறுவனங்கள், மற்றும் தனியார் துறையினரும் விண்ணப்பங்களை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Kommentare:
Kommentar veröffentlichen