18 மாசித்திங்கள் 1994 சுண்டிக்குளம் கடல் பகுதி அமைதியாக இருந்தது. அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் அந்த கடலை நம்பி தமது வாழ்வாதாரத்தை கொண்டு சென்றன். ஆனால் இன்றைய நாளில் எமது மக்களின் குருதி குடித்த சிங்கள வானூர்திகளின் கொடுமைகளினை வரலாறு தன்னை எழுதி கொண்டது. தமிழீழ விடுதலை வரலாற்றில் பலமும் பலவீனமும் எங்கள் மக்கள் என்பதை சிங்களம் மட்டுமல்லாது சர்வதேசமே உணர்ந்திருந்தது. அத்தகைய மக்கள் மீது தமது தாக்குதல்களை மிலேச்சத்தனமாக செய்வதனூடாக தமிழினத்தையே அழிக்கும் இனவழிப்பு நடவடிக்கையை செய்வது வரலாறு.
அன்றைய நாளும் அப்படியே நடந்தது தமது வாழ்வாதார நடவடிக்கைகளில் இருந்த மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை சிங்களத்தின் வான்படை செய்கிறது. மீன்பிடித்துக் கொண்டிருந்த மக்கள் பாதுகாப்பு தேடி ஓடுகிறார்கள். ஓடிய மக்களை குறிவைத்தும் தாக்குதலை செய்கிறது சிங்களத்தின் வான்படை. படகுகள் சிதைகின்றன. வலைகள், மீன்பிடி உபகரணங்கள் என மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. வான்படையின் வானூர்திகளின் வெறியாட்டத்தில் 10 அப்பாவி பொது மக்கள் சாவடைகின்றனர். சுண்டிக்குளம் கடற்கரை இரத்தாத்தால் சிவப்பாகி கிடக்கிறது.
இதே நாளில் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் இறுதி நாட்களில் ஒன்றாக கருதப்படும் இன்றைய நாளில் சிங்களம் திட்டமிட்டு ஏற்படுத்திய பாதுகாப்பு வலையங்கள் என்று கூறப்படும் கொலை வலையங்களை நோக்கி நகர்ந்த மக்களை கொன்று குவித்தது இலங்கை படை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு கடலோர கிராமம் புதுமாத்தளன். இறுதியாக முல்லை மாவட்ட, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகள் எல்லாம் ஒன்றிணைந்து புதுமாத்தளன் பகுதியில் மக்களுக்கான மருத்துவ தேவையை நிறைவேற்றி கொண்டருந்தன. மருந்துகளோ இரத்த தடுப்பான்களோ அல்லது எந்த வசதிகளோ அற்ற நிலையில் அந்த மருத்துவமனை கிடைத்த வளங்களோடு இயங்கி கொண்டிருக்க. அதை நோக்கிய தாக்குதல் ஒன்றையும் மக்கள் வாழ்விடங்களை நோக்கிய தாக்குதல் ஒன்றையும் ஆனந்தபுரம் மக்கள் வாழ்விடங்களை நோக்கிய வான்படை மற்றும் எறிகணை தாக்குதல்களை சிங்களம் செய்கிறது. ஆட்லறி எறிகணையால் மருத்துவமனை வளாகம் சிதைக்கப்படுகிறது. இந்த முழுமையான தாக்குதல்களில் 158 க்கும் மேற்பட்ட அப்பாவி உறவுகள் உடல் சிதறி சாவடைந்தனர்.
தமிழீழ போராட்டம் தினமும் சிங்களத்தால் வதைபட்டு கிடந்த போதெல்லாம் அதை தடுத்திட எழுந்த வேங்கைகள் பல்லாயிரம் பேர். அவர்களில் ஆயிரமாயிரம் மான மாவீரர்கள் தமது இன்னுயிரை கொடுத்து தமிழீழ மண்ணை காத்து நின்றார்கள். தமிழீழம் என்ற இலக்குக்காக தமது சொந்தங்களை இழந்து உறவுகளை பிரிந்து விடுதலை என்ற ஒன்றே இலக்கு என்று பயணித்தவர்கள் அந்த வகையில் இன்றைய நாளில்,
மேஜர் குணாளினி அல்லது இளவேணி என்று அழைக்கப்படும் மார்க்கண்டு திருமகள் தன் விழிகளை மூடிக் கொண்டாள். யாழ்ப்பாணத்தின் தென்மராட்சியின் சாவகச்சேரி பகுதியில் 13 புரட்டாதி 1977 ஆம் வருடம் மார்க்கண்டு மணவிணையரின் மகளாக பிறந்து, தேச விடியல் களத்தில் புலியாகி தனது பணியின் போது விழி மூடி வீழ்ந்தாள். தமிழீழ விடுதலை போராட்டத்தின் பெரும் சண்டைக்காறியான குணாளினி கிளிநொச்சிப் பகுதியில் வேறு பணியில் இருந்த போது சிங்களத்தின் எறிகணை ஒன்றின் வெடிப்பு ஏற்படுத்திய விழுப்புண்ணுக்கான சிகிச்சை பலன்ற்றுப் போக தனது விழிகளை மூடி தமிழீழ மண்ணுக்காக வீரச்சாவடைந்தாள். அவளோடு பயணித்து அவளின் கனவுகளோடு நிமிர்ந்து நின்ற வேங்கைகளின் நினைவோடு நகர்கிறது ஈழப்பயணம்..
0 Kommentare:
Kommentar veröffentlichen