மீண்டும் புலிப்பயத்தில் நடுங்கும் இலங்கை அரசு!

12 ஆயிரம் விடுதலைப்புலிகள்: மீளுருவாக காரணம் மஹிந்த கோத்தா..!

புலிகளின் மீள் உருவாக்கத்திற்கும் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுமே காரணம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனை கொல்ல கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஒரு திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அதை புல­னாய்வுப்பிரி­வினர் தடுத்­துள்­ளனர்.

இந்த நிலையில் இரண்­டா­வது முயற்­சி­யாக இந்த ஆண்டு ஜன­வரி 13 ஆம் திகதி கிளைமோர் குண்டு தாக்­குதல் நடத்த திட்டம் தீட்­டி­ய­தாக புல­னாய்வு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இத­னுடன் தொடர்­பு­பட்ட நான்கு பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் நால்­வரும் விடு­தலைப் புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் உறுப்­பி­னர்கள் என இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.

புலி­களின் மீள் உரு­வாக்கம் நட­வ­டிக்­கைகளை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் சர்­வ­தேச நாடு­களில் புலி­களின் நட­வ­டிக்­கைகள் கையா­ளப்­பட்டு வரு­வ­தாகும் நாம் ஆரம்­பத்தில் இருந்தே எச்­ச­ரிக்­கையை விடுத்தோம்.

யுத்தம் முடி­வுக்கு வந்­த­வுடன் நாட்டில் புலிகள் கொல்­லப்­பட்டு விட்­டனர். இனி­மேலும் புலி­களின் நட­வ­டிக்­கைகள் இருக்­காது என கூறிய நிலையில் நாம் அதை எதிர்த்தும் வந்தோம்.

இலங்கையில் இருந்த 12 ஆயிரம் புலி­களை அர­சாங்கம் விடு­தலை செய்­தது. அமெ­ரிக்கா, நோர்வே, பிரான்ஸ் போன்ற இடங்களில் இவர்கள் தற்போது மீளுருவாக்கம் தொடர்பில் செயற்பாடுகள் காணப்படுகின்றது.

இவ்வாறான புலிகள் மீள் உருவாக்கத்திற்கும் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவே காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen