புதுக்குடியிருப்பில் தொடர்கின்றது உண்ணாவிரத போராட்டம் !!


தமது பூர்வீக நிலங்களை விடுவிக்ககோரி முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் சுழற்சி முறையில் மூன்றாவது நாளாக தமது உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்கின்றனர்.

கடந்த 14 ஆம் திகதி காலை உண்ணாவிரதம் ஆரம்பித்த மூன்று போர் அடங்கிய குழு 48 மணிநேரம் கடந்த நிலையில் அவர்கள் உண்ணாவிரதத்தினை காலை முடித்துக்கொண்டனர்.

இந்த நிலையில் தொடர்ந்தும் மூன்றுபோர் அடங்கிய குழு உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இந்த சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு முடிவு கிடைக்கும் என்று நம்புகின்றோம்.

அப்படி கிடைக்க வில்லை என்றால் நாங்கள் எமது போராட்டங்களின் வடிவங்களை மாற்றி, எமது காணிகளுக்குள் செல்லும் வரை எமது ஜனநாயகப் போராட்டம் தொடரும். இதைத்தவிர வேறுவழியில்லை என்று கூறி அவர்களின் போராட்டத்தினை தொடர்கின்றனர்.

மேலும், உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்துள்ள குழுக்களில் பேராதனை பல்கலைக்கழக மாணவன் மற்றும் படித்த, படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

0 Kommentare:

Kommentar veröffentlichen