முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மற்றும்
புதுக்குடியிருப்பு மக்களின் மண்மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக நாளை காலை
7.30 மணிமுதல் 8.30 மணிவரை வடக்கு மாகாணத்தின் சகல பாடசாலை மாணவர்களையும்
பாடசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துமாறு வடக்கு மாகாண சபை
உறுப்பினர் து.ரவிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களின் மண் மீட்பு போராட்டத்தில் 54 பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை புறக்கணித்து பெற்றோருடன் போராடி வருகின்ற நிலையில், குறித்த மாணவர்கள் கல்வியை தொடர்வதற்காகவும் அவர்களின் நியாயமான போராட்டம் வெற்றிபெறவும் இப் போராட்டத்தை நடத்துமாறு ரவிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சக மாணவர்களின் இந்த முயற்சியானது தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கல்விக்கும் மக்களின் போராட்டத்திற்கும் ஒத்துழைப்பாக இருக்குமென ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Kommentare:
Kommentar veröffentlichen