கேப்பாப்புலவு மக்களை வேவு பார்க்கும் விமான படையினர் !!


முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் 17வது நாளாகவும் மக்கள் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை மறைமுகமகாக விமானப்படையினர் வேவு பார்க்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது போராட்டத்தினை நிறைவு செய்வதற்கு விரைவில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் சிறுவர் முதல் முதியர்வர்கள் வரை ஈடுபட்டுள்ளனர்.
தாயகப் பகுதியில் தமது உரிமைக்காக ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தும் மக்களை வேவு பார்ப்பதும் அவர்களை மிரட்டுவதும் புலனாய்வுத்துறையின் நடவடிக்கையாக தற்போதும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Kommentare:

Kommentar veröffentlichen