20 ஆவது நாளாக தொடரும் கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்பு போராட்டம் !!

கேப்பாப்புலவில் விமானப் படையினரிடமிருந்து தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி தொடர் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் போராட்டம் அரசாங்கத்திற்கு எதிரானதோ அல்லது விமானப் படையினருக்கு எதிரானதோ அல்ல.

இது எமது பூர்வீக காணிகள் தொடர்பான போராட்டம். எமது காணிகளை மீட்பதற்கு நாம் இந்த போராட்டத்தினை மேற்கொள்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்று அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை நான் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டாலும் அரச அதிபர் என்ற வகையில் நான் எனது கடமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர, இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முடியாது என்று சொல்கின்றார் மாவட்ட அரசாங்க அதிபர்.

இந்நிலையில் பொதுமக்கள் என்ன.. எமக்கு எதிராக ஆயுதம் ஏந்தியா போராடுகின்றார்கள்?

அவர்கள் தமக்கு தேவையானதை பெற்றுக்கொள்ள முனைகின்றனர். இதனால் எமக்கு இதுவரை எந்த இடையூறுகளும் ஏற்படவில்லை.

அதே போல் எமது தரப்பினரால் அவர்களுக்கும் எவ்வித தடைகளும் ஏற்படவில்லை என்று கூறுகின்றனர் விமானப்படையினர்.

இந்நிலையில் விமானப்படையினர் தமது காணிகள், உள்நுழைந்தால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகுவார்கள் என்ற பாததை நேற்று காட்சிப் படுத்தப்பட்டபோதும் அவற்றை விமானப்படையினர் இன்று நிராகரித்து உட்செல்லத்தடை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதே வேளை கவலரணில் இருந்து புகைப்படம் எடுப்பது தொடர்பாக இன்று ஊடகவியலாளர் ஒருவர் விமனப்படை வீரரிடம் வினவியபோது இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேப்பாப்புலவு பொதுமக்கள் தமது சொந்த நிலங்களை மீட்பதே எமது தெளிவான சிந்தனை. அதை நோக்கியே நாம் எமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம் என்று குறிப்பிட்டு தமது போராட்டத்தினை தொடர்கின்றனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen