பிரித்தானியா இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை, ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்பிக்க உள்ளது

இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க உள்ளது. எதிர்வரும் 27ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம்  அமர்வு நடைபெறவுள்ள நிலையில் இந்த அமர்வுகளின் போது இலங்கை தொடர்பான  தீர்மானம் ஒன்றுக்கு பிரித்தானியா அனுசரணை வழங்க உள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான பொறுப்பு கூறுதல்களுக்கு கால அவகாசம் வழங்கும் வகையில் இந்த தீர்மானம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட முன்னதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்ற உள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 22ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை குறித்து பேசப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 Kommentare:

Kommentar veröffentlichen