மறக்கத்தகுமோ...22.02.2017

மறக்கத்தகுமோ...22.02.2017
பருத்தித்துறை கடலில் காவியமாகிய கரியவர்கள்...

1998 மாசித்திங்கள் 22 ஆம் நாள். தமிழீழ விடுதலை போராட்டத்தின் வெற்றி நாட்களில் ஒன்று. கடற்புலிகளின் வீரத்தை கரும்புலிகளின் தாக்குதல் வேகத்தை நாங்கள் மட்டுமல்ல உலக நாடுகளும் சிங்களமும் உணர்ந்த நாட்களில் ஒன்று. எங்களின் சுதந்திர சுவாசத்தைக்காக தமது சுவாசத்தை நிறுத்தி காற்றோறு கலந்து விட்ட கரிய புலிகளை நாம் இழந்த நாள். தமிழீழ விடுதலைக்காக கறுப்பு வரிகள் இரத்த சிதறல்களாகிய நாள்

1995-1996 ஆம் ஆத்டு காலத்தில், யாழ்ப்பாணத்தை கைப்பற்றி தமது ஆளுகைக்குள் கொண்டு வந்த சிங்கள இராணுவம் முற்றுமுழுதான கடல் வளத்தை நம்பி தனது படையிருப்பை யாழ்ப்பாணத்தில் தக்க வைத்துக் கொண்டிருந்தது. சிங்கள தேசம் தனக்குத் தேவையான ஆயுத, உணவு, ஆளணி என்று அத்தனையையும் கடல்வழியையே நம்பி இருந்தது. கடலினூடாகவே அத்தனையும் பரிமாற்றப்பட்டு வந்தது. தொடரணியாக பல டோறாக் கலங்களின் பாதுகாப்போடு பயணிக்கும் கப்பல்கள் இந்த பணியை சிங்களத்துக்கு சரியாக செயது வந்தன. இதை தடுக்க வேண்டிய தேவை எமது அமைப்புக்கு எழுந்த போது அதற்கான திட்டம் கடற்புலிகளால் இடப்படுகிறது. அணிகள் தெரிவு செய்யப்பட்டு திட்டம் விளக்கப்பட்டு அணித்தலைவர்கள் கட்டளையதிகாரிகள் அடைவரும் இலக்குக்காக காத்திருந்தனர்.

1998 மாசி 22 நாள் இரவு வேளை திட்டத்துக்கான இலக்கு முல்லைக்கடலில் கடற்புலிகளுக்கு கிடைத்தது. 6 டோராக்கள் பாதுகாப்பளிக்க, வலம்புரி, பபதா என்ற இரு கடற்கலங்களை ஆயுதம் ஆளணி என்று யாழ்ப்பாணம் நோக்கி நகர்த்தியது சிங்கள கடற்படை இதை இனங்கண்டு இருகப்பல்களையும் வந்த டோறாக்களையும் அழிக்க கட்டளை வழங்கப்படுகிறது. இதற்காக,

லெப்டினன் கேணல் நிரோஜன் தலமையிலான அணிகள் கடலில் இறங்குகின்றன. வரும் பகைக்கலங்களை அழிப்பதன் மூலம் இராணுவ வழங்கலை தடுத்து நிறுத்தி யாழ்ப்பாணத்தில் நடந்து வந்த இராணுவ கொடுமைகளை இல்லாது செய்ய கடற்புலிகள் உறுதி எடுத்து கொள்கின்றர். சிங்களத்துடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த படைபலத்துடன் வெறும் மூன்று சண்டைப்படகுகளுடன் புலிகள் எதிரியை எதிர் கொண்டனர். ஆனாலும் எந்த நாட்டிலுமே இல்லாத மனவுறுதியும் இலக்கழிக்கும் திடமும் தமிழீழம் என்ற இலக்கை மட்டுமே மனதில் கொண்ட உயர் ஆயுதமான உயிர்ஆயுதங்கள் புலிகளிடம் இருந்தன. அதுவே எமது படைபலம். கரும்புலிகள் என்ற பெரும் உயிராயுதங்கள் கொண்டு பெற்ற இலக்கழிப்புக்கள் கொஞ்சமல்ல. அதைப்போலவே இன்றும் பெரும் படைபலத்துடன் புலிகள் நிமிர்ந்து நின்றனர்.

எமது ஆளுகை பிரதேசத்தைத் தாண்டி சிங்களத்தின் கொலை வலையத்துக்குள் சிங்கள கப்பல்களை அழிக்க படகேறி போனார்கள் புலிகள். "வலம்புரி"பபதா" என்ற இரு கப்பல்களும் புலிகள் விரித்த பொறியில் மாட்டி கொண்டன. இரண்டு கப்பல்களையும் அழித்தொழிக்களும் பணியில் இருந்த கட்டளைத்தளபதியின் கட்டளைகள் ஒவ்வொன்றும் உறுதியாக வந்து சாதகமற்ற களத்தை சாதகமாக்கியது.
கரிய புலிகள் உறுதியோடு காத்திருந்தனர்.

கப்பல்களை பாதுகாத்துட டோறாக்கள் முனைந்தன கடுமையான எதிர்ப்பை தந்தன. கட்டளை அதிகாரிகளில் ஒருவனான லெப்டினன் கேணல் சிலம்பரசன் கரும்புலிகளுக்கான கட்டளையாளனாகவும் இருக்கின்றான். களநிலைக்பேற்ப அவதானிப்புக்களை செய்தான். பாய்ந்து வந்த நெருப்பு ரவைகளுக்கு நடுவே கரும்புலிகளுக்கான பாதைக்காக காத்திருந்தான். தருணம் வந்தது. பாதைக்கான கட்டளையை வழங்கி பாதையை அமைத்து அவர்களுக்கான கட்டளையை வழங்குகிறான். டோறாக்கள் தடுக்க முனைகின்றன. ஆனால் டோறாக்களால் முடியாது போனது. கரும்புலிப்படகுகள் பாய்ந்து செல்கின்றன. கப்பல்கள் வெடித்து சிதறுகின்றன. வலம்புரி, பபதா என்ற இரு கப்பல்களும் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டன. இந்த சண்டையில் தமது உயிர்களை துச்சமாக மதித்து தமிழீழ விடுதலைக்காக காற்றோடு காற்றாகி கலந்து போனார்கள் பதினொரு கரும்புலி மாவீரர்கள்.

லெப். கேணல் கரன், மேஜர் வள்ளுவன்,மேஜர் குமரேஸ்,மேஜர் தமிழினியன், மேஜர் சுலோஜன், மேஜர் தமிழ்நங்கை கப்டன் மொறிஸ், கப்டன் வனிதா, கப்டன் நங்கை, கப்டன் ஜனார்த்தனி, கப்டன் மேகலா.ஆகிய வீர வேங்கைகள் தம் உயிர் தந்து ஈழ மண் காத்தனர்.

இன்றும் பருத்திதுறைக்கடல் எங்கள் வேங்கைகளின் வீரம் சொல்லி நிமிர்ந்து நிற்கிறது. அவர்கள் நினைவை சுமந்து... ஆனால் பகைவன் பாதங்களுக்கு கீழ் தவழும் வல்லாதிக்க சக்தியின் கப்பல்களையும் படகுகளையும் சுமந்து கொண்டு...

கவிமகன்.இ

0 Kommentare:

Kommentar veröffentlichen