வடமாகாணசபையில் அமைக்கப்படுகின்ற குழுக்கள் கொஞ்சக் காலத்தில் மூடப்படுவது இயல்பு. அவ்வகையில் இன்று தொடங்கப்படும் குறைகேள் நடைமுறை கைவிடப்படுமோ என்று யோசிக்கின்றேன். ஏன் என்றால் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், மேலும் வேதனம், கொடுப்பனவுகள், இன்னோரன்ன விடயங்களைக் கவனிக்கும் அதே அலுவலர்களிடமே உத்தியோகத்தர்களைத் தமது குறைகளைக் கூறுங்கள் என்று கூறுகின்றோமென தெரிவித்துள்ளார் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன்.
வடமாகாண ஊழியர்களிறகு நீதி கிடைக்கவென உருவாக்கப்பட்ட குழுக்களது அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது எந்தளவுக்குப் பயன் அளிக்கும் என்பதை இருந்தே பார்க்க வேண்டும். எனினும் இந்தப் பொறிமுறை வரவேற்கப்பட வேண்டியதொன்று. நல்லாட்சியைப் பேண எடுத்த ஒரு நடவடிக்கையாகவே இதைக் காண்கின்றேன்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நியாயமான நீதியான தீர்மானங்கள்
எடுத்தல் போன்ற பலவும் நல்;லாட்சியின் அம்சங்கள். அவை நடைமுறைப்படுத்தப்பட
வேண்டும். வடமாகாணம் அவற்றில் முன்னணியில் நிற்க வேண்டும் என்று
ஆசைப்படுகின்றேன். தற்போது தகவல் அறியும் உரித்தும் நடைமுறைக்கு
வந்துள்ளது. இவை ஜனநாயகத்தின் சிறப்பம்சங்கள்.
எனவே இன்றைய இந்த குறைகேள் மையமானது உங்களுடைய குறைகளில் நிவர்த்தி செய்யப்படக்கூடிய, நிவர்த்தி செய்யப்படவேண்டிய குறைகள் பற்றிக் கவனமாக ஆராய வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் முன்வைக்கின்ற அனைத்துக் கோரிக்கைகளும் உங்களுக்குச் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் இம்மையக் குழுக்களின் அதிகாரங்கள் ஊழியர்களின் மனோநிலைகளைப் புரிந்துகொண்டுஅவர்களுக்குமுறையாக வழிகாட்டி அவர்களை வல்லவர்களாக, சிறந்த உத்தியோகத்தர்களாக, ஊழியர்களாக, திணைக்களத்தின் மீது விசுவாசம் கொண்டவர்களாக மாற்றப் பாடுபடலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Kommentare:
Kommentar veröffentlichen