பத்து லட்சம் தரலாம் கேப்பாபுலவு போராட்டத்தை கைவிடுங்கள்

ஸ்ரீலங்கா அரசின் கைக்கூலிகள் புரோக்கர் ) நேற்றைய தினம் 20.02.2017 திங்கள்கிழமை மாலை 3 பேர் சேர்ந்த குழுவாக போராட்டம் நடந்த இடத்திற்கு சென்று போராட்டத்தை கைவிடச்சொல்லியும் எத்தனை நாளைக்கு இப்படி கஷ்டப்பட போறீர்கள் என கூறியும் உங்களுடைய அடையாள அட்டை இலக்கத்தையும் வங்கி கணக்கு இலக்கத்தையும் தாருங்கள் உங்களுக்கு 10 லட்சம் ரூபா உடனடியாக வங்கியில் போடுவதாக கூறியுள்ளார்கள்.

இப்படி பணம் தரலாம் போராட்டத்தை கைவிடுங்கள் என பேரம்பேசியது ஒரு பெண்.
இவர் ஒரு பிரதான தமிழ் கட்சியின் உறுப்பினரும் ஆவார். கடந்த தேர்தலில் வாக்கு கேட்டவா .அந்த கட்சியின் நட்பெயரை காப்பாற்றுவதற்காக இந்த பெண்ணின் பெயரை நாம் குறிப்பிட விரும்பவில்லை.

தமிழர்கள் ஒன்றுமட்டும் புரிந்து கொள்ளவேண்டும் 10 லட்சம் தந்து போராட்டத்தை நிறுத்த அரசு முற்ப்படுகிறது என்றால் இந்த போராட்டம் எப்படி வலிமையான போராட்டம் என்றும் இந்த போராட்டம் அரசிற்கு எவ்வாறு நெருக்கடியை கொடுக்கிறது என்பதையும் மேலும் 10 லட்சம் கொடுக்கிறேன் என்று கூறிய பெண்ணின் வாங்கி கணக்கில் எத்தனை லட்சம் வைப்பில் இடப்படும் என்பதையும் மக்கள் இத்தருணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

0 Kommentare:

Kommentar veröffentlichen