சூரிச் சைவத் தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் மாற்றுத் திறனாளிகளுக்கான கணனிக் கற்கை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பி; மாற்றுத் திறனாளிகளுக்கான கணனிக் கற்கை நிலையம் இன்றைய தினம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் திறந்து வைக்கப்பட்டது.

 மேலும் இங்கு கலந்து கொண்ட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 100 மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டிப் புத்தகங்களும் வழங்கப்பட்டது. அன்பே சிவம் அமைப்பின் தலைவர் திரு. அருளானந்தசோதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர் திரு. S. சத்தியசீலன் அவர்களும். சிறப்பு விருந்தினராக வடகிழக்கு மாகாண முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. அனந்தராஜ் அவர்களும், கௌரவ விருந்தினர்கள் திரு. ளு. சுரேஷ்குமார் (முகாமையாளர்ää மக்கள் வங்கி கிளிநொச்சி) திரு. மு. குகதாசன் (பிரதம அஞ்சல் அதிபர்ää கிளிநொச்சி) திரு. T. பேரின்பராஜா (முறைசாராக்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர், கிளிநொச்சி வலயம்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 இங்கு உரையாற்றிய பிரதம விருந்தினர் அவர்கள் அன்பே சிவம் அமைப்பானது மாற்றுத் திறன் கொண்ட எமது உறவுகளும் சமூகத்தில் சராசரி மனிதன் போன்று மேன்பட நினைத்து அவர்களும் வாழ்வில் முன்னேறிச் செல்ல வழிகாட்டியாக செயற்பட்டமையை சுட்டிக்காட்டினார். தமிழர் பிரதேசங்களைப் பொறுத்தவரை இதுவரை வேறெந்த அமைப்புக்களும் இப்படியானதொரு செயற்பாட்டினை முன்னெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே எமது தாயக உறவுகள் அனைவரும் அவர்களது எல்லாச் செயற்பாடுகளும் எமது உறவுகளை மனதில் கொண்டே அமைகின்றதென்பதால் எப்போதும் நன்றிக்கடன் உடையவர்களாகவே காணப்படுகின்றனர். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த புலம்பெயர் சுவிஸ் வாழ் உறவுகளுக்கும்; சூரிச் சிவன் ஆலய தொண்டர்ளுக்கும் தங்களின்; மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen