கோப்பாப்புலவு 16 நாட்கள் கடந்திருக்கிறது

16 நாட்கள் கடந்திருக்கிறது. ஒரு மயில் கல் எட்டவில்லை தீர்வு. பேருக்கு அரசியல் வியாதிகளும், நல்லாட்சி என்ற பொய் முகத்தில் ஒரு அரசும் மக்களை பகடைக்காய்களாய் வைத்து விளையாடுகிறார்கள்.
சொந்த வீடின்றி, சொந்த நிலமின்றி, பிள்ளைகள் ரோட்டில் படிக்கிறது. பிஞ்சும் கருப்பு கொடியேந்தி போராடுகிறது. அந்த ஒரு துளி வைராக்கியம் கூட வரவில்லையே பெயருக்கு அரசியல் நடாத்தும் மூடர்களே! பனி, குளிர்,வெயில் இத்தனையும் குளிரூட்டும் வண்டியிலும், அறையிலும் எப்படித்தான் தெரியப் போகிறது. சாராய கிளாசுடன் படம் பிடிக்க மூஞ்சை நீட்டும் நீங்கள் ஒரு முறை இந்த பிஞ்சுகளின் முகத்தினையும் பார்த்து விட்டு களியாடுங்கள்.
வீதிகளில் இனம் வாட உமக்கு எதற்கடா வீண் பொழைப்பு? பிரதமருடன் பேசினால் முடிவு கிடைக்கும் என முகம் சுழிக்காமல் கூறுகிறீர் அதைக் கேட்கத்தானே மக்கள் உமை தேர்ந்தெடுத்தார்கள். இதிலிருந்து புரியலயா நீ ஒரு ஏசன்ட் என்று.
கோப்பாப்புலவு வரலாறை எழுதும்


0 Kommentare:

Kommentar veröffentlichen