2009 மாசித்திங்கள் 20 ஆம் நாள் எமது வரலாற்றில் புதிய வடிவ போரியல் வடிவம் அரங்கேறிய நாள். தமிழீழத்தை, தலைவனை, மக்களை நேசித்த வீர வேங்கைகளை இழந்த நாள். தலைவனால் நேசிக்கப்பட்ட தேசத்தின் சொத்துக்கள் வெடியோடு வெடியாக சிங்களத்தின் வான்பரப்பில் காற்றோடு காற்றாகி போன நாள்.
தமிழீழ வான்படை, கடற்படை, தரைப்படை என்று முப்படைகளும் சர்வதேசத்தின் எண்ணங்களிலும் இந்தியத்தின் மற்றும் சிங்களத்தின் மனதினிலும் தமிழரின் வீர வரலாற்றை அதிகப்படுத்தி தமிழன் மீதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உரிமைப் போராட்டத்தின் மீதும் சினத்தை உருவாக்கி இருப்பது யதார்த்தம்.
விடுதலைப்புலிகள் முப்படைக் கட்டுமானத்தை நிர்வகிப்பதை எந்த நாடுகளோ அல்லது சிங்கள அதிகார வர்க்கமோ விரும்பவில்லை. இது சர்வதேசத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருந்து வெளியாகிய யதார்த்தான உண்மை.
அதீத வளர்ச்சி பெற்று வரும் தமிழீழ விடுதலைப் போராட்டமானது அண்டை நாடுகளின் அல்லது மேற்குலக நாடுகளின் வெளிநாட்டு கொள்கைப் பகுப்புக்களில் பல மாற்றங்களை கொண்டு வரும் என்பதை புரிந்தே இருந்தார்கள். ஐநா அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக தமிழீழம் அமையும் என்றால் பல அரசியல் விளைவுகளை சர்வதேசம் தாங்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
எந்த உரிமை போராட்ட அமைப்புக்களும் தம்மிடம் இல்லாத கட்டமைப்புக்களையும் நிர்வாக அலகுகளையும் தம்மிடம் வைத்து உயர் தொழில்நுட்ப சண்டை நுட்பங்களையும் கொண்டு முப்படைகள் மட்டுமல்லாது நிழல் அரசாங்கம் ஒன்றை நிர்வகித்த தமிழீழ விடுதலை புலிகள் தமக்கு அரசியல் ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் பாரிய பிரச்சனைகளை தரக் கூடும் என்று சர்வதேசம் நினைத்தது. ஆனால் நாம் எம் உரிமைக்காக போராடினோம் எங்கள் மக்களின் நின்மதிக்காக போராடினோம் என்பதை நிறுவி வந்தது எமது அமைப்பு. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி எம்மை முடக்க சர்வதேசம் முற்றுமுழுதாக முயன்றது. அதன் பல நிகழ்வுகள் வரலாறாகிக் கிடக்கிறது.
இந்த நிலையில் தான் எமது சண்டை அணிகளில் எல்லாம் உச்சமாக எமது முப்படையின் ஒன்றான இளம்நீல வரி உடுத்த வான்படை சர்வதேசத்துக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
2007 பங்குனி 26 ஆம் நாள் முதல் தாக்குதலை செய்கிறது தமிழீழ வான்படை அதுவரை இரகசியமாக கட்டியெழுப்பப்பட்ட வான்படையின் இருப்பை கட்டுநாயக்கா வானூர்தித் தளத்தில் பெரும் தாக்குதலை செய்து உறுதிப்படுத்தியது தமிழீழ வான்படை . அன்றில் இருந்து, தமிழீழ வான்பரப்புக்குள் உட்புகும் சிங்களத்தின் வானூர்திகளை சிதைத்தெறிந்த எல்லாளன் நடவடிக்கை தொடக்கம் பலாலி இராணுவமுகாம், திருகோணமலை துறைமுக கடற்படை முகாம் வவுனியா ஜோசப் முகாம் என்று தொடர்ந்ததை எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாது தவித்து கொண்டிருந்தன. வானம் ஏறிவந்து சிங்கள இலக்குகளை குறிவைக்கும் புலிகளை எவ்வாறு தடுப்பது என்பது தெரியாது அதிர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் தான் தமிழீழம் மீது ஏற்படுத்தப்பட்ட இறுதி சண்டை என்ற இனவழிப்பு நடவடிக்கை எம் இனத்தையே கொன்று குவித்து கொண்டிருந்தது. இந்த இனவழிப்பை தடுத்து எமது சுதந்திர போராட்டத்தை நிலைப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் தமது உயிர்களை ஈந்த மாவீரர்கள் வரிசை நீண்டுகொண்டே இருந்தது.
1987 ஆனி 5 ஆம் நாளுடன் ஆரம்பித்த கரும்புலிகளின் வரலாறு தரைக்கரும்புலியாக, கடற்கரும்புலியாக, மறைமுக கரும்புலியாக நிமிர்ந்து எங்கள் தடையுடைப்பிகளாக நின்றனர். இந்த நிலையில் தான் வரலாற்றில் பெரும் படைப்பிரிவாகவும் தமிழீழ இராணுவத்தின் வீரத்தின் அதி உச்சமாகவும் விளங்கும் வான்படையின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த அத்தியாயத்துடன், வான்கரும்புலிகள் உதயமாகின்றனர்.
இந்த நிலையில் தான் சிங்கள தேசத்தின் கொடிய இராணுவ படைகள் மீது பெரும் தாக்குதலை செய்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டிய தேவையை எமது அமைப்பு உணர்ந்து கொண்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அத்தனை கட்டமைப்பும் தமது உயிரை வெறுத்து சண்டையில் நின்றனர்.
தமிழீழ தேசியத்தலைவரால் மிகவும் நேசிக்கப்பட்ட வான்படை போராளிகள் இந்த தாக்குதலை செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை தலைமையிடம் இருந்தது. அதற்கான தாக்குதல் திட்டம் உடனடியாக திட்டமிடப்பட்டு கேணல் ரூபன், லெப்டினன் கேணல் சிரித்திரன் ஆகியோர் வான்கரும்புலிகளாக தெரிவு செய்யப்படுகின்றனர். எமது மக்களுக்காக நாம் வெடிக்கின்றோம். எமது சாவு ஒரு சுதந்திரமான வரலாற்றை மாற்றி எழுதும் என்ற நம்பிக்கையோடு தலைவரிடம் இருந்தும் தமது தளபதி பொறுப்பாளர்களிடம் இருந்து விடைபெறுகின்றனர்.
சிங்களத்தின் கோட்டைக்குள் தமது வீரத்தை சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் கற்பித்து தமது உயிரை காற்றாக்கி வான்கரும்புலிகளாக காற்றோடு கலந்தார்கள். காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்டு வீரத்தின் அடையாளங்களாக முதல் வான்கரும்புலிகளாக. வெடித்து வரலாறாகி விட்டனர்.
கவிமகன் . இ

0 Kommentare:
Kommentar veröffentlichen