18 ஆவது நாளாகவும் தமிழனத்தின் நிலம் மீழவில்லை!!!

வீதியே வீடாக 18 ஆவது நாளாக தொடரும் கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்பு போராட்டம்
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 18 நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலிலும் பனியிலும் வீதியையே வீடாக்கி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. தமிழர்கள் ஓட்டு போட்டு உருவாக்கிய இந்த அரசும் காணாமல் இருக்கிறது..
இந்த மக்களின் போராட்டத்துக்கு பலர் ஆதரவினை தெரிவித்திருந்தனர். இருந்தும் எந்த வித மாற்றமும் இடம்பெறவில்லை..
வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், அனந்தி சசிதரன், குணசீலன் மட்டுமல்ல பல அரசியல் வட்டாரங்கள் இந்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இருந்தும் எந்த பலனும் அளிக்கவில்லை
எமது நிலத்தில் நாம் குடிகொள்ள எவ்வளவு பிரச்சனைகள்.. 2009 க்கு முன்பு நாம் எவ்வளவு சுதந்திரமாக வாழ்ந்தோம் என்பது இப்பொழுது பலருக்கு புரியும்.. உலக நாடுகளுக்கும் இது புரியும்
எமது நிலத்தை நாம் தான் ஆழ வேண்டும் !!


0 Kommentare:

Kommentar veröffentlichen